TA/Prabhupada 0586 - இந்த உடம்பை ஏற்றிருப்பது மரணமடைவதற்கு அல்ல



Lecture on BG 2.20 -- Hyderabad, November 25, 1972

எனவே இந்த வாழ்க்கையில் சில திட்டங்களை நாம் செய்கிறோம், என்னுடைய, இந்த உடல், இந்த உடல் முடிந்தது, அது இறந்துவிட்டது ஆனால் என் யோசனை, சூட்சும உடலில், மனதில், அது உள்ளது. அது என் மனதில் இருப்பதால், என் விருப்பத்தை நிறைவேற்ற நான் மற்றொரு உடலை ஏற்க வேண்டும். இது ஆத்மாவின் பரிமாற்ற விதி ஆத்மா, இவ்வாறு, தனது திட்டத்துடன், மற்றொரு உடலுக்கு மாற்றப்படுகிறது ஆத்மாவுடன், பரமாத்மா, முழுமுதற் கடவுள் இருக்கிறார் ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்னிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர் ஜ்ஞானம் அபோஹனம் ச (ப.கீ.15.15) ஆகவே, பரமாத்மா முழுமுதற் கடவுள், புத்திசாலித்தனத்தை அளிக்கிறார் இப்போது நீங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த விரும்பினீர்கள். இப்போது உங்களுக்கு பொருத்தமான உடல் கிடைத்துவிட்டது, அதை நீங்கள் செய்யலாம். " எனவே யாரோ ஒருவர் சிறந்த விஞ்ஞானி என்பதைக் காண்கிறோம். அல்லது மிக அருமையான மெக்கானிக் இதன் பொருள் என்னவென்றால், அவரது முந்தைய பிறப்பில், அவர் மெக்கானிக்காக இருந்தார், அவர் ஏதேனும் ஒரு திட்டத்தை உருவாக்கிக்கொண்டிருந்தார் இந்த வாழ்க்கை அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது, மேலும் அவர் தனது விருப்பத்தை நிறைவேற்றுகிறார் அவர் எதையாவது கண்டுபிடித்து மிகவும் புகழ்பெற்ற, பிரபலமான மனிதராக மாறுகிறார் ஏனெனில் கர்மிக்கள் மூன்று விஷயங்களை விரும்புகிறார்கள்: லாப - பூஜா - பிரதிஷ்டா அவர்கள் சில பொருள் லாபத்தை விரும்புகிறார்கள், மேலும் சில பொருள் விஷயங்களை விரும்புகிறார்கள் லாப - பூஜா - பிரதிஷ்டா மற்றும் ஸ்திரத்தன்மை. இது பொருள் வாழ்க்கை எனவே ஒன்றன் பின் ஒன்றாக, நாம் முயற்சிக்கிறோம் சில பொருள் லாபம், சில பொருள் வணக்கம், பொருள் நற்பெயர் எனவே நாம் பல்வேறு வகையான உடல்களைக் கொண்டிருக்கிறோம். அது தொடர்ந்து கொண்டிருக்கிறது உண்மையில் இந்த உடலை ஏற்றுக்கொள்வது நான் இறந்துவிடுவதாக அர்த்தமல்ல. நான் இருக்கிறேன். சூட்சும வடிவத்தில், நான் இருக்கிறேன். ந ஜாயதே ந ம்ரியதே. எனவே பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய கேள்வி இல்லை. இது வெறுமனே உடலின் மாற்றமாகும். வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய (ப.கீ 2.22)இது அடுத்த வசனத்தில் விளக்கப்படும்: வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய நவானி க்ருஹ்ணாதி நரோ 'பராணி ததா ஷரீராணி விஹாய ஜீர்ணான்யன்யானி ஸம்யாதி நவானி தேஹீ (பா.கீ 2.22) தேஹீ, வாழும் உயிரினங்கள் , ஆடையை மாற்றுகிறது இந்த உடல் ஒரு ஆடை இப்போது கேள்வி ... ஆவிக்கு எந்த வடிவமும் இல்லை என்று சில விவாதம் நடந்ததைப் போல. அது எப்படி இருக்க முடியும்? இந்த உடல் என் உடை என்றால், எனக்கு எப்படி வடிவம் இல்லை? ஆடை எப்படி வடிவம் பெற்றது? என் உடலுக்கு ஒரு வடிவம் கிடைத்ததால் எனது கோட் அல்லது சட்டைக்கு ஒரு வடிவம் கிடைத்துள்ளது எனக்கு இரண்டு கைகள் கிடைத்துள்ளன. எனவே என் உடை, என் கோட்டுக்கும் , இரண்டு கைகள் உள்ளன. என் சட்டைக்கும் இரண்டு கைகள் உள்ளன எனவே இது ஆடை என்றால், இந்த உடல், பகவத்-கீதையில் விவரிக்கப்பட்டுள்ளபடி வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய (ப.கீ 2.22) அது ஆடை என்றால், எனக்கு ஒரு வடிவம் இருக்க வேண்டும் இல்லையெனில் இந்த ஆடை எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? இது மிகவும் தர்க்கரீதியான முடிவு மற்றும் புரிந்து கொள்ள மிகவும் எளிதானது. எனது சொந்த வடிவம் எனக்கு கிடைக்காவிட்டால், எனது ஆடைக்கு எப்படி வடிவம் கிடைக்கும்? பதில் என்ன? யாராவது சொல்ல முடியுமா? கை, கால்கள் இல்லாமல் சுயமான உயிரினங்கள் எப்படி இருக்க முடியும்? இந்த உடல் என் உடை என்றால் ... நீங்கள் ஒரு தையல்காரரிடம் செல்வது போல. அவர் உங்கள் கையை, உங்கள் காலை, உங்கள் மார்பை அளவிடுகிறார் பின்னர் உங்கள் கோட் அல்லது சட்டை தயாரிக்கப்படுகிறது. இதேபோல், நீங்கள் ஒரு குறிப்பிட்ட வகை ஆடைகளைப் பெற்றபோது என் வடிவம், ஆன்மீக வடிவம் எனக்கு கிடைத்துள்ளது என்று கருத வேண்டும். இந்த வாதத்தை யாரும் மறுக்க முடியாது. நமது வாதம் என்று அழைக்கப்படுவதைத் தவிர, கிருஷ்ணர் கூறியதை நாம் ஏற்க வேண்டும். ஏனெனில், அவர் அதிகாரி