TA/Prabhupada 0610 - வர்ணாஷ்ரம பயிலகத்தில் ஒருவன் இணையாதவரையில் அவன் மனிதனாகமாட்டான்
Lecture on BG 7.1 -- Calcutta, January 27, 1973
ஊக செயல்முறையால் கிருஷ்ணரை (கடவுளை) அறிய விரும்பினால் ஒரு வருடம் மட்டுமல்ல, இரண்டு வருடங்களும் மட்டுமல்ல... பந்தாஸ் து கோடி-ஷத-வத்ஸர-ஸம்ப்ரகம்யோ வாயோர் அதாபி. மன ஊகம் அல்ல, ஆனால் வாயுவின், அல்லது காற்றின் அல்லது மனதின் வேகத்தில் இயங்கும் விமானத்தில் மனதின் வேகத்தில், அப்போது கூட, பல கோடி ஆண்டுகள் சென்றாலும், நீங்கள் அடைய முடியாது. இன்னும், அது அவிசிந்திய - சிந்தனைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. ஆனால், இந்த -கிருஷ்ணயோகா (பக்தி-யோகா) செயல்முறையை ஏற்றால், கிருஷ்ணரை மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். பக்த்யா மாம் அபிஜாநாதி யாவான் யஷ் சாஸ்மி தத்த்வத: (BG 18.55). கிருஷ்ணரை மேலோட்டமாக புரிந்து கொள்வது போதுமானதன்று. அதுவும் நல்லதே, ஆனால், உண்மையில் கிருஷ்ணர் என்றால் என்ன, தத்வதஹ புரிந்து இருக்க வேண்டும், அந்த அறிவை அடைய முடியும் - பக்த்யா, இந்த கிருஷ்ண-யோகாவால். மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு, கஷ்சித் யததி ஸித்தயே, யததாம் அபி ஸித்தானாம், கஷ்சின் மாம் வேத்தி தத்த்வத: (BG 7.3) உலகம் முழுவதும் ஏராளமான மனிதர்கள் உள்ளனர். பெரும்பாலும், அவர்கள் விலங்குகளைப் போன்றவர்கள் - கலாச்சாரம் இல்லாமல். ஏனென்றால், எமது வேத கலாச்சாரத்தின்படி, வர்ண மற்றும் ஆஷ்ரம அமைப்பை பின்பற்றாதவர், ஒரு மனிதர் அல்லர். அப்படிப்பட்டவர் ஏற்கப்படுவதில்லை. எனவே, கிருஷ்ணர், மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு. என்கிறார். இந்த வர்ணாஸ்ரமத்தை யார் ஏற்றுக்கொள்கிறார்கள்? யாரும் இல்லை. குழப்பமான நிலை. எனவே, அந்த குழப்பமான நிலையில் கடவுள் என்றால் என்ன (கிருஷ்ணர் என்றால் என்ன) என்பதை புரிந்து கொள்ள முடியாது. எனவே, கிருஷ்ணர், மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு என்கிறார். பல்லாயிரக்கணக்கான, பல கோடிக்கணக்கானோரில், ஒருவர் வர்ணாஸ்ரம-தர்ம விஞ்ஞான அமைப்பை பின்பற்றுகிறார். அதாவது, உறுதியாக வேதங்களைப் பின்பற்றுபவர்கள். இவர்களில் வேதக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள், பெரும்பாலும் கர்ம-காண்ட (சடங்கு விழாக்கள்) மீது பற்றுதல் கொண்டுள்ளனர். சடங்கு விழாவில் ஈடுபட்டுள்ள பல கோடி நபர்களில் ஒருவர் அறிவில் முன்னேறுகிறார். அவர்கள் ஞானிகள் அல்லது ஊக தத்துவவாதிகள் எனப்படுகிறார்கள். கர்மிகள் அல்ல, ஞானிகள். இதுபோன்ற கோடிக்கணக்கான ஞானிகளில், ஒருவர் முக்தி பெற்று, விடுவிக்கப்படுகிறார். ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்நாத்மா ந ஷோசதி ந காங்க்ஷதி (BG 18.54). இது முக்தியடைந்த நிலை. பிரம்மத்தை உணர்ந்த ஆத்மா, புலம்புவதற்கோ ஏங்குவதற்கோ ஒன்றுமில்லை. ஏனெனில், கர்மி நிலையில் எமக்கு இரண்டு நோய்கள் உள்ளன: ஏக்கம் மற்றும் புலம்பல். எது இருந்தாலும், அது இழக்கப்பட்டுவிட்டால், உடனே புலம்பல்தான். "ஓ, எனக்கு இது இருக்கிறது, அது இருக்கிறது, இப்போது அது இழக்கப்பட்டுவிட்டது. " எம்மிடம் எது இல்லையோ, அதன் பின் நாம் அலைகிறோம். எனவே, ஒன்றை வைத்திருப்பதற்காக, நாம் ஏங்குகிறோம், மிகவும் கடினமாக உழைக்கிறோம். அது இழக்கப்படும்போது, நாம் மீண்டும் புலம்புகிறோம், அழுகிறோம். இது கர்மி நிலை. ப்ரஹ்ம-பூத: நிலை... ஞான நிலை என்றால் இனி புலம்பலோ ஏக்கமோ கிடையாது. பிரசன்னாத்மா. "ஓ, நான், அஹம் பிரம்மாஸ்மி. இந்த உடலை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும்? திவ்விய ஞானத்தை வளர்ப்பதே எனது வேலை, பிரம்ம-ஞானம்" எனவே அந்த நிலையில், ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்நாத்மா ந ஷோசதி ந காங்க்ஷதி ஸம: ஸர்வேஷு பூதேஷு (BG 18.54). அதுதான் சோதனை. அவருக்கு எந்தவிதமான புலம்பலும் இல்லை, எந்தவிதமான ஏக்கமும் இல்லை. அத்துடன், அவர் அனைவருக்கும் சமம். பண்டிதா: ஸம-தர்ஷின:. வித்யா-வினய-ஸம்பன்னே, ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி, ஷுனி சைவ ஷ்வ-பாகே ச, பண்டிதா: ஸம-தர்ஷின: (BG 5.18) அவருக்கு எந்த பாகுபாடும் இல்லை. எனவே, இந்த வழியில், ஒருவர் நிலைத்திருக்கும் போது, மத்-பக்திம் லபதே பராம் (BG 18.54), பின்னர் அவர் பக்தியின் தளத்திற்கு வருகிறார். அவர் பக்தியின் தளத்திற்கு வரும்போது, பக்த்யா மாம் அபிஜாநாதி யாவான் யஷ் சாஸ்மி தத்த்வத: (BG 18.55), பின்னர் அவரால் முடியும்.