TA/Prabhupada 0589 - நாம் இந்த பௌதிக வகைகளால் வெறுப்படைந்துள்ளோம்
Lecture on BG 2.20 -- Hyderabad, November 25, 1972
ஆகையால், கடவுளோடு நான் ஒன்றிணைய வேண்டும் என்று விருப்பம், நான் ஒன்றாகிவிடுவேன் … என்ற ஆசை எடுத்துக்காட்டாக, " நான் ஒரு துளி நீராவேன். இப்போது நான் சமுத்திரத்தோடு ஒன்றிணைவேன். எனவே நான் சமுத்திரமாக மாறிவிடுவேன் " இந்த எடுத்துக்காட்டு பொதுவாக மாயாவாத கொள்கையாளர்களால் வழங்கப்படுகிறது. நீரின் துளி, கடல் நீரில் கலக்கும்போது அவை ஒன்றாகிவிடும் அது கற்பனை மட்டுமே. ஒவ்வொரு நீரில், மூலக்கூறு உள்ளது, பல தனிப்பட்ட மூலக்கூறு பாகங்கள் உள்ளன அது தவிர, நீங்கள் தண்ணீரில் கலக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் ப்ரஹ்மம் எனும் சமுத்திரம், கடல் அல்லது பெருங்கடலில் கலக்கிறீர்கள். பின்னர் மீண்டும் நீங்கள் ஆவியாகி விடுவீர்கள், ஏனென்றால் நீர் கடலில் இருந்து ஆவியாகி மேகமாக மாறும் மீண்டும் தரையில் விழுந்து, அது மீண்டும் கடலுக்குச் செல்கிறது. இது தொடர்கிறது இது ஆகமன-கமன என்று அழைக்கப்படுகிறது, மீண்டும் மீண்டும் கலக்கிறது. அதனால் என்ன நன்மை? ஆனால் வைஷ்ணவ தத்துவம், நாம் தண்ணீருடன் கலக்க விரும்பவில்லை என்று கூறுகிறது; நாம் கடலுக்குள் ஒரு மீனாக மாற விரும்புகிறோம். அது மிகவும் அருமை ஒருவர் மீனாக மாறினால், பெரிய மீனாகவோ, சிறிய மீனாகவோ ... அது ஒரு பொருட்டல்ல நீங்கள் தண்ணீருக்குள் ஆழமாகச் சென்றால், அப்பொழுது ஆவியாதல் என்பது இல்லை. நீங்கள் இருப்பீர்கள் இதேபோல், ஆன்மீக உலகம், பிரஹ்ம ஜோதி, என்றால் ... நிர்பேத-பிரம்மானுசந்தி பிரஹ்ம ஜோதியில் ஒன்றிணைய முயற்சிப்பவர்கள், அவர்களுக்கு அது மிகவும் பாதுகாப்பானது அல்ல அது ஸ்ரீமத் பாகவதம் விமுக்த-மானின: என்று விளக்கப்பட்டுள்ளது. விமுக்த-மானின: "இப்போது நான் பிரம்ம ஜோதியில் இணைந்திருக்கிறேன், இப்போது நான் பாதுகாப்பாக இருக்கிறேன்" என்று அவர்கள் நினைக்கிறார்கள் இல்லை, அது பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் அது ஆருஹ்ய க்ருச்ச்ரேண பரம் பதம் தத: பதந்த்ய் (ஸ்ரீமத் பாகவதம் 10.2.32) என்று கூறப்படுகிறது பெரும் தவம் மற்றும் விரத்தத்திற்குப் பிறகு ஒருவர் உயரக்கூடும், பரம் பதம், பிரஹ்ம ஜோதியில் இணைதல். இருந்தாலும், அங்கிருந்து, அவர் கீழே விழுகிறார். அவர் கீழே விழுகிறார் ஏனெனில், பிரம்மன் ஆன்மீக ஆத்மாவான ஆனந்தமய மானது. கிருஷ்ணர் - முழுமுதற் கடவுள், ஆனந்த்மயோ ப்யாசாத் (வேதாந்த-சூத்திரம் 1.1.12) சத்-சித் - ஆனந்த - விக்ரஹ ( பிரம்ம சம்ஹிதை 5.1) எனவே வெறுமனே பிரம்மத்தில் ஒன்றிணைவதன் மூலம் ஒருவர் ஆனந்தமய நிலைக்கு மாற முடியாது நீங்கள் வானத்தில் மிக உயரமாக