TA/Prabhupada 0618 - “இந்த சிறுவன் என்னைவிட சிறப்பாக வருவான்” என்று ஆன்மிக குரு களிப்படைய வேண்டும்



Lecture on CC Adi-lila 7.91-2 -- Vrndavana, March 13, 1974

ஆன்மீக முன்னேற்றத்தில் ஒரு சீடன் பக்குவமடையும் போது, ஆன்மீக குரு மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறார், "நான் ஒரு முட்டாள், ஆனால் இந்த பையன், அவன் என் உபதேசங்களை பின்பற்றி வெற்றியை அடைந்துள்ளான். அதுவே எனது வெற்றி." இதுவே ஆன்மீக குருவின் இலட்சியம். ஒரு தந்தையைப் போல. இதுதான் உறவு. எப்படியெனில்... தன்னை விட முன்னேறியவரை யாரும் பார்க்க விரும்புவதில்லை. அதுதான் இயல்பு. மாட்சரத. எந்தவொரு விஷயத்திலும் யாராவது முன்னேறினால், அவர் மீது பொறாமைப்படுகிறேன். ஆனால் ஆன்மீக குரு அல்லது தந்தை, பொறாமைப்படுவதில்லை. அவர் மிகமிக மகிழ்ச்சியாக உணர்கிறார், "இந்த சிறுவன் என்னை விட முன்னேறிவிட்டான்." இதுதான் ஆன்மீக குருவின் நிலைப்பாடு. எனவே கிருஷ்ணர், சைதன்ய மஹாபிரபு வெளிப்படுத்துகிறார், அவர் (தெளிவற்றது) "மூலம்..., நான் உச்சாடனம் செய்து நடனமாடி பரவசத்தில் அழும்போது, என் ஆன்மீக குரு எனக்கு இவ்வாறு நன்றி கூறுகிறார்: பா₄ல ஹைல, 'இது மிகவும் நல்லது."... பாஇலே துமி பரம-புருஷார்த₂: "இப்போது நீர் வாழ்வின் மிக உயர்ந்த வெற்றியை அடைந்துள்ளீர்." தோமார ப்ரேமேதே: "நீர் மிகவும் முன்னேறியுள்ளதால், ஆமி ஹைலாங் க்ருதார்த₂, நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்." இதுதான் நிலைப்பாடு.

பின்னர் அவர் ஊக்குவிக்கிறார், நாச, கா₃ஓ, ப₄க்த-ஸங்கே₃ கர ஸங்கீர்தந: "மேலும் தொடர்வீர். நீர் பெருமளவு வெற்றியை அடைந்துள்ளீர். இப்போது மீண்டும் தொடர்வீர்." நாச: "நடனமாடிடுவீர்." காவோ: பாடிடுவீர், கீர்த்தனம் செய்வீர், பக்த-சங்கே "பக்த சங்கத்தோடு." ஒரு தொழிலை செய்ய அல்ல, ஆனால் பக்த-சங்கே. ஆன்மீக வாழ்க்கையில் வெற்றியை அடைவதற்கான உண்மையான தளம் இதுதான். நரோத்தம தாச தாகூரரும் கூறுகிறார்,

தாஞ்தே₃ர சரண-ஸேவி-ப₄க்த-ஸநே வாஸ,
ஜநமே ஜநமே மோர ஏஇ அபி₄லாஷ.

"ஜென்ம ஜென்மமாக" என்று நரோத்தம தாச தாகூரர், கூறுகிறார். ஏனென்றால், ஒரு பக்தர், இறைவனின் திருநாட்டுக்குத் திரும்பி செல்ல விரும்புவதில்லை. இல்லை. எந்த இடத்திலும், அது ஒரு பொருட்டல்ல. வெறுமனே முழுமுதற் கடவுளை மகிமைப்படுத்தவே விரும்புகிறார். அதுதான் அவருடைய வேலை. பக்தர் உச்சாடனம் செய்வதும், நடனமாடுவதும், பக்தித் தொண்டாற்றுவதும் வைகுண்டதிற்கோ கோலோக விருந்தாவனத்திற்கோ செல்வதற்காக அல்ல. அது கிருஷ்ணரின் விருப்பம். "அவர் விரும்பினால், அவர் என்னை அழைத்துக் கொள்வார்." பக்திவினோத தாகூரர் சொன்னது போல: இச்சா₂ யதி₃ தோர. ஜந்மாஓபி₃ யதி₃ மோரே இச்சா₂ யதி₃ தோர, ப₄க்த-க்₃ருஹேதே ஜந்ம ஹ-உ ப மோர. ஒரு பக்தர் பிரார்த்தனை மட்டுமே செய்கிறார்... அவர் கிருஷ்ணரிடம் கோரவில்லை, "தயவுசெய்து என்னை மீண்டும் வைகுண்டதிற்கோ கோலோக விருந்தாவனத்திற்கோ அழைத்துக் கொள்ளுங்கள்." என. இல்லை. "நான் மீண்டும் பிறக்க வேண்டும் என்று தாங்கள் நினைத்தால், பரவயில்லை. ஆனால், எனது ஒரேயொரு வேண்டுகோள், என்னை ஒரு பக்தனின் வீட்டில் பிறக்கச் செய்ய வேண்டும் என்பது மட்டுமே. அவ்வளவுதான். எனவே நான் தங்களை மறக்கமாட்டேன். "இதுதான் பக்தரின் ஒரே பிரார்த்தனை.