TA/Prabhupada 0596 - ஆத்மா துண்டுகளாய் வெட்ட இயலாதது
Lecture on BG 2.23 -- Hyderabad, November 27, 1972
- யஸ்யைக-னிஷ்வஸித-காலம் அதாவலம்ப்ய
- ஜீவந்தி லோம-விலஜா ஜகத்-அண்ட-நாதா:
- விஷ்ணுர் மஹான் ஸ இஹ யஸ்ய கலா-விஷேஷோ
- கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி
- (BS 5.40)
எனவே இங்கே, ஆன்மீக புரிதலின் இந்த ஆரம்பம், அந்த ஆத்மா, உயர்ந்த ஆத்மாவை துண்டுகளாக வெட்ட முடியாது (பிரிக்க முடியாது) நைனம் சிந்தந்தி ஷஸ்த்ராணி நைனம் தஹதி பாவக: இப்போது புரிந்து கொள்ள முயற்சி செய்யவும். நாம் சிந்திக்கிறோம், நவீன விஞ்ஞானிகளும் சிந்திக்கிறார்கள் சூரியனில் எந்த உயிரும் இருக்க முடியாது என்று. இல்லை அங்கே உயிர் இருக்கிறது. உயிர் இருக்கிறது என்று வேத இலக்கியங்களிலிருந்து தகவல்களைப் பெறுகிறோம். நம்மைப் போன்ற மனிதர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நெருப்பால் ஆனவர்கள். அவ்வளவுதான் ஏனென்றால் நமக்கு மிக சிறிய அனுபவமே உள்ளதால், "நெருப்பில் ஒரு உயிர் எவ்வாறு வாழ முடியும்?" இந்த பிரச்சினைக்கு பதிலளிக்க, நைநம் தஹதி பாவக என்று கூறுகிறார் (பக்கமாய் :) ஏன் நீங்கள் அங்கே அமர்ந்திருக்கிறீர்கள்? நீ இங்கே வா. நைனம் தஹதி பாவக. ஆன்மீக ஆத்மாவை எரிக்க முடியாது அது எரிக்கப்பட்டிருந்தால், நமது இந்து முறையின்படி நாம் உடலை எரிக்கிறோம், பின்னர் ஆத்மா எரிகிறது உண்மையில், நாத்திகர்கள் அப்படி நினைக்கிறார்கள், உடல் எரியும் போது, எல்லாம் முடிந்துவிட்டது பெரிய, பெரிய பேராசிரியர்கள் அப்படி நினைக்கிறார்கள் ஆனால் இங்கே, கிருஷ்ணர் கூறுகிறார், நைநம் தஹதி பாவக (BG 2.23) "இது எரிக்கப்படவில்லை." இல்லையெனில், அது இன்னும் எவ்வாறு உள்ளது? ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே (பா.கீ 2.20). எல்லாம் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது ஆன்மா எரியாது; அதை துண்டுகளாக வெட்டவும் முடியாது பின்னர்: நா சைனம் அது கிலேதயந்தி ஆப (BG 2.23). ஈரமாகாது. இது தண்ணீரில் பட்டு ஈரமாகாது இப்போது பௌதிக உலகில் காண்கிறோம், எதையும், எவ்வளவு கடினமாக இருந்தாலும் கல் அல்லது இரும்பைப் போலவே, அதை துண்டுகளாக வெட்டலாம். இயந்திரம் அல்லது கருவி பிரிக்கப்படுகிறது. அதை வெட்டலாம் ... எதையும் துண்டுகளாக வெட்டலாம். எதையும் உருக்கலாம் இதற்கு வேறு வகையான வெப்பநிலை மட்டுமே தேவைப்படுகிறது, ஆனால் எல்லாவற்றையும் எரிக்கவும் உருக்கவும் முடியும். பின்னர் எதையும் ஈரப்படுத்தலாம், ஈரமாக்கலாம். ஆனால் இங்கே இது கூறப்படுகிறது ந சைனம் க்லேதயந்த்யாபோ ந ஷோஷயதி மாருத:: அதை ஆவியாக்க முடியாது. அதுவே நித்தியம் அதாவது எந்தவொரு பௌதிக சூழ்நிலையும் ஆன்மாவை பாதிக்காது. அஸங்கோ 'யம் புருஷ:.
வேதங்களில் எப்போதும் இந்த உயிர் பௌதிக உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது வெறுமனே ஒரு திரை. இது தொடர்பில் இல்லை எனது இந்த உடல் இருப்பது போன்றது. இது சட்டை மற்றும் கோட் மூலம் மூடப்பட்டிருந்தாலும், அது இணைக்கப்படவில்லை இது கலக்கப்படவில்லை. உடல் எப்போதும் தனித்தனியாக இருக்கும் இதேபோல், ஆன்மா எப்போதும் இந்த பௌதிக திரையிலிருந்து தனியாக வைத்து கொள்கிறது இது வெறுமனே பல்வேறு திட்டங்கள் மற்றும் ஆசைகளின் காரணமாக …. இந்த பௌதிக இயற்கையைக் கட்டுப்படுத்த செய்யும் பல்வேறு திட்டங்கள் மற்றும் ஆசைகளின் காரணமாக உள்ளது . எல்லோரும் பார்க்கலாம்