TA/Prabhupada 0602 - தந்தையே குடும்பத்தின் தலைவர் ஆவார்



Lecture on SB 1.16.21 -- Hawaii, January 17, 1974

இந்த கேள்வியை நான் பேராசிரியர் கோட்டோவ்ஸ்கியிடம் கேட்டேன். நான் அவரிடம் கேட்டேன் உங்கள் கம்யூனிஸ்ட் தத்துவத்திற்கும் எங்கள் கிருஷ்ண உணர்வு தத்துவத்திற்கும் இடையில் தத்துவத்தின் வேறுபாடு எங்கே? என்று லெனின் அல்லது ஸ்டாலின், ஒரு தலைவரை நீங்கள் ஏற்க வேண்டும் நாங்களும் ஒரு தலைவரைத் அல்லது கடவுளை தேர்ந்தெடுத்துள்ளோம் - கிருஷ்ணர் எனவே நீங்கள் லெனின், அல்லது ஸ்டாலின், அல்லது மோலோடோவ் போன்றவர்களின் அல்லது இது அல்லது அது - கட்டளைகளைப் பின்பற்றுகிறீர்கள். கிருஷ்ணரின் தத்துவத்தை அல்லது அறிவுறுத்தலை நாங்கள் பின்பற்றுகிறோம் எனவே கொள்கையின் அடிப்படையில், வித்தியாசம் எங்கே? எந்த வித்தியாசமும் இல்லை. " எனவே பேராசிரியரால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை ... வேறொருவரால் கட்டளையிடப்படாமல் உங்கள் அன்றாட விவகாரங்களை நீங்கள் நடத்த முடியாது அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

எனவே அது இயற்கையின் விதி. எனவே நித்யோ நித்யானாம் சேதனஷ் சேதனானாம் ( கத உபநிஷத் 2.2.13). பிறகு நீங்கள் ஏன் உச்ச அதிகாரத்தை ஏற்கக்கூடாது? இந்த கீழ்பணிந்த அதிகாரம் ... யாரையாவது நம் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும். தலைமை இல்லாமல் நாம் வாழ முடியும் என்பது சாத்தியமில்லை. அது சாத்தியமில்லை ஏதேனும் கட்சி இருக்கிறதா, ஏதேனும் பள்ளி இருக்கிறதா, அல்லது ஏதேனும் நிறுவனம் உள்ளதா? எந்தவொரு தலைமைத் தலைவரும் இயக்குநரும் இல்லாமல் அவர்கள் நடத்துகிறார்கள் என்று சொல்லும் நிலைக்கு? உலகம் முழுவதும் ஏதேனும் ஒரு நிகழ்வை எனக்குக் காட்ட முடியுமா? ஏதாவது உதாரணம் உண்டா? இல்லை. ... எங்கள் முகாமில் இருந்து யாரோ ஒருவர் வெளியேறிவிட்டதைப் போலவே, ஆனால் அவர் கௌரஸுந்தர அல்லது சித்த-ஸ்வரூப மஹாராஜாவை முதல்வராக ஏற்றுக்கொண்டார் நீங்கள் ஒரு முதல்வரை ஏற்க வேண்டும் என்பதே கொள்கை. ஆனால் புத்திசாலித்தனம் என்னவென்றால், எந்த வகையான தலைமையை நாம் ஏற்றுக்கொள்வோம் என்பது தான். அது அறிவு நாம் யாராவது ஒருவருக்கு கீழ்படியும்நிலைக்கு மாறவேண்டும், நாம் சேவகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவே புத்திசாலித்தனம் என்னவென்றால், "நாம் யாரை ஏற்க வேண்டும்?" அதில் புத்திசாலித்தனம் உள்ளது: "நாம் எந்த வகையான தலைவரை ஏற்றுக்கொள்வோம்?"

