TA/Prabhupada 0611 - நீங்கள் சேவையுணர்வை இழந்துவிட்டால் - இந்த கோவில் ஒரு கிடங்காக மாறிவிடும்
Lecture on SB 1.7.27 -- Vrndavana, September 24, 1976
குறைந்தபட்சம், இந்தியர்களான நாமாவது , அப்படி பயிற்சி பெற்றுள்ளோம். பயிற்சி பெற்றவர்கள் மட்டுமல்ல, நாம் பிறந்ததிலிருந்தே பக்தர்கள்தான். இந்தியாவில் பிறந்த எவருக்கும், அது சிறப்பு வசதி. அவர்களின் முந்தைய பிறவியில், பல தவங்களை செய்துள்ளனர். தேவர்கள் கூட, இந்த வாய்ப்பைப் பெற இந்தியாவில் பிறக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். இந்தியா என்று நினைத்துவிடாதீர்கள்... இந்தியா என்றால் இந்த கிரகம் பாரதவர்ஷம்.. நல்ல வாய்ப்பு உள்ளது. எனவே நாம் நினைக்கலாகாது- "ஒரு கற்சிலை" என்று, அப்படி நினைத்தால், அது பல நாட்கள் நீடிக்காது. அது நீடிக்காது... கலக்ரஹ. இனி விக்ரஹ இல்லை, கலக்ரஹ. நான் இந்த கோவிலை நிறுவினேன் என்று வைத்துக்கொள்வோம். இப்போது, என் வழிகாட்டுதலின் கீழ், என் சீடர்கள் விக்ரஹத்தை வழிபடுகிறார்கள். விக்ரஹ என்றால் பகவானின் வடிவம், ரூப. ஆனால், நியம விதிகளை பின்பற்றவில்லை என்றால், என் மரணத்திற்குப் பிறகு அது கலக்ரஹ ஆகி விடும், ஒரு சுமை, "எங்கள் அயோக்கிய குரு மஹராஜர் இந்த கோவிலை நிறுவினார், நாங்கள் வழிபட வேண்டியுள்ளது, அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும், அனைத்தும் தொந்தரவே. "இப்படி இருக்கும்... அது கலக்ரஹ எனப்படுகிறது, ஒரு சுமை, "அவர் எங்களுக்கு ஒரு சுமையை விட்டுச் சென்றுள்ளார்." இதுவே அபாயம். பிறகு, இந்த பெரியதொரு கோயில் தவறாக நிர்வகிக்கப்படும், "இது சீர்குலைகிறது" என்பதை நீங்களே காண்பீர்கள். "இது அசுத்தமானது", அத்துடன் கவனிப்பே இல்லை. இதுவே எமது... அது கலக்ரஹ எனப்படுகிறது: "அந்த அயோக்கியன் எமக்கு ஒரு சுமையை தந்துள்ளான்." எனவே, இது மிகவும் கடினமானது. "கிருஷ்ணர் இங்குள்ளார். அவருக்கு சேவை செய்ய இங்கே ஒரு வாய்ப்புண்டு..." என்ற உணர்வை நாம் இழந்துவிட்டால். ஸாக்ஷாத்-தரித்வேன ஸமஸ்த-ஷாஸ்த்ரை: ... அது இல்லை. ஸ்ரீ-விக்ரஹாராதன-நித்ய-நானா-ஷ்ருங்கார-தன்-மந்திர-மார்ஜநாதௌ. எனவேதான், நாம் மிகவும் விழிப்புடன் இருக்கிறோம், "நீங்கள் ஏன் இதை செய்யவில்லை? ஏன் இதை செய்வதில்லை? ஏன்...?" பக்தித் தொண்டின் பாவத்தை இழந்தவுடன், இந்த கோயில் ஒரு சுமையாகிவிடும். இப்படிதான். நிர்வகிக்க இது ஒரு பெரிய கோயில் போன்று தோன்றும், இது ஒரு பெரிய சுமையாக இருக்கும். எனவே, அவர்கள் சுமையை உணர்கிறார்கள். எனவே, சிலவேளை எங்காவது உடைந்துவிட்டாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை. "சரி, ஏதொ நம்மிடம் இருக்கும் பணத்தில், முதலில் நாம் சாப்பிடுவோம்." இதுதான் நிலை. விக்ரஹ, கலக்ரஹ. இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். "இங்கே ஸ்வயம் கிருஷ்ணரே வீற்றுள்ளார் என்பதை நாம் மறந்துவிட்டால். நாம் அவரை மிக நேர்த்தியாக கவனிக்க வேண்டும். அவருக்கு சிறந்த உணவு, சிறந்த உடை, அருமையான... "என்று கொடுக்க வேண்டும். அப்போது அது சேவையாகிறது. "ஒரு கற்சிலை" என்ற உணர்வு வந்தவுடன் - சிலர் சில சமயங்களில் "சிலை வழிபாடு" என்று கூறுகிறார்கள்" - "அவருக்கு வஸ்திரங்களை சாற்றவும், அவருக்குக் கொடுக்கவும்... எமக்கு அறிவுருத்தப்பட்டிருக்கிறது. எல்லாம் தொந்தரவே." பின்னர் முடிந்தது. அது எல்லா இடங்களுக்கும் வந்துவிட்டது. நான் நாசிக் நகரில் பற்பல