TA/Prabhupada 0578 - வெறுமனே கிருஷ்ணர் சொல்வதை பேசுங்கள்



Lecture on BG 2.19 -- London, August 25, 1973

எனவே நீங்கள் நிறுத்தினால், இந்தப் பிறப்பு இறப்பை நிறுத்த விரும்பினால், புலன்கள் திருப்தியில் ஈடுபட வேண்டாம். பின்னர் மீண்டும் சிக்கிக் கொள்வீர்கள்.

நூனம் ப்ரமத்த: குருதே விகர்ம
யத் இந்த்ரிய-ப்ரீதய ஆப்ருணோதி
ந ஸாது மன்யே யத ஆத்மனோ 'யம்
அஸன்ன் அபி க்லேஷத ஆஸ தேஹ:
(ஸ்ரீமத் பாகவதம் 5.5.4)

"சரி, இந்த உடல் சில காலத்திற்கு மட்டுமே, அது முடிவுக்கு வரும்." அது சரி. இது முடிவடையும், ஆனால் நீங்கள் மற்றொரு உடலை ஏற்க வேண்டி வரும். உடல், உடலை ஏற்றுக்கொள்வது, நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் ஏனென்றால் உங்களுக்குப் புலன்கள் திருப்தியில் ஆசை உள்ளது. எனவே புலன்கள் திருப்தி என்பது நீங்கள் திருப்தி அடைய புலன்கள் இருக்க வேண்டும். எனவே கிருஷ்ணர் மிகவும் கருணை வாய்ந்தவர். "சரி, இந்த அயோக்கியன் இதை விரும்புகிறான். அவனுக்கு இந்த வசதியைத் தருகிறேன். சரி. இந்த அயோக்கியன் மலம் சாப்பிட விரும்புகிறான். சரி. அவனுக்குப் பன்றியின் உடல் இருக்கட்டும்." இதுதான் நடக்கிறது, இயற்கையின் விதி.

எனவே இந்த அறிவு, பகவத் கீதையின் அறிவு, மனித சமுதாயத்திற்கு மிகவும் சரியானது. இந்த அறிவை பரப்ப வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்புகிறார். ஏனெனில் எல்லோரும், ஸர்வ-யோனிஷு கௌந்தேய ஸம்பவந்தி மூர்தய: (பகவத் கீதை 14.4) அவர் விதை கொடுக்கும் தந்தை. தந்தை இயல்பாகவே அதை விரும்புவார். இந்த அயோக்கியர்கள், அவர்கள் கஷ்டப்படுகிறார்கள், ப்ரக்ருதி-ஸ்தானி. மன: ஷஷ்டானீந்த்ரியாணி ப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி ((பகவத் கீதை 15.7) வெறுமனே, மன யூகத்தால் வழி நடத்தப்படுகிறார்கள், மன மற்றும் புலன்களோடு, அவர்கள் மிகவும் கடினமாகப் போராடுகிறார்கள். அவர்கள் என்னிடம் (கிருஷ்ணரிடம்) திரும்பி வந்தால் அவர்கள் மிகவும் நன்றாக வாழ முடியும். என் நண்பனாக, என் காதலனாக, என் தந்தையாக, என் அம்மாவாக, விருந்தாவனத்தில். எனவே மீண்டும் கூறுகிறார், அவர்களை அழைக்கிறார். "அது ... ஆகையால், கிருஷ்ணர் வருகிறார். யதா யதா ஹி தர்மஸ்ய (பகவத் கீதை 4.7) ஏனென்றால், முழு உலகமும் புலன் இன்பத்தின் தவறான எண்ணத்தின் கீழ் இயங்குகிறது. எனவே அவர் வந்து அறிவுறுத்துகிறார், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய: (பகவத் கீதை 18.66) அயோக்கியனே, இந்த ஈடுபாடுகளை எல்லாம் விட்டுவிடு. நீ விஞ்ஞான ரீதியாக முன்னேறியுள்ளேன் என்று பெருமைப்பட வேண்டாம். நீங்கள் அனைவரும் அயோக்கியர்கள். இந்த முட்டாள்தனத்தை கைவிடுங்கள். என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்குப் பாதுகாப்பு தருகிறேன். இதுதான் கிருஷ்ணர். அவர் எவ்வளவு கருணை வாய்ந்தவர். அதே போலக் கிருஷ்ணரின் சேவகனும் செய்ய வேண்டும். ஒரு சிறந்த யோகி, வித்தைக்காரனாக மாறக் கூடாது. இல்லை, அது தேவையில்லை. கிருஷ்ணர் சொல்வதை மட்டும் பேசுங்கள். பின்னர் நீங்கள் ஆன்மீக குரு ஆகிறீர்கள். முட்டாள்தனமாக எதுவும் பேச வேண்டாம். சைதன்யா மஹாபிரபு மேலும் கூறினார், யாரே தேக தாரே கஹ க்ருஷ்ண உபதேஷ (ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருத மத்திய 7.128) நீங்கள் யாரைச் சந்தித்தாலும் கிருஷ்ணரின் அறிவுறுத்தலைப் போதியுங்கள். பின்னர் நீங்கள் ஆன்மீக குரு ஆகிறீர்கள். அவ்வளவுதான். மிகவும் எளிமையான விஷயம்.

மிக்க நன்றி. (முடிவு)