TA/Prabhupada 0636 - கற்றறிந்தவர்கள் ஆத்மா இல்லையென்று சர்ச்சை செய்யமாட்டார்கள்



Lecture on BG 2.30 -- London, August 31, 1973

ஆகையினால், இந்த உடல், பௌதீகமாக இருந்தாலும், ஒரே மூலத்திலிருந்து வந்தாலும், அது தாழ்வானதே. ஆகையால் தேஹி, அல்லது ஆன்மிக ஆத்மா, குணத்தில் பௌதீக இயற்கையைவிட மேலானதாக இருந்தாலும், இருப்பினும், அது பௌதீக இயற்கையில் அடைப்பட்டிருப்பதால், கிருஷ்ணரைப் பற்றி நினைவின்றி உள்ளது. இதுதான் செயல்முறை. ஆனால், இங்கு குறிப்பிட்டிருப்பது போல், அந்த தேஹி ஸர்வஸ்ய, ஸர்வஸ்ய தேஹி, அதே ஆன்மா இருக்கிறது. ஆகையினால், அயோக்கியர்கள் அல்லாதவர்கள், புத்திசாலிகள் மேலும் முழுமையான அறிவு பெற்றவர்கள், அவர்கள் மனிதருக்கும் விலங்குக்கும் இடையே எவ்வித வித்தியாசமும் காண்பதில்லை. பண்டிதா: ஸம-தர்ஷின: ஏனென்றால் அவர் பண்டிதர், கற்றறிந்தவர், ஆன்மிக ஆத்மா அங்கிருக்கிறது என்று அவர் அறிவார். வித்யா-வினய-ஸம்பன்னே ப்ராஹ்மணே (ப.கீ. 5.18). கற்றறிந்த ப்ராமணர்களுக்குள், அந்த ஆன்மா உள்ளது, ஒரே தன்மையான ஆத்மா. வித்யா-வினய-ஸம்பன்னே ப்ராஹ்மணே கவி, பசுவில், ஹஸ்தினி, யானையில், ஷுனி - ஷுனி என்றால் நாயில் - சண்டாள, கீழ் ஜாதிக்காரர், எங்கும் ஆன்மா உள்ளது. மனித இனத்தில் மட்டும் ஆன்மா உள்ளது, அல்லது உயர்ந்த தேவர்களில் மட்டும் ஆன்மா உள்ளது என்பதல்ல, மேலும் பாவப்பட்ட விலங்குகளுக்கு ஆன்மா இல்லை. இல்லை. எல்லோருக்கும் உள்ளது ... தேஹி ஸர்வஸ்ய பாரத. ஆக யாரை நாம் ஏற்றுக்கொள்வது? கிருஷ்ணரின் அறிக்கை அல்லது சில போக்கிரி மெய்யியல்வாதிகள் அல்லது சில சமயவாதிகள்? யாரை நாம் ஏற்றுக்கொள்வது? நாம் கிருஷ்ணரை ஏற்றுக்கொள்ள வேண்டும், பூரண அதிகாரி, பூரண பரமம். அவர் ஸர்வஸ்ய என்று கூறுகிறார். பல சந்தர்ப்பங்களில், கிருஷ்ணர் கூறுகிறார். ஆகையினால், கற்றறிந்தவர்கள், இது போன்ற வித்தியாசம் பார்ப்பதில்லை, அதாவது அதற்கு ஆன்மா இல்லையென்று. எல்லோருக்கும் ஆன்மா உள்ளது. தஸ்மாத் ஸர்வாணி பூதானி. மீண்டும், அவர் கூறுகிறார், ஸர்வாணி பூதானி. ந த்வம் ஷோசிதும் அர்ஹஸி. அது உங்கள் கடமை. கிருஷ்ணர் வெறுமனே ஆத்மா நித்தியமானது என்பதற்கு அழுத்தம் கொடுக்கிறார், அது அளிக்கப்பட முடியாது. பல வழிகளில், உடல் அழியக்கூடியது. "ஆகையால் சண்டையிடுவது இப்போது உங்கள் கடமை. உடல் கொல்லப்படலாம், அழிக்கப்படலாம். ஆனால் ந ஹன்யதே ஹன்யமானே ஷாரீரே (ப.கீ. 2.20). இருப்பினும் இந்த உடலின் அழிவுக்குப் பின்னும், ஆத்மா உயிர் வாழ்கிறது. அவர் மற்றோரு உடலைப் பெறுவார், அவ்வளவுதான்." தேஹே, ததா தேஹாந்தர-ப்ராப்திர் (ப.கீ. 2.13). தேஹாந்தர-ப்ராப்தி:. நீங்கள் மற்றோரு உடல் பெற வேண்டும். மேலும் இது அடுத்த பதத்திலும் விளக்கப்படும்.

