TA/Prabhupada 0590 - சுத்திகரிப்பு என்பது ஒருவன் தான் இந்த உடலல்ல - ஆத்மா என்று உணர்வதே ஆகும்



Lecture on BG 2.20 -- Hyderabad, November 25, 1972

ஆருஹ்ய க்ருச்ச்ரேண பரம் பதம் தத: பதந்த்யத: (ஸ்ரீமத் பாகவதம் 10.2.32) எனவே இந்த மகிழ்ச்சிக்காக மட்டுமே நாம் பல திட்டங்களை உருவாக்குகிறோம். நம் சொந்த மூளை, மிகச் சிறிய மூளைக்கு தோன்றுவது போல, நம் திட்டங்களை உருவாக்குகிறோம் மாநிலத்தில்கூட திட்டங்களை உருவாக்குவதைப் போல. தனிப்பட்ட முறையில், வணிக ரீதியாக எல்லோரும் திட்டத்தை உருவாக்குகிறார்கள் திட்டமிடுதல் என்பது பந்தப்படுத்துதல் என்பதாகும். அவர்கள் திட்டத்தை நிறைவேற்ற, மீண்டும் பிறக்க வேண்டும். வாசனா. இது வாசனா என்று அழைக்கப்படுகிறது. எனவே நாம் வாசனா, ஆசையை தூய்மைப்படுத்த வேண்டும், . அதுவே தேவைப்படுகிறது. நாம் தூய்மைப்படுத்தாவிட்டால், பிறப்பு, பிறப்பு மற்றும் இறப்பு, பிறப்பு மற்றும் இறப்பு என மீண்டும்மீண்டும் செய்ய வேண்டும். எனவே ஆசையை, எவ்வாறு தூய்மைப்படுத்த முடியும்? ஆசையை தூய்மைப்படுத்த முடியும். ஸர்வோபாதி-வினிர்முக்தம் தத்-பரத்வேன நிர்மலம் (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய 19.170) , "நான் பிராஹ்மணன்," "நான் சூத்ரன்," என்று அடையாளப்படுத்திக் கொள்வதை நாம் விட்டுவிட வேண்டும் "நான் சத்திரியன்," "நான் அமெரிக்கன்," "நான் இந்தியன்," "நான் இது மற்றும் ..." பல பட்டங்கள். ஏனென்றால் நான் ஆன்மீக ஆத்மா, ஆனால் இந்த அடையாளங்கள் என்னை மறைக்கின்றன. எனவே இந்த பட்டங்களுடன் நான் என்னை அடையாளப் படுத்திக் கொண்டால், நான் மீண்டும் பிறப்பு மற்றும் இறப்பில் இருக்க வேண்டும். நீங்கள் அதை தூய்மை படுத்திக் கொள்ள முடியும் . அதை எவ்வாறு தூய்மைப் படுத்திக் கொள்ளமுடியும்? பக்தி சேவையால் அதை தூய்மைப் படுத்திக் கொள்ளமுடியும். நீங்கள் கிருஷ்ணரின் அம்சம் என்பதை புரிந்து கொள்ளும்போது, "நான் கிருஷ்ணருடன் நித்தியமாக தொடர்புடையவன், அவர் முழுமுதற் கடவுள், நான் சேவகன்" என்று நான் புரிந்து கொள்ளும்போது அவருடைய சேவையில் நான் ஈடுபடும்போது, ​​அதுவே ஆசைகளின் தூய்மைப்படுத்துதல். கிருஷ்ண பக்தி இல்லாமல், எல்லாரும் வெவ்வேறு பௌதிக உணர்வில் செயல்படுகிறார்கள். "நான் அமெரிக்கன். எனவே நான் இந்த வழியில் செயல்பட வேண்டும். நான் ரஷ்யர்களுடன் போராட வேண்டும்." ரஷ்ய சிந்தனை என்பது "நான் ரஷ்யன், நான் அமெரிக்கர்களுடன் போராட வேண்டும்" அல்லது சீனா ... பல அடையாளங்கள். இது மாயை, மாயை என்று அழைக்கப்படுகிறது எனவே

நாம் தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டும். அந்த தூய்மைப் படுத்திக்கொள்ளதல் என்பது "நான் இந்த உடல் அல்ல." என்பதை ஒருவர் அறிந்திருக்க வேண்டும். நான் ஆன்மீக ஆத்மா. "அப்படியானால் நான் ஆன்மீக ஆத்மாவாக என்ன செய்கிறேன்? தற்போதைய தருணத்தில், வாழ்க்கையின் உடல் சார்ந்த கருத்தில் .நாம் என்ன செய்தாலும்.... ஆனால் ஆன்மீக ஆத்மாவாக நான் என்ன செய்கிறேன்? இந்த அறிவு தேவை. நாம் தூய்மை பெற்றால், இந்த அறிவு வருகிறது.

ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்நாத்மா
ந ஷோசதி ந காங்க்ஷதி
ஸம: ஸர்வேஷு பூதேஷு
மத்-பக்திம் லபதே பராம்
(பகவத் கீதை 18.54)

மத்-பக்திம் லபதே பராம். எப்பொழுது? இந்த பௌதிக அடையாளத்திலிருந்து விடுபட்ட பிறகு, பிரம்ம-பூத விடுபட்ட பின்னர்தான், அதற்கு முன் அல்ல. எனவே பக்தி என்பது வெறும் உணர்சிவயப்ப்டுதல் அல்ல. பக்தி ... மக்கள் சொல்கிறார்கள் "அதிகம் கற்காதவர்கள், வேத இலக்கியங்களை மிக நேர்த்தியாகப் படிக்க முடியாது, எனவே அவர்கள் பக்தியை ஏற்கிறார்கள்." இல்லை. பக்தி, உண்மையான பக்தி, ஒருவர் முற்றிலும் பிரம்ம-பூதவாக மாறும்போது தொடங்குகிறது

ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்நாத்மா
ந ஷோசதி ந காங்க்ஷதி
ஸம: ஸர்வேஷு பூதேஷு
மத்-பக்திம் லபதே பராம்
(பகவத் கீதை 18.54)

அது, பக்தி சேவையை நிறைவேற்றுவதற்கான தூய்மையான ஆழ்நிலை , பௌதிக அடையாளத்திலிருந்து விடுபட்ட பிறகு ...ஸர்வோபாதி-வினிர்முக்தம் தத்-பரத்வேன நிர்மலம் (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய 19.170) அது நிர்மலம் என்று அழைக்கப்படுகிறது. அது முக்தி. ஏனெனில் ஆன்மீக ஆன்மா நித்தியமானது. இந்த பௌதிக களங்கம் சுத்தப்படுத்தப்பட வேண்டும், எனவே அவர் தூய்மையாக இருக்கும் போது பின்னர் ஹ்ருஷீகேண ஹ்ருஷீகேஷ-ஸேவனம் பக்திர் உச்யதே (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.170) நமது புலன்கள் தூய்மைப் படுத்தப்படும்போது ... இது அமெரிக்க கை அல்லது இந்திய கை அல்ல. "இது கிருஷ்ணரின் கை. இந்த கை கோயிலை துடைப்பது போன்ற கிருஷ்ணரின் சேவையில் ஈடுபட வேண்டும்." அவர் இப்படி நினைத்தால், அவர் எந்த வேதாந்தியையும் விட மிக உயர்ந்தவர் "இந்த கை கிருஷ்ணருக்கு சொந்தமானது" என்று அவருக்கு வெறுமனே தெரிந்தால், அவர் எந்த வேதாந்தியை விடவும் மிக உயர்ந்தவர். இந்த வேதாந்திகள் ... நிச்சயமாக, அனைத்து பக்தர்களும், அவர்கள் வேதாந்திகள் ஆனால் வேதாந்தத்தை ஏகபோக உரிமை பெற்றதாக சிலர் நினைக்கிறார்கள் வேதம் என்றால் அறிவு. அந்தம் என்றால் இறுதி. எனவே வேதாந்தம் என்றால் இறுதி அறிவு என்று பொருள். எனவே கிருஷ்ணர் தான் இறுதி அறிவு. வேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்ய: (பகவத் கீதை 15.15) எனவே வேதாந்தி என்று அழைக்கப்படுபவர், கிருஷ்ணர் என்றால் என்ன என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியாவிட்டால், அந்த வேதாந்தியின் பொருள் என்ன? அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. "கிருஷ்ணர் முழுமுதற்கடவுள், அவர் என் இறைவன்" என்று அறிந்தவர் சரியான வேதாந்தி, நான் அவருடைய நித்திய சேவகன். இது தான் வேதாந்த அறிவு.

மிக்க நன்றி. ஹரே கிருஷ்ணா