TA/Prabhupada 0654 – நீங்கள் சுய முயற்சியால் கடவுளைக் காண இயலாது – ஏனெனில் உமது இந்திரியங்கள் அனைத்தும் அ



Lecture on BG 6.6-12 -- Los Angeles, February 15, 1969

பகவத்கீதையில் சொல்லியுள்ளது போல.:

பத்ரம் புஷ்பம் பலம் தோயம்
யோ மே பக்த்யா ப்ரயச்சதி
தத் அஹம் பக்த்யுபஹ்ருதம்
அஷ்நாமி ப்ரயதாத்மன:
(ப.கீ. 9.26)

"அன்புடனும் பக்தியுடனும் ஒருவன் எனக்கு இலையோ பூவோ பழமோ நீரோ அளித்தால் அதை நான் ஏற்கிறேன்." அவர் எப்படி உண்கிறார் அதை உன்னால் பார்க்க முடியாது - ஆனால் அவர் உண்கிறார். அதை நாம் தினமும் அனுபவிக்கின்றோம். சம்பிரதாய முறைப்படி அவருக்கு நாம் சமர்ப்பிக்கின்றோம், அதன்பின் அந்த உணவில் சுவை உடனடியாக மாறுகின்றது. அதுவே நடைமுறை. அவர் உண்கிறார், ஆனால் அவர் பூரணமாக இருப்பதனால், நம்மைப்போல அவர் உண்பதில்லை. நான் உனக்கு ஒரு தட்டு நிறைய தின்பண்டம் தந்தால் அதை நீ முழுவதும் உண்டு விடுவது போல் அல்ல. பகவான் பசியுடன் இருப்பது இல்லை, ஆனாலும் உண்கிறார். உண்டுவிட்டு அவற்றை அப்படியே வைத்துவிடுகிறார். பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணம் ஏவாவஷிஷ்யதே (ஸ்ரீ ஈஷோபனிஷத், பிரணாமம்). பகவான் பூரணம் ஆனவர், நீ அளிக்கும் உணவு பொருட்களை ஏற்றுக் கொண்ட பிறகும், அது அப்படியே இன்னும் மீதமிருக்கும். அவரால் தன் கண்களால் உண்ண முடியும். அங்கானி யஸ்ய ஸகலேந்த்ரிய-வ்ருத்திமந்தி. என்று பிரம்ம சம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது. பகவானுடைய ஒவ்வொரு அவயவங்களும் மற்ற எல்லா அங்கங்களின் திறனையும் கொண்டவை. உன்னால் உன் கண்களால் பார்க்க முடியும் ஆனால் கண்களால் உண்ண முடியாது அதுபோல. ஆனால் பகவானும் நாம் சமர்ப்பிக்கும் உணவை கண்களால் பார்க்கின்றார் அதுவே உண்பது ஆகும்.

தற்போது இந்த விஷயங்களை புரிந்து கொள்ள முடியாது. அதனால்தான் பத்மபுராணம் கூறுகிறது, ஒருவர் உன்னதமான பகவத் சேவையில் ஈடுபட்டு ஆன்மீகத்தில் மூழ்கும்போது தான், பகவானுடைய உன்னத நாமம், ரூபம், குணம் மற்றும் லீலைகள் அவருக்கு வெளிப்படுகின்றன. உன்னுடைய முயற்சியினால் நீ புரிந்து கொள்ள முடியாது பகவானே அதனை வெளிப்படுத்துவார். இப்போது இருட்டாக இருக்கிறது. உன்னால் சூரியனைக் காண முடியாது என்பதைப்போல. " அட என்னிடம் மிக சக்திவாய்ந்த டார்ச்லைட் இருக்கிறது அதனை கொண்டு சூரியனை உனக்கு காட்டுகிறேன் வா." என்று சொன்னால் உன்னால் காட்ட முடியாது. சூரியன் தானாகவே அடுத்த நாள் உதயமாகும் பொழுது தான் உன்னால் பார்க்க முடியும். அதுபோல்தான் இறைவனை உன்னுடைய முயற்சியால் காண முடியாது ஏனெனில் உன்னுடைய புலன்கள் எல்லாம் முட்டாள் தனமானவை. உன்னுடைய குணங்களை தூய்மைப்படுத்தி நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும், இறைவனே எப்போது ஆனந்தம் அடைந்து தானே வெளிப்படுத்துகிறாரோ அந்த நேரத்திற்காக காத்திருக்க வேண்டும். அதுவே முறை. நீ அதனைக் கேள்வி கேட்க முடியாது. "எனது அன்பு இறைவனே! அன்பு கிருஷ்ணா, சீக்கிரம் வா. என்னை வந்து பார்." அல்ல. கடவுள் உன் விருப்பங்களை நிறைவேற்றும் சேவகன் அல்லர். எனவே அவர் ஆனந்த படும்பொழுது உன்னால் பார்க்க முடியும்.

எனவே நமது செயல் முறை அவரே நம் முன் தோன்றும் வண்ணம் அவரை எப்படி ஆனந்த படுத்துவது என்பதுதான். அதுவே உண்மையான செயல்முறை... உன்னால் முடியாது.... இவர்கள் முட்டாள்தனமான கடவுளை தவறாக புரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு கடவுளைப் பார்க்க முடியாததால் "நான் கடவுள்" என்று கூறுபவர் யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப் படுகிறார். ஆனால் அவர்களுக்குத் தெரியாது கடவுள் யாரென்று. "நான் உண்மையைத் தேடுகிறேன்" என்று ஒருவர் சொன்னார். அவருக்கு உண்மை என்ன என்று தெரிந்து இருக்க வேண்டும். உண்மையை எப்படி தேட முடியும்? உங்களுக்கு தங்கம் வாங்க வேண்டும் என்றால், உங்களுக்கு ஏட்டளவிலாவது தெரிந்திருக்க வேண்டும், தங்கம் என்றால் என்ன என்று சிறிதேனும் அனுபவம் இருக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் உங்களை ஏமாற்றி விடுவார்கள். அதுபோல்தான் இந்த மக்களும் ஏமாற்றப்படுகிறார்கள், தங்களை கடவுள் என்று கூறிக்கொள்ளும் அயோக்கியர்களை ஏற்றுக் கொள்வதன் மூலமாக. ஏனென்றால் அவர்களுக்கு கடவுள் என்றால் என்ன என்று தெரிவதில்லை. யாரேனும் வந்து "நான் தான் கடவுள்," என்றால் அந்த அயோக்கியனை அவன் அயோக்கியன் "நானே கடவுள்," என்று கூறுபவர் அயோக்கியன். அந்த அயோக்கியத்தனமான சமுதாயம், ஒரு அயோக்கியனை கடவுளாக ஏற்கிறது. கடவுள் அப்படிப்பட்டவர் அல்ல கடவுளைப் பார்ப்பதற்கு ஒருவர் தன்னை தகுதியாக்கிக் கொள்ள வேண்டும். அதுவே கிருஷ்ண பக்தி. ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ ஸ்வயம் ஏவ ஸ்புரத்யத: [பக்தி-ரஸாம்ருத-ஸிந்து 1.2.234]. நீ பகவத் சேவையில் உன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பொழுது பகவானை காணும் தகுதியை நீ அடைகிறாய். இல்லையேல் அது சாத்தியமில்லை. மேலும் படிக்கவும்.