TA/Prabhupada 0573 - நான் எந்த கடவுள் பிரக்ஞையாளருடனும் உறையாட தயாராயிருக்கிறேன்



Press Interview -- December 30, 1968, Los Angeles

பிரபுபாதா: இப்போது நான் போப்பிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். நீங்கள் அதைப் பார்த்தீர்களா? அந்தக் காகிதம் எங்கே?

ஹயக்ரீவா: இது இங்கே உள்ளது.

பத்திரிகையாளர்: ஓ, போப்பிற்கு ஒரு கடிதம். அதற்கு அவர் பதிலளித்தாரா?

பிரபுபாதா: இல்லை, எனக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. இது இந்தத் தாளில் உள்ளதா? இல்லை, இந்தத் தாளில் இல்லை. சமீபத்திய கடிதம் எங்கே? யார் அங்கே? சமீபத்திய ஒன்றைக் கொண்டு வரச் சொல்லுங்கள். சமீபத்திய ஒன்றைக் கொண்டு வாருங்கள், ஆம். எனவே நாங்கள் அந்தக் கடிதம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, எனக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அது எப்படி? [இடைவெளி ...]

பிரபுபாதா: அனைவருடனும் ஒத்துழைக்க விரும்புகிறேன், ஆனால் அவர்கள் மறுக்கிறார்கள். என்னால் என்ன செய்ய முடியும்? கடவுள் உணர்வுள்ள எந்த மனிதனுடனும் பேச நான் தயாராக இருக்கிறேன். மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியைச் செய்வோம். ஆனால் அவர்கள் தங்கள் சொந்த வழியில் செல்ல விரும்புகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வகை மதக் கொள்கையைப் பின்பற்றி, ஒருவர் தனது கடவுளின் அன்பை வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது முதல் தர மதம். ஆனால் ஒருவர் அசுரர்கள் அல்லது பணக்காரர்கள்மீது தனது அன்பை வளர்த்துக் கொண்டால், பின்னர் மதம் எங்கே?

பத்திரிகையாளர்: உண்மை.

பிரபுபாதா: (சிரிக்கிறார்) பாருங்கள்.அதுதான் எங்கள் சோதனை. நீங்கள் வளர்த்திருந்தால்... நீங்கள் கிறிஸ்தவம் அல்லது முகமதியம் அல்லது யூத மதம் அல்லது இந்து மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை - நாங்கள் அப்படி சொல்லவில்லை நீங்கள் கடவுளின் மீது அன்பை வளர்த்துக் கொண்டிருக்கிறீர்களா ஆனால் அவர்கள் மறுக்கிறார்கள், "ஓ, நான் கடவுள். யார் கடவுள்? நான் கடவுள்." நீங்கள் பார்க்கிறீர்களா? எல்லோரும் கடவுள் என்று இப்போதெல்லாம் அனைவருக்கும் கற்பிக்கப்படுகிறது. எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது என்று பாருங்கள். எல்லோரும் கடவுள். நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா?

பத்திரிகையாளர்: மெஹர் பாபா உங்களுக்குத் தெரியுமா?

பிரபுபாதா: அவரும் இன்னொரு மோசடி. எல்லோரும் கடவுள் என்று அவர் பிரசங்கிக்கிறார்.

பத்திரிகையாளர்: அவர் தானே கடவுள் என்று கூறுகிறார்.

பிரபுபாதா: அவர் கடவுள். பாருங்கள். இதுதான் நடக்கிறது.

பத்திரிகையாளர்: அவரை உங்களுக்குத் தெரியுமா?

பிரபுபாதா: நான் அவருடைய பெயரைக் கேட்டிருக்கிறேன். இத்தகைய நபர்களைப் பற்றி அறிவதில் நான் ஆர்வம் காட்டுவதில்லை. அவர் தன்னை கடவுள் என்று சில பிரச்சாரங்களைச் செய்கிறார்.

பத்திரிகையாளர்: அவர் நாற்பது ஆண்டுகளாக, நாற்பத்தைந்து ஆண்டுகளாகப் பேசவில்லை என்று கூறுகிறார். பிரபுபாதா: அப்படியானால் கடவுள் என்றால் என்ன என்று மக்களுக்குத் தெரியவில்லை. நான் உங்களிடம், நான்தான் ஜனாதிபதி ஜான்சன் என்று சொன்னால், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்வீர்களா?

பத்திரிகையாளர்: இல்லை (சிரிக்கிறார்) நான் நம்புவேன் என்று நான் நினைக்கவில்லை.

பிரபுபாதா: ஆனால் இந்த மக்கள், அயோக்கியர்கள், இவரைக் கடவுளாக ஏற்றுக்கொள்வார்கள். கடவுள் என்றால் என்ன என்று அவர்களுக்குத் தெரியாது. அதுதான் குறைபாடு. கடவுள் என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியும், ஆகவே தன்னைக் கடவுள் என்று அறிவிக்கும் எந்தவொரு அயோக்கியரையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதுதான் வித்தியாசம்.

பத்திரிகையாளர்: ஆம், யாரோ ஒருவர் வந்து அவர் தன்னை கடவுள் என்று சொல்லி கொள்வது முற்றிலும் அபத்தமானது.

பிரபுபாதா: ஆனால் அவரைக் கடவுளாக ஏற்றுக்கொள்பவன் எத்தகைய அயோக்கியன். அயோக்கியர்களில் முதன்மையானவன். அவர் ஒரு ஏமாற்றுக்காரர், யார் ஒருவர் ஏமாற்றப்படுகிறாரோ அவர் மற்றொரு அயோக்கியன். கடவுள் என்றால் என்ன என்று அவருக்குத் தெரியாது. யார் வேண்டுமானாலும் கடவுளாக வருகிறார்கள். சந்தையில், எல்லா இடங்களிலும் கிடைப்பது போலக் கடவுள் மிகவும் மலிவானவராக மாறிவிட்டார்

பத்திரிகையாளர்: நிச்சயமாக மனிதன் கடவுளின் உருவத்தில் படைக்கப்படுகிறான் என்பது மேற்கத்தியர்களின் கருத்து. இதன் விளைவாகக் கடவுள் மனிதனைப் போன்றவராக இருக்க வேண்டும், எனவே எந்த மனிதனும் கடவுளாக இருக்க முடியும்.

பிரபுபாதா: அது சரி. உங்களிடம் பல விஞ்ஞானிகள் உள்ளனர். கடவுளின் உருவம் என்ன என்பதைக் கண்டுபிடிக்கவும். அவருக்கு வடிவம் இல்லையா ... அந்தத் துறை எங்கே? உங்களிடம் அத்தகைய துறை இல்லை. உங்களிடம் பல துறைகள் உள்ளன. தொழில்நுட்பத் துறை, இந்தத் துறை, அந்தத் துறை என்று உள்ளன. கடவுள் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வதற்காகத் துறை எங்கே? அறிவுத் துறை ஏதேனும் உள்ளதா?

பத்திரிகையாளர்: எனக்குத் தெரியாது ... கடவுளுக்கான எந்தத் துறையும் வேலை செய்யவில்லை. நான் இப்போது அதை உங்களுக்குச் சொல்கிறேன்.

பிரபுபாதா: அதுதான் சிரமம். இங்கே கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது கடவுளை எவ்வாறு அறிவது என்பது பற்றிய அறிவுத் துறை ஆகும். பின்னர், நீங்கள் எந்தவொரு அயோக்கியரையும் கடவுளாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள், நீங்கள் கடவுளை மட்டுமே கடவுளாக ஏற்றுக்கொள்வீர்கள். (முடிவு)