எனவே நம் கொள்கை என்னவென்றால், கிருஷ்ணரை தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் ஏனெனில் பகவத்-கீதையில் மத்த: பரதரம் நான்யத் கிஞ்சித் அஸ்தி தனஞ்ஜய (பகவத் கீதை 7.7) என்று கிருஷ்ணர் கூறுகிறார் மிக உயர்ந்த தலைவர். ஏகோ பஹு........நித்யோ நித்யானாம் சேதனஷ் சேதனானாம் ஏகோ யோ பஹூனாம் விததாதி ( கத உபநிஷத் 2.2.13) தலைவர் என்றால் அவர்…. தந்தையைப் போல இருக்க வேண்டும் தந்தை குடும்பத்தின் தலைவர். தந்தை ஏன் தலைவர்? அவர் சம்பாதிப்பதால், அவர் குழந்தைகள், மனைவி, வேலைக்காரன் மற்றும் ஸ்தாபனத்தை பராமரிக்கிறார்; எனவே இயற்கையாகவே, அவர் குடும்பத் தலைவராக ஏற்றுக்கொள்ள படுகிறார். இதேபோல், ஜனாதிபதி நிக்சனை உங்கள் நாட்டின் தலைவராக ஏற்றுக்கொள்கிறீர்கள் ஏனெனில் ஆபத்தான நேரத்தில் அவர் வழிநடத்துகிறார், சமாதான காலத்தில் அவர் வழிநடத்துகிறார் உங்களை எப்போதுமே சந்தோஷப்படுத்துவது எப்படி, எந்தவிதமான பதட்டம் இல்லாமல் செய்வது எப்படி, இது ஜனாதிபதியின் கடமை. இல்லையெனில், நீங்கள் ஏன் ஒரு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? எந்தவொரு மனிதனும் எந்த ஜனாதிபதியும் இல்லாமல் வாழ முடியும், ஆனால் இல்லை, அது தேவை எனவே

இதேபோல், வேதம் கூறுகிறது, நித்யோ நித்யானாம் சேதனஷ் சேதனானாம். இரண்டு வகை உயிரினங்கள் உள்ளன. ஒன்று ... இருவரும் நித்ய. நித்ய என்றால் நித்தியம் என்று பொருள் மற்றும் சேதனா என்றால் உயிர்வாழி என்று பொருள். எனவே நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் இது கடவுள் பற்றிய விளக்கம், கடவுள் உங்களையும் என்னையும் போன்ற ஒரு உயிர்வாழி. அவரும் உயிர்வாழி. நீங்கள் கிருஷ்ணரைப் பார்ப்பது போல. கிருஷ்ணருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அவருக்கு இரண்டு கைகள் உள்ளன; உங்களுக்கு இரண்டு கைகள் கிடைத்துள்ளன. அவருக்கு ஒரு தலை கிடைத்துள்ளது; உங்களுக்கு ஒரு தலை கிடைத்துவிட்டது. உங்களுக்கு ..... அவருக்கு இரண்டு கால்கள் உள்ளன; உங்களுக்கு இரண்டு கால்கள் கிடைத்துள்ளன. நீங்கள் சில மாடுகளை வைத்து அவற்றுடன் விளையாடலாம்; கிருஷ்ணரும்கூட ஆனால் வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசம் என்ன? ஏகோ யோ பஹூனாம் விததாதி காமான். அந்த ஒரு கிருஷ்ணர் அவர் உங்களுடன் பல வழிகளில் ஒத்திருந்தாலும், ஆனால் ஒரு வித்தியாசம் இருக்கிறது - அவர் நம் ஒவ்வொருவரையும் பராமரிக்கிறார், நாம் பராமரிக்கப்படுகிறோம் அவர்தான் தலைவர். கிருஷ்ணர் உங்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கவில்லை என்றால், உங்களிடம் எந்த உணவுப்பொருட்களும் இருக்க முடியாது கிருஷ்ணர் உங்களுக்கு பெட்ரோல் வழங்கவில்லை என்றால், உங்கள் காரை ஓட்ட முடியாது. எனவே ஏகோ பஹூனாம் யோ விததாதி. வாழ்க்கையின் தேவைகள் எதுவாக இருந்தாலும். நமக்கு பல விஷயங்கள் தேவை- அது 'ஏகா' வால் வழங்கப்படுகிறது. அந்த ஒரு உயிரினம் அதுதான் வித்தியாசம். ஒரு சிறிய குடும்பத்தைக்கூட நாம் பராமரிக்க முடியாது, நம் திறன் மிகவும் குறைவாகவே உள்ளது. தற்போதைய தருணத்தில் குறிப்பாக, இந்த வயதில், ஒரு மனிதன் திருமணம் செய்ய விரும்புவதில்லை ஏனெனில் அவனால் ஒரு குடும்பம், மனைவி மற்றும் குழந்தைகளை கூட பராமரிக்க முடியவில்லை. நான்கு அல்லது ஐந்து உயிர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தைக் கூட அவரால் பராமரிக்க முடியாது.