போரில் ஈடுபட்டிருக்கும் ஒரு ஷத்திரியனுக்கு, சமய போரில் ... போர் சமய போராக இருக்க வேண்டும். சரியான காரணமாக இருக்க வேண்டும். அவ்வாறென்றால் போரிடுவது சரியானதே. ஆகையால் சமய போரில் ஷத்திரியர் கொன்றுக் கொண்டிருப்பதற்கு அவர் பொறுப்பல்ல, அவர் பாவியும் அல்ல. அது அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ராமணவைப் போல். அவர் அர்ப்பணிக்க சில விலங்குகளை கொடுக்கிறார். அது அவர் கொல்லுகிறார் என்று பொருள்படாது. அதே போல், ஷத்திரியர், அவர் கொல்லுவதில் ஈடுபட்டிருக்கும் போது, அவர் பாவி அல்ல. இது அடுத்த பதத்தில் விளக்கப்படும். "ஆகையால் இது உங்களுடைய கடமை." "நீங்கள் உங்கள் உறவினர்களை அல்லது தாத்தாவை கொல்லுகிறோம் என்று துயரப்பட தேவையில்லை. என்னிடமிருந்து தெரிந்துக்கொள், உறுதி அளிக்கிறேன், அதாவது தேஹி, அவதியோ, உன்னால் கொல்ல முடியாது, அவர் நித்தியமானவர்." இப்போது, தேஹி ஸர்வஸ்ய பாரத, இந்த முக்கியமான குறிப்பை நீங்கள் கவனிக்க வேண்டும், அதாவது அணைத்து ஜீவாத்மாக்களும், அதன் உடல் ஆன்மிக ஆத்மாவின் தளத்தில் வளர்ந்தவை. அந்த உடல் மிகவும் பிரமாண்டமாக அல்லது மிகச் சிறியதாக இருக்கலாம், அதனால் பரவாயில்லை. ஆகையினால், பருப்பொருள் உற்பத்தியாவது அல்லது வளர்வது ஆன்மிகத்தின் தளத்தில். ஆத்மா அல்லது வாழ்க்கை விசை, உயிர் வாழ்வது, பருப்பொருள்களின் பிணைப்பால் என்பதல்ல. இது விஞ்ஞான குறிப்பு. பருப்பொருள் ஆத்மாவைச் சார்ந்துள்ளது. ஆகையினால், இது தாழ்வானது என்று அழைக்கப்படுகிறது. யயேதம் தார்யதே ஜகத். தார்யதே, அது உள்ளடக்குகிறது. ஆத்மா அங்கிருக்கிறது, ஆகையினால், பிரமாண்டமான பேரண்டம் ஆத்மாவின் மேல் சாய்ந்துள்ளது. நித்திய ஆத்மா கிருஷ்ணர், அல்லாது சிறிய ஆத்மா. இரண்டு வகையான ஆத்மா உள்ளது. ஆத்மாவும் பரமாத்மாவும். ஈஸ்வராவும் பரமேஸ்வராவும்.