TA/Prabhupada 0633 - நாம் அனைவரும் கிருஷ்ணரின் சுடரும் தீப்பொறிகளைப் போன்றவர்கள்



Lecture on BG 2.28 -- London, August 30, 1973

ஆகையால் இந்த உலகின் நிலைமை, ஆத்மாவின் அறிவின்மையால் அவர்கள் பல பாவச் செயல்களை உருவாக்குகிறார்கள் மேலும் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால் எவ்வாறு சிக்குண்டோம் என்னும் அறிவு இல்லாமல் இருக்கிறார்கள். இதுதான் மாயையின், பிரக்ஸபாத்மிக-சக்தி, ஆவரணாத்மிக. அவன் சிக்குண்ட போதிலும், தான் முன்னேறிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறான், அறிவியலில் முன்னேறிக் கொண்டிருக்கிறான். இது அவர்களுடைய அறிவு. ஒருவர் உரையாடிக் கொண்டிருந்தார் அதாவது தான் சுரங்கத் தொழில் பொறியாளர் என்று. ஆகையால் சுரங்கத் தொழில் பொறியாளர், அவருடைய வேலை சுரங்கத்தினுள் சூழ்நிலையை வசதியாக வைத்துக் கொள்வதாகும். கற்பனைச் செய்து பாருங்கள், எலிப் பொந்து போல் இருக்கும் பூமிக்குள் சென்றிருக்கிறார், மேலும் அந்த எலிப் பொந்தை மேம்படுத்துகிறார். கற்பிக்கப்பட்ட பிறகு, பட்டம் பெற்ற பிறகு, அவருடைய நிலை இருட்டுக்குள் செல்ல வேண்டும், நான் சொல்வதாவது, பூமியின் குழிக்குள், மேலும் அவர் சுரங்கத்தினுள் இருக்கும் காற்றை தூய்மைப் படுத்துவதின் மூலம் அறிவியல் முன்னேற்றத்திற்கு முயற்சி செய்கிறார். அவர் நிந்தனைக்கு உட்பட்டுவிட்டார் அதாவது வெளியில் உள்ள தூய காற்றை விட்டுச் செல்ல அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது அவர் பூமிக்கு அடியில் செல்ல நிந்திக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் அறிவியல் முன்னேற்றத்தைப் பற்றி பெருமை கொள்கிறார். இது நடந்துக் கொண்டிருக்கிறது. இதுதான் அறிவியல் முன்னேற்றம்.

ஆக மனுதே அனர்த்தம். அது வியாசதேவர். வியாசதேவர், நாரதரின் அறிவுரைப்படி ஸ்ரீமத் பாகவதம் எழுதும் முன், அவர் தியானம் செய்தார் பக்தி - யோகேன மனஸி ஸம்யக் ப்ரணிஹிதே 'மலே அபஸ்யத் புருஷம் பூர்ணம் மாயாம் ச தத் - அபாஸ்ரயம் (ஸ்ரீ.பா. 1.7.4) அவர் பார்த்தார், உணர்ந்தார், அங்கு இரண்டு விஷயங்கள் உள்ளன: மாயா மற்றும் கிருஷ்ணர். மாயாம் ச தத் - அபாஸ்ரயம். கிருஷ்ணரிடம் சரணடைவது. கிருஷ்ணரின்றி மாயாவால் செயல்பட முடியாது. ஆனால் கிருஷ்ணர் மாயாவால் பாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால் கிருஷ்ணர் பாதிப்படைவதில்லை, உணரப்படுகிறார். ஆனால் ஜீவாத்மாக்கள், யயா ஸம்மோஹிதோ ஜீவ, ஜீவாத்மாக்கள் மாயாவின் இருப்பால் பாதிப்படைகிறார்கள். கிருஷ்ணர் பாதிப்படைவதில்லை. எவ்வாறென்றால் சூரியனையும் சூரிய ஒளியையும் போல். சூரிய ஒளி என்றால் ஒளியைத் தூண்டும் துகள்களின் இணைப்பு. அதுதான் சூரிய ஒளி. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறிய, பிரகாசிக்கும் தீப்பொறி. அதேபோல், நாமும் கிருஷ்ணரின் பிரகாசிக்கும் தீப்பொறி போன்றவர்கள். கிருஷ்ணர் சூரியனுடன் ஒப்பிடப்படுகிறார். கிருஷ்ண - சூரிய-சம, மாயா ஹய அந்தகார. மேகம் மாயா இருக்கும் பொது, சூரியன் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் சிறிய துகள்கள், சூரிய வெளிச்சம், அவை பாதிக்கப்படுகிறது. புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சூரியன் இங்கிருக்கிறது, மேலும் பத்து இலட்சம் மைல்களுக்கு கீழ், மேகம் இருக்கிறது. மேலும் மேகம், ஒளியைத் தூண்டும் துகள்களின் இணைப்பை சூரிய வெளிச்சத்தின் ஒரு பகுதியை மறைக்கிறது. ஆக மாயா அல்லது மேகம் சூரியனை மறைக்க முடியாது, ஆனால் அது மிகச் சிறிய பிரகாசிக்கும் துகள்களை மறைக்க முடியும். ஆகையால் நாம் பாதிப்படைகிறோம். கிருஷ்ணர் பாதிப்படைவதில்லை.