TA/Prabhupada 0616 - பிராம்மணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் - இவையே இயற்கையான பிரிவுகள்



Lecture at World Health Organization -- Geneva, June 6, 1974

மனித சமுதாயம் அடித்தடங்களை பின்பற்றாவிட்டால், பெரிய ஆச்சார்யர்களினதும் மிகப்பெரிய சாதுக்களினதும்- பின்னர் சிக்கல் ஏற்படும். அது உண்மையில் நடக்கிறது. பகவத்-கீதையில், கிருஷ்ணர்..., கிருஷ்ணரும் அர்ஜுனரும் பேசிக் கொண்டிருந்தனர், அர்ஜுனர் போரின் பின்விளைவுகளை முன்வைத்தார், பெண்கள் விதவைகளாவார்கள், அவர்களால் அவர்களின் நடத்தையை காப்பாற்றிக் கொள்ள முடியாது, பின்னர் அதர்மம் தொடங்கும். அவ்வாறு அவர் கூறினார்... அவர் இப்படி அப்படியென வாதிட்டார், அதாவது,

அத₄ர்மாபி₄ப₄வாத் க்ருஷ்ண,
ப்ரது₃ஷ்யந்தி குல-ஸ்த்ரிய꞉,
ஸ்த்ரீஷு து₃ஷ்டாஸு வார்ஷ்ணேய,
ஜாயதே வர்ண-ஸங்கர꞉
(BG 1.40)

வேத நாகரிகம் என்பது வர்ணாசிரம-தர்மம். வர்ணாசிரம-தர்மம் சரியாகப் பாதுகாக்கப்படவில்லை என்றால், பின்னர் வர்ண-சங்கர எனப்படும் கலப்பு ஜனத்தொகைதான் இருக்கும். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் - இதுவே இயற்கை பிரிவு. சமூகம் பிரிக்கப்பட வேண்டும்... சாதுர்-வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் கு₃ண-கர்ம-விபா₄க₃ஷ₂꞉ (BG 4.13). (பக்கத்தில்) தேவையில்லை. இயற்கை பிரிவு... உடலில் இயற்கையான பிரிவு உள்ளதைப் போல: தலை, கைகள், வயிறு, கால்கள், இதேபோல், சமூக பிரிவுகள் உள்ளன. அவர்களில் சிலர் மிகவும் புத்திசாலித்தனமானவர்களின் வர்க்கம், அவர்களில் சிலர் போர் கலையில் ஆர்வமுள்ளவர்கள், அவர்களில் சிலர் வியாபாரம், வர்த்தகத்தில் ஆர்வமாக உள்ளனர், அவர்களில் சிலர் வயிற்றை நிரப்ப மட்டுமே ஆர்வமாக உள்ளனர். எனவே, இது இயற்கை பிரிவு. எனவே, கிருஷ்ணர் கூறுகிறார், சாதுர்-வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம். இந்த சதுர்- வர்ன்யம்— பிரிவுகள்... மிகவும் புத்திசாலி வர்க்கத்தினர் பிராமணராக பயிற்சியளிக்கப்பட வேண்டும். ஷ₂மோ த₃மோ திதிக்ஷ ஆர்ஜவ ஜ்ஞானம் விஜ்ஞானம் ஆஸ்திக்யம் ப்₃ரஹ்ம-கர்ம ஸ்வபா₄வ-ஜம் (BG 18.42). சமூகப் பிரிவு இருக்க வேண்டும். அறிவுசார் வர்க்கம், அவர்கள் வேதங்களைப் படிப்பதில் ஈடுபட வேண்டும், அறிவைப் பெற்று, அதை மனித சமுதாயத்திற்குள் பரப்ப வேண்டும், இதனால் அவர்கள் வழிநடத்தப்படுவார்கள், சமூகத்தின் அமைதியான சூழ்நிலைக்குத் தேவையானதைச் செய்வது. அதுவே வழிகாட்டுதல். சத்திரியர்கள் - அவர்கள் சமுதாயத்திற்கு பாதுகாப்பு வழங்கவே உள்ளனர், இராணுவ பலம் அல்லது போர்க் கலையில் ஆர்வமுடையவர்கள். ஆபத்து, தாக்குதல் நடக்கும்போது, ​​அவர்கள் நமக்கு பாதுகாப்பு அளிப்பார்கள். இதேபோல், உணவு தானியங்களை உற்பத்தி செய்வதற்கும், பசுக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் ஒரு பிரிவினர் இருக்க வேண்டும். க்ருஷி-கோ₃-ரக்ஷ்ய வாணிஜ்யம் வைஷ்₂ய-கர்ம ஸ்வபா₄வ-ஜம் (BG 18.44). புத்திஜீவிகளாகவோ போர்க்கலையில் ஆர்வம் உடையவர்களாகவோ பணியாற்ற முடியாத மீதமுள்ளவர்கள். அல்லது உணவுப்பொருட்களை உற்பத்தி செய்ய முடியாதவர்கள் இந்த மூன்று வகுப்பினருக்கும் உதவ வேண்டும். அவர்கள் சூத்திரர்கள் எனப்படுகின்றனர். இதுவே சமூகப் பிரிவு. எனவே, இது வர்ணாசிரம-தர்மம் எனப்படுகிறது. தர்மம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தர்மம் என்றால் தொழில்சார் கடமை. தர்மம் என்பது சில மத உணர்வைக் குறிக்காது. இயற்கை பிரிவும் தொழில்சார் கடமையும்.