TA/Prabhupada 0613 - ஆறு விசயத்தில் நாம் மிகுந்த கவனம் கொள்ளவேண்டும்



Lecture on BG 2.13-17 -- Los Angeles, November 29, 1968

நந்தரானி: இல்லத்தரசிகள் குழந்தைகளை கிருஷ்ண உணர்வில் வளர்க்கும்போது, ​​இது கிருஷ்ணருக்கு ஒரு மறைமுக சேவையாகத் தெரிகிறது. அவர்கள் அவருக்கு நேரடியாக சேவை செய்ய முயற்சிக்க வேண்டுமா, கோவிலில் சமைத்தல், அல்லது இது போன்ற ஏதாவது, நேரடியாக, அல்லது குழந்தைகளை வளர்ப்பதும் வீட்டுச் செயல்பாட்டைக் கொண்டிருப்பதும் போதுமானதா? அது போதுமான சேவையா? பிரபுபாதா: ஆமாம், நாம் கிருஷ்ண உணர்வுடன் இருக்க வேண்டும். மின்மயமாக்கம் போல. ஒரு கம்பி மூலம் மின்சாரத்தைத் தொடுவது, மற்றொன்றால் மற்றொரு கம்பி, மற்றொரு கம்பி என இணைப்பது, உண்மையாக தொடுதல் இருந்தால், மின்சாரம் எல்லா இடங்களிலும் பரவும். இதேபோல் நம் கிருஷ்ணர் உணர்வும் சரியாக இணைக்கப்பட்டிருந்தால், நேரடியாகவா மறைமுகமாகவா என்ற கேள்விக்கே இடமில்லை. ஏனெனில், ஆன்மீக உலகில் எந்த வித்தியாசமும் இல்லை. அது நேரடித் தொடர்புடன் தொட்டவுடன்... அதுவே குரு பரம்பரை என்று அழைக்கப்படுகிறது. இணைப்பு ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருப்பதால், எனவே நாம் இங்கே தொட்டால், அதே வழியில் இணைக்கப்பட்ட ஆன்மீக குருவை, மின்சார இணைப்பு அங்கிருக்கும். நேரடியா மறைமுகமா என்ற கேள்விக்கு இடமில்லை. ஏவம் பரம்பரா-ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது: (BG 4.2). இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். இணைப்பு இருந்தால், இறுக்கமாக இருந்தால், மின்சாரம் தவறாமல் வரும். நம் கட்டுண்ட நிலையில் பல சந்தேகங்கள் இருக்கும், பல தாக்கங்கள் இருக்கும். ஆனால், நான் உங்களுக்கு உதாரணம் காட்டிய அதே விஷயம்தான், உடனடியாக விளைவைப் பெறுவதற்கு அவசரப்பட வேண்டாம். நாம் பின்பற்ற மட்டுமே வேண்டும். தத்-தத்-கர்ம-ப்ரவர்த்தனாத் (Upadeśāmṛta 3). இதை ரூப கோஸ்வாமி அறிவுறுத்துகிறார். ஆறு விஷயங்களை நாம் குறிப்பாக கவனிக்க வேண்டும், அத்துடன் கிருஷ்ண உணர்வில் பக்குவமடைவதற்கு ஆறு விஷயங்களை தவிர்க்கவும் வேண்டும். உத்ஸாஹாத் தைர்யான் நிஷ்சயாத். முதல் கொள்கை ஒருவர் மிகவும் உற்சாகமாக இருக்க வேண்டும். கிருஷ்ணர், ந மே பக்த ப்ரணஷ்யதி என்று சொன்னார் என்பதை அவர் நம்ப வேண்டும், "எனது பக்தன் என்றும் அழிவதில்லை." எனவே "நான் உண்மையாகவே கிருஷ்ணரின் பக்தனாக ஆகிறேன். நான் கிருஷ்ணரின் பக்தனாக ஆகவேண்டும்." இது உற்சாகம் என்று அழைக்கப்படுகிறது பின்னர் தைர்யாத் "நான் கிருஷ்ணரின் பக்தராகிவிட்டேன், ஆனால் இன்னும் நான் மகிழ்ச்சியாக இல்லை. அது எப்படி?" பொறுமையாக இருக்க வேண்டும். உற்சாகமும் இருக்க வேண்டும், பொறுமையாகவும் இருக்க வேண்டும் அத்துடன் நிஷ்சயாத். நிஷ்சயாத் என்றால் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். "ஓ, கிருஷ்ணர் தனது பக்தர் என்றுமே அழிவதில்லை என்று கூறியுள்ளார், எனவே நிச்சயமாக நானுன் அழியமாட்டேன், நான் இப்போது உணரவில்லை என்றாலும். எனது கடமையைச் செய்கிறேன்." உத்ஸாஹாத் தைர்யான் நிஷ்சயாத் தத்-தத்-கர்ம-ப்ரவர்தநாத். ஆனால், அவர்கள் பரிந்துரைத்தபடி உங்கள் கடமைகளை நீங்கள் செய்ய வேண்டும். சதோ வ்ரத்தே:. கூடாது... போலித்தனம் இருக்கக்கூடாது. சதோ வ்ரத்தே என்பது நேராக கையாளுதல், நேர்மையாக கையாளுதல் என்று பொருள். சதோ வ்ரத்தே மற்றும் சாது சங்கே. அத்துடன் பக்தர்களின் சகவாசத்தில் இருத்தல். ஒருவர் உற்சாகமாக இருக்க வேண்டும், ஒருவர் பொறுமையாக இருக்க வேண்டும், ஒருவர் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், ஒருவர் கடமைகளைச் செய்ய வேண்டும், ஒருவர் பக்தர்களின் சகவாசத்தில் இருத்தல் வேண்டும், ஒருவர் கையாள்வதில் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும். ஆறு விஷயங்கள். இந்த ஆறு விஷயங்களும் இருந்தால், நிச்சயமாக வெற்றியே.