பெரிய கோயில்களில் பார்த்துள்ளேன், அங்கு எந்த பூசகரும் இல்லை, நாய்கள் அங்கு மலம் கழிக்கின்றன. உடைவது மட்டுமல்ல. மேற்கத்திய நாடுகளிலும் தேவாலயங்கள் மூடப்படுகின்றன. பெரிய பெரிய தேவாலயங்கள், லண்டனில் நான் பார்த்திருக்கிறேன், பென்னம்பெரிய தேவாலயங்கள், ஆனால் அவை மூடப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை கூட்டம் இருக்கும்போது, பராமரிப்பாளரும், இரண்டு மூன்று ஆண்களும், சில வயதான பெண்மணிகளும்தான் வருகிறார்கள். யாரும் வருவதில்லை. அத்துடன் நாம் வாங்குகிறோம். நாம் பல தேவாலயங்களை வாங்கியுள்ளோம். ஏனெனில், அது இப்போது பயனற்றதாகியுள்ளது. லாஸ் ஏஞ்சலிஸில் நாம் வாங்கியுள்ளோம், மேலும் சிலவற்றையும். டொராண்டோவில், சமீபத்தில் நாம் வாங்கியுள்ளோம். பெரிய, பெரிய தேவாலயங்கள். ஆனால், அவர்கள் நமக்கு விற்க மாட்டார்கள். ஒரு தேவாலயம், பாதிரியார் கூறினார் "நான் இந்த தேவாலயத்திற்கு தீ வைப்பேன், ஆனால், பக்திவேதாந்த சுவாமிக்கு மட்டும் நான் கொடுக்கவே மாட்டேன்." (சிரிப்பு) இந்த டொராண்டோ தேவாலயமும் அப்படித்தான் இருந்தது. மெல்போர்னில், இந்த தேவாலய கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்பதே விற்பனைக்கான நிபந்தனை. நாங்கள், "ஏன்?" என்று கேட்டோம். அவர், " கோயிலாகப் பயன்படுத்தினால், நாங்கள் உங்களுக்குக் கொடுக்க மாட்டோம்" என்றார். அவர்கள் மறுத்துவிட்டார்கள். அது தெரியுமா? அவர்கள் "இந்த கிருஷ்ண பக்தி இயக்கம், எங்கள் தேவாலயங்களை வாங்கி ராதா-கிருஷ்ண திருவிக்கிரகங்களை நிறுவும்." என்பதை விரும்பவில்லை. அவர்களுக்கு அது பிடிக்கவில்லை. ஆனால் அது நடப்பதில்லை. எனவே, மேற்கத்திய நாடுகளில் உள்ள தேவாலயங்களில் மட்டுமல்ல; இங்கும்தான். சேவை உணர்வை இழந்தவுடன், இந்த கோயில் ஒரு பெரிய கிடங்காக மாறும், அவ்வளவுதான். கோயிலாக இருக்காது. எனவே, அந்த சேவை உணர்வை நாம் பராமரிக்க வேண்டும். எனவேதான், நாம் மிகவும் குறிப்பாகவுள்ளோம் - "புதிய மலர் ஏன் இல்லை?" "ஒரு கற்சிலை என்று நினைத்தால் புதிய மலராயிருந்தால் என்ன பழைய மலராயிருந்தால் என்ன? நாம் கொஞ்சம் மலர் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான்." "கிருஷ்ணர் இங்குள்ளார். நாம் புதிய மலர் கொடுக்க வேண்டும்." என்ற உணர்வெல்லாம் இல்லை. எப்படியென்றால், நான் ஒரு உயிருள்ள மனிதன், எனக்கு ஒரு புதிய பூவைக் கொடுத்தால், இல்லாவிட்டால் கொஞ்சம் குப்பைகளைக் கொண்டு வந்தால், நீங்கள் எனக்குக் கொடுத்தால், நான் மகிழ்ச்சியடைவேனா? நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா? தொடக்கத்தில் கூட இந்த உணர்வு இழக்கப்பட்டு வருகிறது, அதாவது, "நாம் இந்த சிலையை சில குப்பை, குப்பையில் எறிய வேண்டிய பூவைக் கொண்டு திருப்திப்படுத்துவோம். அவர் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை." ஆம், அவர் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார். ஆனால், உங்கள் வாழ்க்கை முடிந்துவிடும். எதிர்ப்பு அந்த வழியில் வரும். நீங்கள் உணர்வை இழந்தவுடன், பாவ, புதா பாவ-ஸமன்விதா: (ப.கீ 10.8) ... கிருஷ்ணரை யார் வழிபட முடியும்? பாவ, ஸ்தாயி-பாவ இருப்பவர். பாவ என்றால் என்ன என்பது பக்தி-ரசாம்ருத-சிந்துவில் விவரிக்கப்பட்டுள்ளது. உங்களிடம் பாவ இல்லையென்றால், நீங்கள் ஜட(தெளிவற்றது), கனிஷ்த-அதிகாரீ. வெறுமனே நாடகம். அதை பல நாட்கள் செய்ய முடியாது. நாடகம் மிக விரைவில் முடிவடையும்.