TA/Prabhupada 0612 - தனது நாவால் ஹரே கிருஷ்ண நாமத்தை உச்சாடனம் செய்கிறவர் மகிமைவாய்ந்தவர்
Lecture on SB 3.28.19 -- Nairobi, October 29, 1975
சத்கோஸ்வாமிகள், அவர்கள் எப்போதும் கிருஷ்ணோத்கீர்தனையில் ஈடுபட்டிருந்தனர். உரக்க பாராயணம் செய்தனர். நாம் பின்பற்றும் அதே செயல்முறை: எப்போதும் சத்தமாக பாராயணம் செய்யுங்கள்; அர்ச்சனையில் ஈடுபட்டிருங்கள். கிருஷ்ண உணர்வுக்கான சாத்தியம் எப்போதும் உள்ளது. வசதிகள் உள்ளன. சைதன்ய மகாபிரபு கீர்தனீய: ஸதா ஹரி: (CC Adi 17.31) என்று கற்றுக் கொடுத்தார். பிரேக்ஷனீய, "அவர் பார்க்க வேண்டியவர்." நாம் பல விஷயங்களைப் பார்க்கப் பழகிவிட்டோம். அதுதான் நமது பந்தம். அக்ஷ்னோ ஃபலம். கண்களால் நீங்கள் திருவிக்கிரகத்தை பார்த்தால், வைஷ்ணவர்கள் வைஷ்ணவர்கள், திலகத்துடன், குந்தியுடன், ஜபமணிகளுடன், பார்த்தவுடன்... நடைமுறையிலேயே அறியலாம். இந்த ஹரே கிருஷ்ண இயக்கத்தினரைப் பார்த்தவுடன், "ஹரே கிருஷ்ணா" என்று உச்சாடனம் செய்கிறார்கள், மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் விதமாக. ஆடை கூட தேவை. நீங்கள் எப்போதும் திலகம், குந்தி, ஷிகா, சூத்ர ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். அப்போது, ஒரு சாதாரண மனிதர் பார்த்தவுடன், "ஓ, இதோ ஒரு ஹரே கிருஷ்ணாக்காரர். ஹரே கிருஷ்ணா" என்று சொல்வார். இயல்பாகவே நீங்கள் ஹரே கிருஷ்ணா சொல்ல ஒரு வாய்ப்பை தருகிறீர்கள். எனவே, இதுதான் தேவை. முட்டாள் அயோக்கியர்கள், "இதன் அவசியம் என்ன?" என்கிறார்கள். இல்லை. இது அவசியம். நீங்கள் எப்போதும் ஒரு வைஷ்ணவரை போல உடையணிந்து இருக்க வேண்டும். அது அவசியம். பிரேக்ஷனீய: "பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது." இல்லையெனில் எப்படி ஈர்க்கப்பட்டனர்? உடனே மிகவும் புண்ணியஸ்தர்களாகி, ஹரே கிருஷ்ணா என்று சொல்கிறார்கள். ஹரே கிருஷ்ண உச்சாடனம் அவ்வளவு எளிதானதல்ல. எவ்வளவோ பேர் இங்கு வருகிறார்கள், ஆனால், நாமசங்கீர்தனம் நடக்கும் போது அவர்கள் சொல்வதில்லை, ஏனெனில், அஃது எளிதானது அல்ல. யஜ்-ஜிஹ்வாக்ரே நாம துப்யம். சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது, அஹோ பத ஷ்வ-பசதோ 'பி கரீயான் யஜ்-ஜிஹ்வாக்ரே நாம துப்யம். ஹரே கிருஷ்ணா என, ஜிஹ்வாக்ரே, நாவால் ஜபிக்கும் எவரும், நாய் உண்பவர்களின் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் மகிமையானவராகிறார். மகிமை வாய்ந்தவர். யஜ்-ஜிஹ்வாக்ரே நாம துப்யம். எனவே, இந்த வாய்ப்பை நாங்கள் தருகிறோம். ஹரே கிருஷ்ணா என சொல்பவர், உடனடியாக மகிமையானவராகிறார். உடனே மகிமை பெறுங்கள். அஹோ பத ஷ்வ-பசதோ 'பி கரீயான் யஜ்-ஜிஹ்வாக்ரே நா..., தேபுஸ் தபஸ் தே (SB 3.33.7). அதன் அர்த்தம், முந்தைய பிறவியில் ஏற்கனவே பல யாகங்களைச் செய்தவர். எனவே, ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்வதற்கான தகுதி அவருக்கு கிடைத்துள்ளது. தேபுஸ் தபஸ் தே ஜிஹுவு: ஸஸ்னுர் ஆர்யா (SB 3.33.7). ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்பவர்கள் உண்மையில் ஆர்யா, ஆரியன், எனவே, ஹரே கிருஷ்ணா என்று எப்போதும் உச்சாடனம் செய்ய நாம் நம்மைப் பயிற்சிக்குட்படுத்திக் கொள்ள வேண்டும். கீர்தனீய: ஸதா ஹரி:, சைதன்ய மகாபிரபு பரிந்துரைத்துள்ளார். த்ருணாத் அபி ஸுநீசேன, தரோர் அபி ஸஹிஷ்ணுனா, அமானினா மாநதேன, கீர்தனீய: ஸதா ஹரி: (CC Adi 17.31) ஹரி-நாம, ஹரே கிருஷ்ண மந்திரத்தின் இந்த பாராயணத்தை எப்போதும் பயில வேண்டும். ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே / ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. பிரேக்ஷனீய இஹிதம் த்யாயேத். இதுதான் தியானம். த்யாயேத் சுத்த-பாவேன, சுத்த-பாவேன. செயற்கையானதல்ல. ஆனால், செயற்கையாக செய்தாலும், உச்சாடனத்தின் மூலம் சுத்திகரிக்கப்படுவீர்கள். செயற்கையாக, நாம் செய்தால்... அது சாஸ்திரத்தில் உள்ளது. இருப்பினும், புனித நாம ஜபம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதால் அது உங்களை ஆக்கும்... ஏனென்றால், அது கடவுளுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறது. த்யாயெத். எனவே, ஜபம் செய்தவுடன், உடனடியாக தியானம் ஏற்படும், ஷுத்த-பாவேன சேதஸா, உணர்வினால், மனதினால், புத்தியினால். எனவே, இதுவே பரிந்துரை.