TA/Prabhupada 0629 - நாம் அனைவரும் கடவுளின் வெவ்வேறு குழந்தைகள் - வெவ்வேறு உடைகளில் இருக்கிறோம்
Lecture on BG 2.13 -- Pittsburgh, September 8, 1972
ஆக கிருஷ்ண உணர்வை பெறுவதற்கு, நாம் வெறும் மூன்று விஷயங்களை புரிந்துக் கொள்ள வேண்டும்:
- போக்தாரம் யக்ஞ-தபஸாம்
- ஸர்வ-லோக-மஹேஷ்வரம்
- ஸுஹ்ருதம் ஸ்ர்வ-பூதானாம்
- க்ஞாத்வா மாம் ஷாந்திம் ருச்சதி
நாம் எல்லோரும் சந்தோஷமாக, திருப்தியாக இருக்க முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம். அது தொடர்ந்து வாழ்வதற்கான போராட்டம். ஆனால் நாம் இந்த மூன்று கொள்கைகளை புரிந்துக் கொண்டால், அதாவது பகவான் நித்தியமான தந்தை, பகவான் தான் நித்தியமான உரிமையாளர், பகவான் தான் நித்தியமான நண்பன், இந்த மூன்று விஷயங்கள், நீங்கள் புரிந்துக் கொண்டால், பிறகு உடனடியாக அமைதி அடைவீர்கள். உடனடியாக. நீங்கள் உதவிக்கு நண்பர்களை நாடிச் செல்கிறீர்கள், பல பேர். ஆனால் நீங்கள் வெறுமனே பகவானை, கிருஷ்ணரை, நண்பராக, நித்தியமான நண்பராக, ஏற்றுக் கொண்டால், உங்கள் நண்பர் பிரச்சனை தீர்வடையும். அதேபோல், நாம் பகவானை நித்தியமான உரிமையாளராக ஏற்றுக் கொண்டால், பிறகு நம் பிரிச்சனைகள் தீர்வு காணும். ஏனென்றால் நாம் போலியாக பகவானுக்கு சொந்தமான பொருள்களை உரிமை கோருகிறோம். தவறாக உரிமை கோருகிறோம் அதாவது "இந்த நிலம், அமெரிக்க நிலம், அமெரிக்கர்களுக்கு சொந்தம்; ஆப்பிரிக்கா நிலம் ஆப்பிரிக்கர்களுக்கு." இல்லை. ஒவ்வொரு நிலம்மும் பகவானுக்கு சொந்தமானது. நாம் பகவானின் வேறுபட்ட மகன்கள் வேறுபட்ட உடையில் இருக்கிறோம். மற்றவர்களுடைய உரிமையை வரம்பு மீறாமல், நமக்கு தந்தை, பகவானின் சொத்தை அனுபவிக்க உரிமை உள்ளது. ஒரு குடும்பத்தில் இருப்பது போல், நாம் பல சகோதரர்களுடன் வாழ்கிறோம். தாய் தந்தையர் எதைக் கொடுத்தாலும் நாம் உட்கொள்கிறோம். மற்றவர்களுடைய தட்டில் இருப்பதை அபகரிக்கமாட்டொம். அது நாகரிகமான குடும்பமாகாது. அதேபோல், நாம் பகவான் உணர்வானால், கிருஷ்ண உணர்வு, பிறகு உலகின் அனைத்து பிரச்சனைக்களும் - சமூகவியல், மதம், பொருளாதார அபிவிருத்தி, அரசியல், - அனைத்தும் தீர்வு கண்டுவிடும். அது உண்மையாகும்.
ஆகையினால், மனித சமுதாயத்தின் நன்மைக்காக இந்த கிருஷ்ண உணர்வை பரப்புவதற்க்கு நாங்கள் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் புத்திசாலிகளிடம் கேட்டுக் கொள்கிறோம், முக்கியமாக மாணவர்கள் சமூகத்திடம், இந்த இயக்கத்தில் சேர்ந்து, அறிவுப் பூர்வமாக இந்த இயக்கம் என்ன என்பதை புரிந்துக் கொள்ள முயற்ச்சி செய்யுங்கள். எங்களிடம் பல புத்தகங்கள் உள்ளன, குறைந்தது இரண்டு டசன்கள், பெரிய, பெரிய காண்டம். ஆக நீங்கள் அதை படிக்கலாம், இந்த இயக்கத்தைப் பற்றி புரிந்துக் கொள்ள முயற்சிக்கலாம், மேலும் எங்களுடன் சேரலாம். மிக்க நன்றி. ஹரே கிருஷ்ண.
(பார்வையாளர் ஆரவாரம்)