TA/Prabhupada 0632 - நான் இந்த உடம்பு அல்ல என்பதை உணர்ந்தால், இயற்கையின் முக்குணங்களை கடப்பேன்



Lecture on BG 2.28 -- London, August 30, 1973

ஆகையினால் சங்கராசாரியர் இந்த தத்துவத்தை எழுதினார்: பிரம்ம சத்தியம் ஜெகன் மித்யா. பிரம்ம என்றால் ஆன்மா உண்மையானது, பௌதிகத்தின் வெளிப்பாடு அல்ல. பௌதிகத்தின் வெளிப்பாடு, நிச்சயமாக, அவர் பொய்யானது என்று கூறுகிறார். நாம் பொய் என்று கூறமாட்டோம். நாம் தற்காலிகமானது என்று கூறுவோம். ஆக நம்முடைய முக்கியமான அக்கறை என்னவென்றால் நான் தற்காலிகமானவனல்ல. என் உடல் தற்காலிகமானது. நான் இப்போது உடலுக்காக உழைக்கிறேன். அதுதான் மாயை. அஹம் மாமெதி (ஸ்ரீ.பா.5.5.8). பிறகு எதுதான் நிதர்சனமான உண்மை? நிதர்சனமான உண்மை யாதெனில் நான் ஆன்மிக துகள், மேலும் முழுமையான ஆன்மா கிருஷ்ணர், அல்லது பகவான். ஆகையினால், பகவானுக்கு சேவை செய்வது அவர் பகுதியான என் கடமையாகும். அதுதான் ஆன்மிக வாழ்க்கை, பக்தி-யோகா, அது ஸ்வரூப என்று கூறப்படுகிறது. மேலும் மற்றோரு இடத்தில், பகவத் கீதை உறுதிப்படுத்துகிறது அதாவது ஸ குணான் ஸமதீத்யைதான் ப்ரஹ்ம-பூயாய கல்பதே (ப.கீ. 14.26). நான் இந்த உடல் இல்லை என்பதை உணர்ந்தவுடன், உடனடியாக பௌதிக இயற்கையின் மூன்று குணங்களை கடக்கிறேன்: சத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம். உடல் சார்ந்த வாழ்க்கையில், பௌதிக இயற்கையின் குணங்களால் ஈர்க்கப்பட்டு செயல்படுகிறேன்.

பாகவதத்திலும் அது குறிப்பிடப்பட்டுள்ளது: யயா ஸம்மோஹிதோ ஜீவ ஆத்மானம் த்ரி - குணாத்மகம் மனுதே 'நர்தம் (ஸ்ரீ.பா. 1.7.5). பௌதிக இயற்கையின் மூன்று குணங்களால் படைக்கப்பட்ட இந்த உடலை நான் ஏற்றுக் கொண்டதால், மேலும் அடையாளம் காட்டிக் கொண்டிருப்பதால், நான் பல அனர்தங்களை உருவாக்கிவிட்டேன். அனர்த என்றால் தேவையற்ற பொருள்கள். தத்-க்ருதம் சாபிபத்யதே. உடல் சார்ந்த உறவு ஏற்பட்ட பிறகு பல தேவையற்ற காரியங்கள், நான் சிந்தனையில் மூழ்கிவிட்டேன், அதாவது "நான், நான் இன்னின்ன நாட்டை சேர்ந்தவன். ஆகையினால், எனக்கு இதை செய்வதற்கு கடமை உள்ளது, நாட்டிற்கு செய்ய வேண்டும், அல்லது சமூகத்திற்கு, அல்லது குடும்பத்திற்கு, அல்லது எனக்கே, அல்லது என் மனைவி மக்களுக்கு." வேதத்தின் கருத்துப்படி, இது மாயையாகும். அஹம் மமேதி (ஸ்ரீ.பா. 5.5.8). ஜனஸ்ய மொஹொ அயம். மொஹொ என்றால் மாயை. நான் மாயையான சூழ்நிலையை உருவாக்கி அதில் சிக்கிக் கொள்கிறேன். இதுதான் என் நிலைப்பாடு. ஆனால் என்னுடைய உண்மையான குறிக்கோள் யாதெனில் எவ்வாறு மாயையிலிருந்து விடுபட்டு என் சுயமான உணர்வை மறுபடியும் பெறுவது, கிருஷ்ண உணர்வு, பிறகு நான் கிருஷ்ண உணர்வை பெற்றால் அதுதான் ஆன்மிக உடல். என் ஆன்மிக உடலின் அடிப்படையில் உடனடியாக செயல் புரிந்தால், அதுதான் முக்தியின் நிலை. அதுதான் தேடப்படுகிறது. பிறகு நான் அறிவு நிறைந்த நித்தியமான நிறைவான வாழ்க்கை வாழ்வேன். அது என்னுடைய பிரச்சனை.

ஆனால் மக்கள் உடல் சம்மந்தப்பட்ட வாழ்க்கை பற்றி கற்பிக்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள், அந்த பிரச்சனைகளுக்கு விடைகாண, அவர்கள் பாவக் காரியங்களில் சிக்குகிறார்கள். இன்று காலையில்தான் நாம், கருவில் இருக்கும் குழந்தையை கொன்றுவிடுவதைப் பற்றி கலந்துரையாடினோம், கருக்கலைப்பது. ஏனென்றால் நமக்கு தெரியவில்லை அதாவது குழந்தையின் உடலில் இருக்கும் ஆன்மா... அது கொல்லப்பட முடியாதது. அது கொல்லப்பட முடியாதது. ஆனால் இதுவும் விளக்கப்பட்டுள்ளது, அதாவது ஆன்மாவின் முடிவை அறிந்தவர், அவர் எவரையும் கொல்லமாட்டார், அதுவுமில்லாமல் ஆன்மாவும் கொல்லப்படாது. ஆனால் நாம் பிரச்சனையை உருவாக்குகிறோம். ஏனென்றால் ஆன்மா இந்த உடலில் புகலிடம் அடைந்துள்ளது மேலும் இந்த தவறான மருத்துவ விஞ்ஞானம் அந்த உடலை அழிக்க அறிவுரை கூறுகிறது, அவ்வாறென்றால் அவர் சிக்கலில் அகப்படுகிறார். அந்த அறிவுரை கூறுபவர்... நான் அறிந்த ஒருவர் இங்கு வருவார், அவருடைய மனைவி ஒரு மருத்துவர் அவருடைய வேலை கர்ப்பிணிகளை பரிசோதித்து, மேலும் அந்த குழந்தை கொல்லப்படலாமா இல்லையா என்று அறிவுரை கூறுவது. இதுதான் தொழில்.