TA/Prabhupada 0585 - ஒரு வைணவன் பிறர் துக்கம் கண்டு தானும் துக்கப்படுவான்



Lecture on BG 2.20 -- Hyderabad, November 25, 1972

எனவே சூரிய கிரகத்தில் எந்த உயிரினமும் இல்லை என்று நினைப்பதைப் பற்றி கேள்வியே இல்லை. அந்த கிரகத்திற்கு ஏற்ற உயிரினங்கள் உள்ளன கோடீக்ஷூ வசுதா4தி-விபூ4தி-பி4ன்னம் என்று பிரம்ம-சம்ஹிதையிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். வசுதா4. வசுதா4 என்றால் கிரகம் என்று பொருள். ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் எண்ணற்ற கிரகங்கள் உள்ளன யஸ்ய பிரபா பிரபாவதோ ஜகத்-அன்ட-கோடி -கோடிஷ்வ அஷேஷா -வசுதா4தி-விபூ4தி-பி4ன்னம் (பிரம்ம சம்ஹிதை 5.40). இது ஒரு பிரபஞ்சம் மட்டுமே. கோடிக் கணக்கான பிரபஞ்சங்களும் உள்ளன. சைதன்ய மஹாபிரபுவிடம் அவரது பக்தர் ஒருவர் கேட்டபோது, "என் அன்பிற்குரிய பிரபுவே, நீங்கள் வந்துவிட்டீர்கள். தயவுசெய்து இந்த பந்தப்பட்டுள்ள ஆத்மாக்களை எல்லாம் எடுத்துச் செல்லுங்கள் அவர்கள் கொடூரமான பாவம் செய்தவர்கள், அவர்களை விடுவிக்க முடியாது என்று நீங்கள் நினைத்தால், எல்லா பாவங்களையும் என் மீது மாற்றுங்கள். நான் துன்பபடுகிறேன். நீங்கள் அவர்களை காப்பாற்றி எடுத்துச் செல்வது நல்லது. " இதுவே வைஷ்ணவ தத்துவம். வைஷ்ணவ தத்துவம் என்பது பர-துகா-துகி என்று பொருள். உண்மையில், ஒரு வைஷ்ணவன், மற்றவர்கள் கஷ்டப்படுவதைக் கண்டு தான் கஷ்டப்படுவார் தனிப்பட்ட முறையில், அவருக்கு எந்த துன்பமும் இல்லை. அவர் கிருஷ்ணருடன் தொடர்பு கொண்டிருப்பதால், அவர் எப்படி துன்பப்படுபவராக இருக்க முடியும்? தனிப்பட்ட முறையில், அவருக்கு எந்த துன்பமும் இல்லை. ஆனால் பந்தப்பட்டுள்ள ஆத்மாக்களை துன்பப்படுவதக் கண்டு அவர் துன்பப் படுகிறார். பர-துகா-துகி ஆகையால், வாசுதேவ கோஷ், அவர் சைதன்யா மஹாபிரபுவிடம் கோரினார் நீங்கள் இந்த மகிழ்ச்சியற்ற பந்தப்பட்ட ஆத்மாக்களை விடுவிக்கவும் அவர்கள் பாவமுள்ள மக்கள் என்று நீங்கள் நினைத்தால், அவர்களை விடுவிக்க முடியாது என்றால் இந்த மக்களின் எல்லா பாவங்களையும் என்னிடம் மாற்றவும். நான் துன்பபடுகிறேன், நீங்கள் அவர்களை அழைத்துச் செல்லுங்கள். " எனவே சைதன்ய மஹாபிரபு அவரது முன்மொழிவால் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், அவர் சிரித்தார். அவர் சொன்னார் "இந்த பிரம்மாண்டம் , பிரபஞ்சம், கடுகு விதைகளின் பையில் கடுகு தானியத்தைப் போன்றது. " நமது கருத்து என்னவென்றால், பல பிரபஞ்சங்கள் உள்ளன. ஒப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் ஒரு கடுகு பை எடுத்து ஒரு கடுகு தானியம் எடுத்து கடுகு விதைகளின் மூட்டையுடன் ஒப்பிடுகையில் இந்த ஒரு தானியத்தின் மதிப்பு என்ன? இந்த பிரபஞ்சம் அது போன்றது. பல பிரபஞ்சங்கள் உள்ளன நவீன விஞ்ஞானிகள், மற்ற கிரகங்களுக்கு செல்ல முயற்சிக்கின்றனர் அவர்கள் சென்றாலும்கூட, அதற்கான மதிப்பு என்ன? கோடிஷ்வ சேஷா -வாசுதாதி-விபூதி-பின்னம் (பிரம்ம சம்ஹிதை 5.40). உள்ளன. யாரும் பல கிரகங்களுக்கு செல்ல முடியாது அவர்களின் கணக்கீட்டின்படிகூட, அவர்கள் பிரம்மலோகம் என்று அறியப்படும் மிக உயர்ந்த கிரகத்திற்கு செல்ல விரும்பினால், அங்கு செல்ல ஒளி ஆண்டு கணக்கீட்டில் நாற்பதாயிரம் ஆண்டுகள் ஆகும். எனவே கடவுளின் படைப்பில் எல்லாம் வரம்பற்றது. இது நமது அறிவின் கண்ணோட்டத்தினால் எல்லைக்குட்படுத்தப்படுவதில்லை. எனவே ஏராளமான, எண்ணற்ற பிரபஞ்சங்கள், எண்ணற்ற கிரகங்கள் உள்ளன, மேலும் எண்ணற்ற உயிரினங்கள் உள்ளன. மேலும் அவை அனைத்தும் அவற்றின் கர்மாவுக்கு ஏற்ப சுழல்கின்றன. பிறப்பு மற்றும் இறப்பு என்றால் ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு மாறுவது. நான் இந்த வாழ்க்கையில் ஒரு திட்டத்தை உருவாக்குகிறேன் ... ஏனென்றால் எல்லோரும் உடல் சார்ந்த கருத்துடைய வாழ்க்கையில் உள்ளனர் நாம் உடல் சார்ந்த வாழ்க்கையின் கருத்தில் இருக்கும் வரை "நான் பிராஹ்மணன்," "நான் சத்திரியன்," "நான் வைசியன்," "நான் சூத்ரன்," "நான் இந்தியன்," "நான் அமெரிக்கன்," "நான் …... இவை அனைத்தும் உடல் சார்ந்த வாழ்க்கை கருத்து உடல் சார்ந்த வாழ்க்கையின் கருத்தில் இருக்கும் வரை, நான் நினைக்கிறேன், "நான் செய்ய வேண்டிய கடமை எனக்கு கிடைத்துள்ளது. பிராஹ்மணனாக , இதுபோன்ற மற்றும் பலவற்றை நான் செய்ய வேண்டியிருக்கிறது." "அமெரிக்கனாக, நான் பல விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது." இந்த உணர்வு தொடரும் காலம் வரை, நாம் மற்றொரு உடலை ஏற்றாக வேண்டும். இது இயற்கையின் செயல்முறை. அதுவரையில்..