TA/Prabhupada 0615 - கிருஷ்ணருக்காக அன்போடும் உற்சாகத்தோடும் பணியாற்றுவதே கிருஷ்ணபிரக்ஞை வாழ்வாகும்



Lecture on BG 1.30 -- London, July 23, 1973

இரண்டு வகையான மாயாவாதிகள் உள்ளனர்: அத்வைதிகள் மற்றும் சூன்யவாதிகள். அவர்கள் அனைவரும் மாயாவாதிகள். அவர்களின் தத்துவம் இதுவரை நன்றாக உள்ளது, ஏனெனில் ஒரு முட்டாள் மனிதனால் இதை விட அதிகமாக புரிந்து கொள்ள முடியாது. ஒரு முட்டாள் மனிதன், ஆன்மீக உலகில் சிறந்த வாழ்க்கை இருப்பதாக அறிவிக்கப்பட்டால், கடவுளின் (கிருஷ்ணரின்) ஊழியராக மாற. அவர்கள் நினைப்பார்கள், "நான் இந்த பௌதிக உலகின் சேவகனாக ஆனேன். நான் மிகவும் கஷ்டப்பட்டேன். மீண்டும் கிருஷ்ணரின் சேவகனாகவா?" என்று நினைக்கிறார்கள். "ஓ ..." அவர்கள் நடுங்குகிறார்கள், "ஓ, இல்லை, இல்லை. இது நல்லதல்ல. இது நல்லதல்ல." சேவையைப் பற்றி கேள்விப்பட்டவுடன், அவர்கள் இந்த சேவையை, முட்டாள்தனமான சேவை என்று நினைக்கிறார்கள். அவர்களால் ஆனந்தம் மட்டுமே உள்ள சேவை இருக்கிறது என நினைத்துப் பார்க்க முடியாது. ஒருவர் கிருஷ்ணருக்கு சேவை செய்ய இன்னும் ஆர்வமாக உள்ளார், அது தான் ஆன்மீக உலகம் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. எனவே, இந்த நிர்விஷே₂ஷவாதீ₃ (அத்வைதிகள்) அப்படி நினைக்கிறார்கள். எப்படியென்றால், ஒரு நோயுற்ற மனிதன் படுக்கையில் படுத்திருக்கும் போது அவனுக்கு அறிவிக்கப்படுகிறது "நீங்கள் குணமடைந்தவுடன், ​நன்றாக சாப்பிட முடியும், நன்றாக நடக்க முடியும், " என்று. அவர் "மீண்டும் நடைப்பதா? மீண்டும் சாப்பிடுவதா?" என்று நினைக்கிறார். ஏனெனில் அவருக்கு கசப்பான மருந்து சாப்பிடுவது பழக்கமாகிவிட்டது ஸாகு₃தா₃னா, மிகச் சுவையாக இல்லை, பல விஷயங்கள், மலம், சிறுநீரை படுக்கையில் கழிப்பது. எனவே, "குணமடைந்த பிறகும் மலம், சிறுநீர் கழிப்பது, சாப்பிடுவதும் உண்டு" என்று அவருக்குத் தெரிவித்தவுடன், ஆனால், அது மிகச் சுவையானது," என அவரால் புரிந்து கொள்ள முடியாது. அவர் கூறுகிறார் "இது இதைப் போன்றது. "

