TA/Prabhupada 0588 - உனக்கு எது தேவையோ அதனை கிருஷ்ணர் கொடுப்பார்



Lecture on BG 2.20 -- Hyderabad, November 25, 1972

எவ்வளவு காலம் ஒருவருக்கு சிறிதளவு ஆசை உள்ளதோ... "நான் பிரம்மனைப் போலவோ அல்லது ராஜாவைப் போலவோ, ஜவஹர்லால் நேருவைப் போல ஆகிவிட்டால்," எனக்கு ஆசை இருந்தால் நான் ஒரு உடலை ஏற்க வேண்டும். இந்த ஆசை…... கிருஷ்ணர் மிகவும் தாராளமானவர், மிகவும் கனிவானவர் நாம் எதை விரும்பினாலும் - யே யதா மாம் பிரபத்யந்தே (ப.கீ 4.11) - கிருஷ்ணர் உங்களுக்குக் கொடுப்பார் கிருஷ்ணரிடமிருந்து ஏதாவது எடுக்க கிறிஸ்தவர்கள் ஜெபிப்பதைப் போல, "கடவுளே, எங்கள் அன்றாட அப்பத்தை எங்களுக்குக் கொடுங்கள்". எனவே கிருஷ்ணர் நமக்கு கொடுப்பது மிகவும் கடினமான பணியா ...? அவர் ஏற்கனவே கொடுக்கிறார். அவர் அனைவருக்கும் தினசரி ரொட்டி கொடுக்கிறார் எனவே இது பிரார்த்தனை முறை அல்ல. அவர்களின் பிரார்த்தனை முறை ... சைதன்ய மஹாபிரபு சொன்னது போல, மம ஜன்மனி ஜன்மனீஷ்வரே பவதாத் பக்திர் அஹைதுகீ த்வயி (சை.சி அன்தியா 20.29, ஷிக்ஷாஷ்டக 4) இது பிரார்த்தனை. நாம் எதுவும் கேட்க வேண்டியதில்லை கடவுள், நம் பராமரிப்புக்கு போதுமான ஏற்பாடுகளை செய்துள்ளார் பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணம் ஏவாவஷிஷ்யதே (ஈஷோ பிராத்தனை) ஆனால் நாம் பாவம் செய்து இருக்கும்போது அது இயற்கையால் கட்டுப்படுத்தப்படுகிறது நாம் நாத்திகர்களாக மாறுகிறோம். நாம் அரக்கர்களாக மாறுகிறோம். பின்னர் வழங்கல் தடைசெய்யப்படுகிறது பின்னர் நாம் அழுகிறோம்: "ஓ, மழை இல்லை. இது இல்லை, அது இல்லை ..." அதுவே இயற்கையின் கட்டுப்பாடு. ஆனால் கடவுளின் ஏற்பாட்டிலிருந்து, அனைவருக்கும் போதுமான உணவு உள்ளது. ஏகோ பஹூனாம் விததாதி காமான் அவர் அனைவருக்கும் வழங்குகிறார் எவ்வளவு காலம் நமக்கு சிறிதளவு திட்டத்தை செயல்படுத்த ஆசை உள்ளதோ... நாம் ஒரு பொருள் உடலை ஏற்றுக்கொள்ள வேண்டும், அது ஜன்மா என்று அழைக்கப்படுகிறது இல்லையெனில், வாழும் உயிரினங்களுக்கு பிறப்பு மற்றும் இறப்பு இல்லை இப்போது, ​​இந்த ஜன்மா, மற்றும் மிருத்யு ... வாழும் உயிரினங்கள் அவை தீப்பொறிகளுடன் ஒப்பிடப்படுகின்றன மற்றும் முழுமுதற் கடவுள் பெரிய நெருப்புடன் ஒப்பிடப்படுகிறார் பெரிய நெருப்பு….அதுதான் ஒப்பீடு பெரிய தீ மற்றும் சிறிய தீப்பொறிகள், இரண்டுமே நெருப்பு தான் ஆனால் சில நேரங்களில் தீப்பொறிகள் பெரிய நெருப்பிலிருந்து கீழே விழுகின்றன அதுதான் நம் வீழ்ச்சி. வீழ்ச்சி என்றால் நாம் பொருள் உலகிற்கு வந்து விடுகிறோம் ஏன்? ரசிக்க, கிருஷ்ணரை போல…. கிருஷ்ணர் தலைமை அனுபவிப்பாளர் . எனவே நாம் சேவகர்கள் சில நேரங்களில் ... இது இயற்கையானது. "எஜமானரைப் போல நான் ரசிக்க முடிந்தால் ..." என்று சேவகன் விரும்புகிறான். எனவே இந்த உணர்வு அல்லது முன்மொழிவு வரும்போது, ​​அது மாயா என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் நாம் அனுபவிப்பவர்களாக இருக்க முடியாது. இது தவறானது இந்த பொருள் உலகில் கூட , நான் அனுபவிப்பவராக ஆக முடியும் என்று நான் நினைத்தால் அவர்கள், எல்லோரும் அனுபவிக்க முயற்சிக்கிறார்கள். மற்றும் அனுபவிப்பவருக்கு போடப்பட்ட கடைசி வலை ……... "இப்போது நான் கடவுளாகிவிடுவேன்" என்று ஒருவர் நினைப்பது தான் . இது ஒரு கடைசி வலையாகும் முதலில், நான் மேலாளர், அல்லது உரிமையாளர் ஆக விரும்புகிறேன். பின்னர் பிரதமர் பின்னர் இதுவும் அதுவும். எல்லாவற்றிலும் குழம்பும்போது "இப்போது நான் கடவுளாகிவிடுவேன்" என்று ஒருவர் நினைக்கிறார் அதாவது அதே முனைப்பு, எஜமானர் ஆவதற்கு, கிருஷ்ணரை பின்பற்றி, நடந்து கொண்டிருக்கிறது