TA/Prabhupada 0574 - அனுமதியின்றி உடம்பை கொல்லலாகாது - அது பாவமாகும்



Lecture on BG 2.19 -- London, August 25, 1973

"ஆத்மாவுக்கு ஒருபோதும் பிறப்போ மரணமோ இல்லை. எந்த ஒரு காலத்திலும், ஒருபோதும் அவனுக்கு அழிவு இல்லை. அவன் பிறக்காதவன், நித்தியமானவன், எப்போதும் இருப்பவன், அழியாதவன் மற்றும் பழமையானவன். உடல் கொல்லப்படும்போதும் அவன் கொல்லப்படுவதில்லை. எனவே, வெவ்வேறு வழிகளில் ஆத்மா எவ்வாறு அழியாதது என்பதை நம்ப வைக்கக் கிருஷ்ணர் முயற்சி செய்கிறார். வெவ்வேறு வழிகள். ய ஏனம் வேத்தி ஹந்தாரம்(பகவத் கீதை 2.19). சண்டை நடக்கும்போது, ​​ஒருவர் கொல்லப்பட்டால் அல்லது ... எனவே கிருஷ்ணர் சொல்கிறார் "இந்த மனிதன் இந்த மனிதனைக் கொன்றான்" என்று ஒருவர் நினைத்தால், அல்லது "இந்த மனிதனால் இந்த மனிதனைக் கொல்ல முடியும்," என்பது போன்ற அறிவு பூரணமானதல்ல. யாரும் யாரையும் கொல்வதில்லை. பின்னர் கசாப்பு கடைக்காரர்கள், "அப்படியானால் நாங்கள் கொலை செய்கிறோம் என்று ஏன் புகார் கூறுகிறீர்கள்?" என்று சொல்லலாம். அவர்கள் உடலைக் கொல்கிறார்கள். ஆனால் "நீ கொல்லக் கூடாது" என்ற கட்டளை இருக்கும்போது நீங்கள் கொல்ல முடியாது. அதாவது நீங்கள் அனுமதியின்றி உடலைக் கொல்ல முடியாது. உங்களால் கொல்ல முடியாது. ஆத்மா கொல்லப்படவில்லை என்றாலும், உடல் கொல்லப்படுகிறது, இருந்தாலும் கூட நீங்கள் அனுமதியின்றி உடலைக் கொல்ல முடியாது. அது பாவகரமானது. உதாரணமாக, ஒரு மனிதன் குடியிருப்பில் வசிக்கிறான். எனவே ஏதேனும் ஒரு வழியில் அவரை நீங்கள் அதிலிருந்து விரட்டுகிறீர்கள், சட்டவிரோதமாக, நீங்கள் அவரை விரட்டுகிறீர்கள். எனவே அந்த மனிதன் எங்காவது சென்று தஞ்சம் அடைவான். அது ஒரு உண்மை. ஆனால் நீங்கள் அவரை அவரது சொந்த இடத்திலிருந்து விரட்டியடித்ததால், நீங்கள் குற்றவாளி ஆவீர்கள். "நான் விரட்டியிருந்தாலும், அவருக்கு ஏதாவது இடம் கிடைக்கும்" என்று நீங்கள் சொல்ல முடியாது. இல்லை, அது சரி, ஆனால் அவரை விரட்ட உங்களுக்கு அதிகாரம் இல்லை. அவர் அவரது குடியிருப்பில் வசிப்பதற்கான சட்டபூர்வமான நிலையில் இருந்தார். நீங்கள் அவரை வலுக்கட்டாயமாக விரட்டியதால் நீங்கள் குற்றவாளி, நீங்கள் தண்டிக்கப்பட வேண்டும். எனவே இந்த வாதம் கசாப்பு கடைக்காரர்கள் அல்லது விலங்குக் கொலையாளிகள் அல்லது எந்த வகையான கொலையாளியாக இருந்தாலும் அவர்கள் இந்த வாதத்தை முன்வைக்க முடியாது. "இங்கே, ஆத்மா ஒருபோதும் கொல்லப்படுவதில்லை என்று பகவத்-கீதை கூறுகிறது. ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே (பகவத் கீதை 2.20) உடலை அழித்தபிறகும் கூட. எனவே, நாங்கள் கொலை செய்கிறோம் என்று நீங்கள் ஏன் புகார் செய்கிறீர்கள்?" எனவே இது தான் வாதம், நீங்கள் உடலைக் கூடக் கொல்ல முடியாது. அது அனுமதிக்கப்படவில்லை. அது பாவகரமானது. உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹன்யதே. எனவே யாரும் யாரையும் கொல்லவில்லை, மற்றவர்களால் யாரும் கொல்லப்படுவதுமில்லை. இது ஒரு விஷயம். மீண்டும், வேறு விதத்தில், கிருஷ்ணர் சொல்கிறார், ந ஜாயதே: ஆத்மாவானது ஒருபோதும் பிறப்பதில்லை. உடலுக்குத் தான் பிறப்பும் இறப்பும். ஆத்மா, ஆன்மீக பொறி, கிருஷ்ணரின் அம்சம் ஆகும். கிருஷ்ணர் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை, அஜோ 'பி ஸந்ன் அவ்யயாத்மா. நான்காவது அத்தியாயத்தில் நீங்கள் காணலாம். அஜோ பி. கிருஷ்ணர் அஜ. அஜ என்றால் ஒருபோதும் பிறக்காதவர் என்று பொருள். இதேபோல், நாம் கிருஷ்ணரின் அம்சமாக இருப்பதால், நாமும் ஒருபோதும் பிறப்பதில்லை. பிறப்பு மற்றும் இறப்பு இந்த உடலுக்குத் தான். நாம் வாழ்வின் உடல் சார்ந்த கருத்தில் மூழ்கி இருப்பதால், உடலுக்குப் பிறப்பு அல்லது இறப்பு ஏற்படும்போது நாம் இன்ப துன்பங்களை உணர்கிறோம். நிச்சயமாக இன்பம் இல்லை. பிறப்பு மற்றும் இறப்பு, இது மிகவும் துன்பகரமானது. ஏனெனில் ... அது ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது. ஆத்மாவின் உணர்வு உடல் முழுவதும் பரவி இருக்கிறது. ஆகையால், இந்த உடலின் காரணமாக இன்ப துன்பங்கள் உணரப்படும். எனவே கிருஷ்ணர் ஏற்கனவே அறிவுறுத்தியது இது போன்ற இன்பதுன்பம் மாத்ரா-ஸ்பர்ஷாஸ் து கௌந்தேய தோலைத் தொடுவது மட்டுமே, (பகவத் கீதை 2.14) இதற்காக ஒருவர் மிகவும் கவலைப்படக் கூடாது. தாம்ஸ் திதிக்ஷஸ்வ பாரத. இந்த வழியில் நாம் நமது நிலை, தன்னை உணர்தல், நாம் உடலிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறோம் என்பதைப் பற்றிச் சிந்தித்தால் ... உண்மையில், இது தான் தியானம். நம்மைப் பற்றியும் உடலைப் பற்றியும் நாம் மிகவும் தீவிரமாகச் சிந்தித்தால், அதுதான் தன்னை உணர்தல். தன்னை உணர்தல் என்றால் நான் இந்த உடல் அல்ல, நான் அஹம் ப்ரஹ்மாஸ்மி, நான் ஆத்மா. அதுதான் தன்னை உணர்தல்.