கிருஷ்ணருக்கு சேவை செய்வது பேரின்பம் நிறைந்தது என்பதை மாயாவதிகளால் (அத்வைதிகள்) புரிந்து கொள்ள முடியாது. அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. எனவே, அவர்கள் அத்வைதிகளாக மாறுகிறார்கள்: "இல்லை. பூரண உண்மை ஒரு நபராக இருக்க முடியாது." என்று அது பெளத்த தத்துவத்தின் மற்றொரு பக்கம். அருவம் என்றால் பூஜ்ஜியம். அதுவும் பூஜ்ஜியம். பெளத்த தத்துவம், இறுதி இலக்கை பூஜ்ஜியமாகக் கருதுகின்றனர், அத்துடன், மாயாவாதிகளும் இறுதி இலக்கை அவ்வாறாக ஆக்குகின்றனர்... ந தே விது₃꞉ ஸ்வார்த₂-க₃திம் ஹி விஷ்ணும் (SB 7.5.31). கிருஷ்ணருக்கு சேவை செய்வதன் மூலம் ஆனந்தமான வாழ்க்கை இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. இங்கே அர்ஜுனன் சாதாரண மனிதனைப் போல் நடந்து கொள்கிறான். அவர் கிருஷ்ணரிடம், "எனது சொந்தங்களை கொல்வதன் மூலம் நான் மகிழ்ச்சியாக இருக்கவும் இராச்சியத்தை அடையவும் என்னை போரிட வேண்டும் என்கிறாயா? என்றார். ஓ, நிமித்தானி விபரீதானி (BG 1.30). நீங்கள் என்னை தவறாக வழிநடத்துகிறீர்கள்." நிமித்தானி ச பஷ்₂யாமி விபரீதானி. "என் சொந்தங்களைக் கொல்வதன் மூலம் நான் மகிழ்ச்சியாக இருக்க மாட்டேன். அது சாத்தியமில்லை. நீங்கள் எதனால் என்னை தூண்டுகிறீர்கள்?" அவர் கூறினார், நிமித்தானி ச பஷ்₂யாமி விபரீதானி. " இல்லை இல்லை." ந ச ஷ₂க்னோம்-யவஸ்தா₂தும்: "என்னால் இங்கே நிற்க முடியாது. நான் திரும்பிச் செல்கிறேன். என் தேரைத் திருப்புங்கள். நான் இங்கே இருக்க மாட்டேன். " ந ச ஷ₂க்னோம்-ய்வஸ்தா₂தும் ப்₄ரமதீவ ச மே மன꞉ (BG 1.30). "நான் கலக்கமடைகிறேன், இப்போது நான் குழப்பமடைந்துள்ளேன்."