செல்வது போல எனவே வானத்தில் நிலைத்திருப்பது, அது மிகவும் ஆனந்தமயமல்ல. நீங்கள் ஏதேனும் ஒரு கிரகத்தில் தங்குமிடம் பெற முடிந்தால், அது ஆனந்தமய இல்லையெனில், நீங்கள் இந்த கிரகத்திற்கு மீண்டும் வர வேண்டும். எனவே நிர்விஷேஷ, பன்முகத் தன்மை இல்லாமல், எந்த ஆனந்தமும் இருக்க முடியாது. பன்முகத் தன்மை என்பது இன்பத்தின் தாய் எனவே நாம் முயற்சி செய்கிறோம் ... இந்த பௌதிக விஷ்யங்கள் மீது நாம் வெறுப்படைந்திருக்கிறோம். எனவே சிலர் இந்த வகைகளை பூஜ்ஜியமாக்க முயற்சிக்கிறார்கள், சிலர் இந்த வகைகளை அருவம் என்று சொல்ல முயற்சி செய்கின்றனர். ஆனால் அது நமக்கு சரியான உன்னத இன்பத்தை தராது நீங்கள் பிரம்ம ஜோதியில் சென்று கிருஷ்ணர் அல்லது நாராயணனிடம் அடைக்கலம் பெற முடிந்தால் ... பிரம்மஜோதியில் எண்ணற்ற கிரகங்கள் உள்ளன. அவை வைகுண்ட லோகங்கள் என்று அழைக்கப்படுகின்றன மேலும் முதன்மையான வைகுண்டலோகம் கோலோக வ்ருந்தாவனம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த கிரகங்களில் ஒன்றில் தஞ்சம் புகும் அதிர்ஷ்டம் உங்களுக்கு இருந்தால் அறிவின் ஆனந்த நிலையில் நீங்கள் என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் இல்லையெனில், வெறுமனே பிரம்மத்தில் ஒன்றிணைவது மிகவும் பாதுகாப்பானது அல்ல. ஏனென்றால் நாம் ஆனந்த நிலையை விரும்புகிறோம். எனவே அதற்கு மாறான அருவமான பூஜ்ஜிய தரத்தில் எந்த ஆனந்தமும் இருக்க முடியாது ஆனால் நம்மிடம் வைகுண்ட கிரகங்கள் பற்றிய எந்த தகவலும் இல்லாததால், மாயாவாத கொள்கையாளர்கள், அவர்கள் மீண்டும் இந்த பௌதிக கிரகங்களுக்கு வருகின்றனர் ஆருஹ்ய க்ருச்ச்ரேண பரம் பதம் தத: பதந்த்யத: (ஸ்ரீமத் பாகவதம் 10.2.32) அத: என்றால் பௌதிக உலகம். நான் பல முறை விளக்கியுள்ளேன். பல பெரிய, பெரிய சன்னியாசிகள் உள்ளனர் . அவர்கள் இந்த பௌதிக உலகத்தை மித்ய, ஜெகன் மித்யா என்று நினைத்து, கைவிடுகிறார்கள் சன்யாசம் ஏற்றுக்கொள்கிறார்கள், பின்னர் மீண்டும், சில நாட்களுக்குப் பிறகு, அவர்கள் சமூக சேவை, அரசியலுக்கு வருகிறார்கள் ஏனென்றால் பிரம்மம் என்றால் என்ன என்பதை அவர்களால் உணர முடியவில்லை. அவர்கள், ஆனந்த நிலைக்கு, அவர்கள் இந்த பௌதிக நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் ஏனென்றால் ஆனந்த... நமக்கு ஆனந்தமயோ 'பயாசத் வேண்டும் (வேதாந்த-சூத்ரம் 1.1.12). எனவே ஆன்மீக ஆனந்தம் இல்லை என்றால், அவர்கள் தாழ்ந்த தரத்திற்கு வர வேண்டும். இந்த பௌதிக உலகம் தாழ்ந்த தரமுடையது . அபரா ஆன்மீக ஆனந்தத்தை அல்லது உயர்ந்த இன்பத்தை நாம் பெற முடியாவிட்டால், இந்த பௌதிக இன்பத்தை நாட வேண்டியிருக்கும். ஏனென்றால் நமக்கு இன்பம் வேண்டும். எல்லோரும் இன்பத்தைத் தேடுகிறார்கள்