TA/Prabhupada 0579 - நாம் ஆடைகளை மாற்றுவதைபோல ஆத்மா உடம்பை மாற்றுகிறது



Lecture on BG 2.21-22 -- London, August 26, 1973

பிரத்யும்ன: மொழிபெயர்ப்பு - "ஓ பார்தா, ஆன்மா அழியாதது, பிறக்காதது, நித்தியமானது மற்றும் மாறாதது, என்பதை அறிந்த ஒருவர் எப்படி யாரையும் கொல்ல முடியும் அல்லது யாரையும் கொல்ல காரணமாக இருக்க முடியும்?"

"ஒரு நபர் புதிய ஆடைகளை அணிந்துகொள்வது போல, பழையவற்றை விட்டுவிடுவது போல, இதேபோல், ஆன்மா புதிய சரீரங்களை ஏற்றுக்கொள்கிறது, பழைய மற்றும் பயனற்றவற்றை விட்டுவிடுகிறது.

எனவே இதை நம்புவதற்கான மற்றொரு வழி இது ... மிகவும் எளிமையான விஷயம். யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய. நம் ஆடைகள், கோட்டுகள் மற்றும் சட்டைகள்போல அவை பழையதாகி, ​​அழுகிய நிலையில், இனி பயன்படுத்த முடியாது, எனவே நாம் அதைத் தூக்கி எறிந்துவிட்டு ஒரு புதிய ஆடை, சட்டை, கோட் ஆகியவற்றைப் பெறுகிறோம். இதேபோல், ஆத்மா குழந்தை பருவத்திலிருந்தே, ஆடைகளை மாற்றுகிறது. ஒரு குழந்தைக்கு ஒரு காலணி கிடைத்துள்ளது. ஆனால் வளர்ந்த குழந்தையின் உடலைப் பெறும்போது, அந்தக் காலணி பொருந்தாது. நீங்கள் மற்றொரு காலணி பெற வேண்டும். இதேபோல், அதே குழந்தை வளரும்போது அல்லது உடலை மாற்றும்போது, ​​மற்றொரு காலணி தேவைப்படுகிறது. அதேபோல், ஆத்மா நாம் உடையை மாற்றுவது போலவே உடலை மாற்றிக் கொண்டிருக்கிறது. வாசாம்சி ஜீர்ணானி. ஜீர்ணானி என்றால், இது வயதான பிறகு ​​பயன்பாட்டிற்கு பொருந்தாது, யதா விஹாய, நாம் அதை விட்டுவிடுவது போல ... விஹாய என்றால் விட்டு விடுவது. நவானி, புதிய ஆடை. நர: அபராணி க்ருஹ்ணாதி. இப்போது உடல் இங்கே ஆடையாக ஒப்பிடப்பட்டுள்ளது. கோட் மற்றும் சட்டைபோல. தையல்காரர் உடலுக்கு ஏற்பக் கோட் வெட்டுகிறார். இதேபோல், இந்தப் பௌதீக உடல், அது சட்டை மற்றும் கோட் என்றால், இது ஆன்மீக உடலிற்கு ஏற்ப வெட்டப்படுகிறது. ஆன்மீக உடல் நிராகாரா, வடிவம் இல்லாமல் அல்ல. அது வடிவம் இல்லாமல் இருந்தால், ஆடை, கோட் மற்றும் சட்டைகளுக்குக் கை, கால்கள் எவ்வாறு கிடைத்தன? இது பொது அறிவு. கோட் கைகளைப் பெற்றுள்ளது, அல்லது பேண்டிற்கு கால்கள் கிடைத்துள்ளன. ஏனெனில் கோட் பயன்படுத்துபவருக்குக் கைக்கால்கள் உள்ளன.

ஆகவே ஆன்மீக உடல் மாயை அல்ல என்பதை இது நிரூபிக்கிறது. இது பூஜ்ஜியம் அல்ல, இதற்கு வடிவம் கிடைத்துள்ளது. ஆனால் வடிவம் மிகவும் நுணுக்கமானது, அணோர் அணீயான் மஹதோ மஹீயான்: வடிவம் அணுவைவிடச் சிறியதாக உள்ளது. அணோர் அணீயான் மஹதோ மஹீயான்: இரண்டு ஆன்மீக வடிவங்கள் உள்ளன. ஒன்று முழுமுதற்கடவுள் வடிவம், விராட்-ரூ பா, மஹதோ மஹீயான்: நம்முடைய வடிவம், அணோர் அணீயான், அணுவைவிடச் சிறியதாக உள்ளது. அது கதா உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. அணோர் அணீயான் மஹதோ மஹீயான் ஆத்மாஸ்ய ஜந்தோர் நிஹிதோ குஹாயாம். நிஹிதோ குஹாயாம்., குஹாயாம் என்பது இதயத்தில் என்று பொருள். இருவரும் இருக்கிறார்கள். இப்போது, இதை நவீன அறிவியல் கண்டுபிடிக்கட்டும். ஆத்மா மற்றும் பரமாத்மா, இவை இரண்டும் இதயத்திற்குள் அமைந்துள்ளன. ஈஷ்வர: ஸர்வ-பூதானாம் ஹ்ருத்-தேஷே (பா.கீ 18.61) ஹ்ருத் "உடலில் எங்கும் அது அமர்ந்திருக்கிறது" என்று கூறப்படவில்லை. இல்லை. ஹ்ருத்-தேஷே, இதயத்தில். உண்மையில், மருத்துவ அறிவியலில், உடலின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இதயம் மையமாகும் - அலுவலகம். மேலும் மூளை மேலாளராகும். கிருஷ்ணர் இயக்குனராக இருக்கிறார். அவர் மற்றொரு இடத்திலும் கூறுகிறார், ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்னிவிஷ்ட:. (BG 15.15) எல்லாம் தெளிவாக உள்ளது.