TA/Prabhupada 0646 - எல்லாவிதமான முட்டாள்தனத்தையும் செய்வதல்ல யோகபயிற்சிLecture on BG 6.2-5 -- Los Angeles, February 14, 1969

பிரபுபாதர்: யார் படிக்கிறார்கள்?

பக்தர்: இரண்டாம் ஸ்லோகம். "துறவு என்பது யோகம்தான் பரம் பொருளுடன் ஒருவரை இணைத்துக் கொள்வது, ஏனெனில் புலன் இன்பத்திலான ஆசையை துறக்காத வரை ஒருவன் யோகியாக முடியாது (ப.கீ 6.2)"

பிரபுபாதர்: இதுதான் யோகப்பயிற்சி. யோகம் என்றால் இணைதல் என்று பொருள். பரம்பொருளின் அங்கமாக இருந்த போதிலும் நம்முடைய கட்டுண்ட நிலை காரணமாக இப்போது நாம் பிரிந்து இருக்கின்றோம். அதே உதாரணம் தான். இந்த விரல் நம் உடலின் ஒரு அங்கம். ஆனால் அது பிரிக்கப்பட்டு துண்டிக்கப்பட்டு விடும் போது அதற்கு மதிப்பில்லை. இந்த உடல் உடன் இணைந்து இருக்கும் வரை இதற்கு இலட்ச ரூபாய் மதிப்பு அல்லது அதையும் விட அதிகம் என்றும் சொல்லலாம் வியாதி என்று வந்து விட்டால் அதனை சரிசெய்வதற்கு எத்தனை பணம் வேண்டுமானாலும் செலவு செய்யலாம். அதுபோலவே... தற்போது கட்டுண்ட பௌதிக வாழ்க்கையில், நாம் பகவானிடம் இருந்து பிரிந்து உள்ளோம். எனவே அவரைப் பற்றி பேசுவதற்கும் அவரையும் அவருடனான நமது உறவையும் புரிந்து கொள்வதற்கும் விருப்பமற்றவர்களாக இருக்கின்றோம் அது வெறும் நேர விரயம் என்று நினைக்கின்றோம் இந்தக் கூட்டத்தில் அனைவருக்கும் தெரியும் இந்தக் கோயிலில் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் கோவில் இங்கு கடவுளைப் பற்றி பேசப்படும் என்று அல்லது வேறு சர்ச் அதில் மக்களுக்கு விருப்பமில்லை. அதனை வெறும் பொழுது போக்காகவே அவர்கள் நினைக்கிறார்கள். ஆன்மீக முன்னேற்றம் என்று கூறுகிறார்களே தவிர அது வெறும் நேர விரயமே. இந்த நேரத்தையும் பணம் ஈட்டுவதற்கு பயன்படுத்தலாமே. அல்லது உணவகத்தில் அல்லது கிளப்பில் புலன் இன்பத்திற்காக செலவழிக்கலாமே கடவுளிடம் இருந்து விலகி இருப்பதற்கு பெயரே புலன் இன்பம்.

புலன் இன்ப த்திற்கு அடிமை ஆனவர்கள் யோக முறைக்கு தகுதி இல்லாதவர்கள் யோக முறை என்பது நீங்கள் எதை வேண்டுமானாலும் புலன் இன்பத்திற்காக செய்துவிட்டு தியானத்தில் வந்து அமர்வதில்லை. அது மாபெரும் புரளி அதில் அர்த்தம் இல்லை. யோக முறை என்பது உணர்தல் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் யம நியம யோகப் பயிற்சியில் எட்டு நிலைகள் உள்ளன. யம, நியம, ஆஸன, த்⁴யான, தா⁴ரணா, ப்ராணாயாம, ப்ரத்யாஹார, ஸமாதி⁴. எனவே நாம் முதன் முதலில் இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டதை பார்ப்போம். பகவான் கிருஷ்ணர் யோக முறை பற்றி எடுத்துக் கூறுவார். கிருஷ்ணர், புலன் இன்பத்தை துறக்காத ஒருவர் யோகியாக முடியாது என்று ஆரம்பத்திலேயே கூறுகிறார். எனவே எவனொருவன் புலன் இன்பத்தில் ஈடுபடுகிறானோ அவன் மூடன். அவன் யோகி அல்ல அவன் யோகியாக முடியாது. யோகமுறை என்பது முறையான பிரம்மச்சரியம் பாலுறவு வாழ்க்கை இல்லை. அதுவே யோகமுறை. பாலுறவு வாழ்வில் ஈடுபடுபவனால் யோகியாக முடியாது. யோகி என்று தன்னைக் கூறிக் கொண்டவர்கள் உங்கள் நாட்டிற்கு வந்து "உங்களுக்கு என்ன விருப்பமோ அதைச் செய்யலாம். நீங்கள் தியானம் செய்யுங்கள் நான் சில மந்திரங்களை தருகிறேன்" என்றனர். அது மூடத்தனம். இங்கு புலன் இன்பத்தை கைவிடாத வரை யோகியாக முடியாது என்பது ஆதாரப்பூர்வ அறிக்கையாக கூறப்படுகிறது இதுவே முதல் நிபந்தனை. தொடருங்கள்.

பக்தர்: மூன்றாவது சுலோகம்: "எட்டு நிலைகள் கொண்ட யோக முறையில் ஆரம்ப நிலையில் இருப்பவருக்கு கர்மம் வழியாகச் சொல்லப்படுகிறது. யோகத்தின் மேல்நிலை அடைந்தவருக்கு பௌதீக செயல்கள் அனைத்தும் நிறுத்தப்படுவது வழியாகச் சொல்லப்படுகிறது.‌ (ப.கீ 6.3)

பிரபுபாதர்: ஆமாம் இரண்டு நிலைகள் இருக்கின்றன. ஒன்று, பூரண தளத்தை அடைவதற்காக செய்யப்படும் யோகப் பயிற்சி மற்றொன்று அந்த பூரண தளத்தை அடைந்த நிலை. எனவே பூரண தளத்தில் இல்லாதவரை அதனை அடைய முயற்சி செய்வது அந்த நிலையில் பல செயல்கள் செய்ய வேண்டியிருக்கும். ஆசன முறை யமா நியமா. பொதுவாகவே உங்கள் நாட்டில் பல யோக சமுதாயங்கள் இருக்கின்றன. அவை ஆசன முறையைப் பற்றி சொல்கின்றன. எப்படி உட்கார்வது பல தோரணைகள். இது உதவிகரமாக இருக்கும். ஆனால் அந்த முறை உண்மையான தளத்திற்கு செல்வதற்கு வழிவகுக்கும். அதன் வழிகளே அவை. உண்மையான யோக முறையின் பூரண நிலை உடல் சம்பந்தப்பட்ட பயிற்சிகளில் இருந்து வேறுபட்டது. அதிலும் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று பூரண தளத்தை அடைய முயற்சி செய்வது மற்றொன்று பூரண தளத்தை அடைந்த நிலை.