TA/Prabhupada 0630 - துக்கப்படுவதற்கு காரணமே இல்லை - ஆத்மா நிலைத்திருக்கும்



Lecture on BG 2.28 -- London, August 30, 1973

பக்தர்: மொழிபெயர்ப்பு: "அனைத்து படைக்கப்பட்ட உயிரினங்களும் ஆரம்பத்தில் தோன்றவில்லை, இடைக்காலத்தில் ஜடத் தோற்றம் பெற்றனர், மேலும் அவர்கள் அழிக்கப்பட்ட பிறகு அழிந்துவிடுவார்கள். ஆகையால் எதற்காக புலம்ப வேண்டும்?"

பிரபுபாதர்: ஆகையால் ஆத்மா நித்தியமானது. ஆகையால் அங்கு புலம்புவதற்கு ஒன்றுமில்லை, ஏனென்றால் ஆத்மா நிரந்தரமானது. இந்த உடல் கூட அழிந்துவிடும், புலம்புவதற்கு ஒரு காரணமும் இல்லை. மேலும் இதை நம்பாதவர்கள் அதாவது "அங்கு ஆத்மா இல்லை; ஆரம்பத்தில் அனைத்தும் வெற்றிடமாக இருந்தது..." ஆகையால் ஆரம்பத்தில் அது வெற்றிடமாக இருந்தது மேலும் இடைபட்ட காலத்தில் தோற்றம் பெற்றது. பிறகு மறுபடியும் வெற்றிடமானது. ஆகையால் வெற்றிடத்திலிருடந்து மறுபடியும் வெற்றிடமானது, பிறகு எதற்கு புலம்ப வேண்டும்? கிருஷ்ணர் கொடுக்கும் விவாதம் இதுதான். இரு வழியிலும் நீங்கள் புலம்பக் கூடாது. பிறகு?

பிரதியும்னா: (பொருளுரை) "இருப்பினும் விவாதத்தின் பொருட்டு, நாத்திகனின் தத்துவத்தை ஏற்றுக் கொண்டாலும், அங்கு புலம்பலுக்கு காரணமே இல்லை. ஆன்மாவின் தனித்தன்மையை தவிர்த்து, ஜட தனிமம் படைப்புக்கு முன் தோண்டராமலே இருந்தது. தோன்றாமல் இருக்கும் இந்த நுண்நிலையிலிருந்து தோற்றம் வெளிப்படுகின்றது. எவ்வாறென்றால் தெளிந்த வானிலிருந்து, காற்று உற்பத்தியாகிறது, காற்றிலிருந்து, நெருப்பு உற்பத்தியாகிறது, நெருப்பிலிருந்து, தண்ணீர் உற்பத்தியாகிறது; மேலும் தண்ணீரிலிருந்து, பூமி தோன்றுகிறது. பூமியிலிருந்து, பலவகையான தோற்றங்கள்..."

பிரபுபாதர்: இதுதான் படைத்தலின் செய்முறை. ஆகாயத்திலிருந்து, காற்று பிறகு, நெருப்பு பின், தண்ணீர் பிறகு, பூமி. இதுதான் படைத்தலின் செய்முறை. ஆம்.

பிரதியும்னா: "உதாரணத்திற்கு ஒரு பெரிய வானளாவிய கட்டிடம் பூமியிலிருந்து தோன்றியது. அது தனித்தனியாக பிரிக்கப்பட்டால், அந்த தோற்றம் மறுபடியும் தோன்றாமையாகிவிடுகிறது மேலும் இறுதியில் அணுநிலையில் இருக்கிறது. சக்தி வீணாவத்தைத் தடுக்கும் சட்டம் இருக்கும், ஆனால் கால போக்கில் பொருள்கள் தோன்றியும் அழிந்தும்விடும். அதுதான் வித்தியாசம். பிறகு தோன்றினாலும் அழிந்தாலும் புலம்புவதிற்கு அங்கு என்ன இருக்கிறது? எவ்வாறெனினும், அழியும் நிலையிலும் கூட, பொருள்கள் தொலைந்து போவதில்லை. ஆரம்பம், முடிவு இரண்டிலும் தனிமங்கள் தோன்றாமலேயே இருக்கிறது, மேலும் இடை பட்ட காலத்தில் தான் அவை தோன்றுகின்றன, இது எந்த உண்மையான ஜட வேறுபாட்டையும் அளிப்பதில்லை. மேலும் நாம் பகவத் கீதையில் கூறியிருப்பது போல் (2.18) (அந்தவந்த இமே தேஹாஹ்) வேதத்தின் முடிவை ஏற்றுக் கொண்டால் அதாவது இந்த பௌதிக உடல் காலப் போக்கில் அழியக் கூடியது (நித்தியஸ்யோக்டாஹ சரீரிணஹ) ஆனால் ஆத்மா நித்தியமானது, ஆகையால் நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் இந்த உடல் ஆடையை போன்றது. ஆகையால் ஆடை மாற்றமடைவதில் எதற்காக புலம்ப வேண்டும்? நித்தியமான ஆன்மாவுடன் ஒப்பிடும் போது இந்த பௌதிக உடலுக்கு உண்மையான வாழ்க்கை இல்லை. இது ஏதோ ஒரு கனவைப் போன்றது. கனவில் நாம் வானத்தில் பறப்பது போலவும் அல்லது ஒரு தேரில் அரசனைப் போல் அமர்ந்திருப்பதாக நினைக்கலாம், ஆனால் கண்விழித்ததும் நாம் வானத்திலும் இல்லை தேரில் அமர்ந்திருக்கவும் இல்லை என்பதை பார்க்கிறோம். வேத ஞானம் தன்னையறியும் விஞ்ஞானத்தையும், பௌதிக உடலின் இறப்பின் அடிப்படையையும் ஊக்குவிக்கிறது. ஆகையினால் இரண்டு விதத்திலும், ஒருவர் ஆன்மா இருப்பதை நம்பினாலும் அல்லது நம்பாவிட்டாலும், உடலை இழந்துவிட்டதால் புலம்புவதிற்கு ஒரு காரணமும் இல்லை."