எனவே இதுதான் பௌதிக உலகத்தின் நிலை, நாம் எப்போதும் சிக்கலில் இருக்கிறோம், குழப்பம், பௌதிகவாதிக்கு ஏதாவது சிறந்ததாக முன்மொழியப்பட்டால், "நீங்கள் கிருஷ்ண பக்தியை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்," என்று. நிமித்தானி விபரீதானி, அவர் அதை நேர் எதிரே பார்க்கிறார். "இந்த கிருஷ்ண பக்தி என்ன? மகிழ்ச்சியாக இருப்பேன் என்கிறார்கள்? எனது குடும்பம் சிக்கலில் உள்ளது அல்லது எனக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்த கிருஷ்ண உணர்வு எனக்கு எப்படி உதவும்? நிமித்தானி ச விபரீதானி (BG 1.30). இது ஜட வாழ்வு. எனவே, இதை புரிந்து கொள்ள சிறிது காலம் தேவை. அதுதான் பகவத்-கீதை. அதே அர்ஜுனன், இப்போது புரிந்து கொள்கிறார், நிமித்தானி ச விபரீதானி பகவத்-கீதையை அவர் புரிந்துகொள்ளும்போது, ​​"ஆம்" என்பார், "கிருஷ்ணா நீங்கள் சொல்வது சரியே." அர்ஜுனனுக்கு உபதேசித்த பிறகு, கிருஷ்ணர் அவரிடம், "இப்போது நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார். ஏனெனில், கிருஷ்ணர் கட்டாயப்படுத்த மாட்டார். கிருஷ்ணர் "நீங்கள் என்னிடம் சரணடையுங்கள்" என்று கூறுகிறார். "நீ சரணடைய வேண்டும், நான் கடவுள், நீ என் அம்சம்" என்று அவர் கட்டாயப்படுத்தவில்லை. அவர் ஒருபோதும் அப்படி சொல்ல மாட்டார். ஏனெனில், அவர் உங்களுக்கு சிறிய சுதந்திரத்தை அளித்துள்ளார், அவர் அதில் கை வைக்கமாட்டார். இல்லையெனில் ஒரு கல்லுக்கும் உயிர்வாழிக்கும் என்ன வித்தியாசம்? ஒரு உயிரினத்திற்கு சுதந்திரம் இருக்க வேண்டும், அது சிறிய அளவுக்கு என்றாலும், கிருஷ்ணர் (சுதந்திரத்தில்) ஒருபோதும் கை வைக்கமாட்டார். நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும், "ஆம், கிருஷ்ணா, நான் உங்களிடம் சரணடைவேன். ஆம். அது என் நலனுக்காகவே. "இதுதான் கிருஷ்ண உணர்வு. நீங்கள் தானாக முன்வந்து ஒப்புக் கொள்ள வேண்டும், ஒரு இயந்திரம் போல் அல்லாமல். "ஆன்மீக குரு கூறுகிறாரே. சரி, நான் அதை செய்கிறேன்." அப்படி இல்லை. நீங்கள் மிக தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தேஷாம் ஸதத-யுக்தானாம் ப₄ஜதாம் ப்ரீதி-பூர்வகம் (BG 10.10). ப்ரீதி, அன்புடன். நீங்கள் கிருஷ்ணருக்காக அன்புடனும் உற்சாகத்துடனும் பணிபுரியும் போது, ​​அதுவே உங்கள் கிருஷ்ண உணர்வுள்ள வாழ்க்கை. இது தொந்தரவாக இருக்கிறது, ஆனால், நான் என்ன செய்ய முடியும்?" என்று நீங்கள் நினைத்தால் இவர்கள் என்னிடம் அதை செய்ய சொல்கிறார்கள். நான் அதை செய்ய வேண்டும், "அது கிருஷ்ண உணர்வு அல்ல. நீங்கள் அதை தானாக முன்வந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். அப்போது உங்களுக்குத் தெரியும் உத்ஸாஹான் நிஷ்₂சயாத்₃ தை₄ர்யாத் தத்-தத்-கர்ம-ப்ரவர்தனாத், ஸதோ வ்ருத்தே꞉ ஸாது₄-ஸங்கே₃ ஷட்₃பி₄ர் ப₄க்தி꞉ ப்ரஸித்₄யதி. எங்கள் உபதே₃ஷா₂ம்ருத (NOI 3) இல் நீங்கள் காண்பீர்கள். எப்போதும் உற்சாகத்துடன் இருக்க வேண்டும், உத்ஸாஹாத். தை₄ர்யாத், பொறுமையுடன். தத்-தத்-கர்ம-ப்ரவர்தனாத். நிஷ்₂சயாத் என்றால் நம்பிக்கையுடன். "கிருஷ்ணரின் பணியில், கிருஷ்ணரின் செயற்பாடுகளில் நான் ஈடுபடும்போது, ​​கிருஷ்ணர் நிச்சயமாக என்னை அவரது திருநாட்டிற்கு மீட்டுச் செல்வார்... " நிஷ்₂சயாத். கிருஷ்ணர் கூறுகிறார், மன்-மனா ப₄வ மத்₃-ப₄க்தோ மத்₃-யாஜீ மாம் நமஸ்குரு (BG 18.65). "நான் உன்னை திரும்ப அழைத்துச் செல்வேன்." இது கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணர் ஒரு பொய்யர் அல்ல, எனவே, நாம் ஆர்வத்துடன் பணியாற்ற வேண்டும். சும்மா... விபரீதானி அல்ல. அது இறுதியில் அர்ஜுனனால் ஏற்றுக்கொள்ளப்படும். கிருஷ்ணர் அவரிடம், "என் அன்பான அர்ஜுனா, இப்போது உன் முடிவு என்ன?" என்று கேட்பார். "ஆம்" என்று அர்ஜுனன் சொல்வான். த்வத் ப்ரஸாதா₃த் கேஷ₂வ நஷ்ட-மோஹ (BG 18.73)꞉ "என் எல்லா மாயையும் இப்போது போய்விட்டது. "

அவ்வளவுதான். மிக்க நன்றி. ஹரே கிருஷ்ணா.