TA/Prabhupada 0655 – மதத்தின் நோக்கம் கடவுளை அறிவதும், கடவுளிடம் அன்பு செலுத்த கற்பதுமாகும்
Lecture on BG 6.6-12 -- Los Angeles, February 15, 1969
பக்தர்: "பகவத் கீதை, கிருஷ்ண பக்தி விஞ்ஞானம். உலகியல் பாண்டித்தியத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவர் கிருஷ்ண பக்தனாக முடியாது."
பிரபுபாதர்: ஆமாம். உங்களுக்கு சில பட்டங்கள் M.A., Ph.D., D.A.C., போன்று கிடைத்துவிட்டதால் மட்டும், நீங்கள் பகவத் கீதையை புரிந்து கொண்டு விட முடியுமா, அது சாத்தியம் இல்லை. இது ஆன்மீக அறிவியல். இதனைப் புரிந்து கொள்ள வேறு விதமான அறிவு தேவை. அந்த புலன் அறிவை நாம் பக்தித் தொண்டு செய்து தூய்மை படுத்தி உருவாக்க வேண்டும். இல்லையேல், பெரும் பண்டிதர்கள், மருத்துவர்கள், அறிஞர்கள் போன்றோர் கூட கிருஷ்ணர் யார் என்பதை தவறாகப் புரிந்து கொள்கின்றனர். அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. எனவே கிருஷ்ணர் எப்படி இருக்கிறாரோ அப்படியே வருகிறார். அஜோ 'பி ஸந்ன் அவ்யயாத்மா (ப.கீ. 4.6). அவர் பிறப்பற்றவராக இருந்தாலும், கடவுள் இப்படித்தான் இருப்பார் பார்த்துக்கொள் என்று நமக்கு அறிவிப்பதற்காக வருகிறார். மேலும் படியுங்கள்.
பக்தர்: "தூய்மையான உணர்வுடைய ஒருவருடன் பழகுவதற்கு ஒருவர் மிகவும் பாக்கியவானாக வேண்டும். கிருஷ்ண பக்தன் கிருஷ்ணன் அருளாலேயே பரம ஞானத்தை உணர்கிறான்."
பிரபுபாதர்: ஆமாம், கிருஷ்ணர் அருளாலே அன்றி ஏட்டு படிப்பினால் அல்ல. கிருஷ்ணரின் அருளை நாம் அடைய வேண்டும், அப்போதுதான் கிருஷ்ணரை உணர முடியும். அப்போது கிருஷ்ணரை நாம் காண முடியும். கிருஷ்ணருடன் பேசமுடியும், அனைத்தும் செய்ய முடியும். அவர் ஒரு நபர். மிக உன்னதமான நபர். அதுவே வேதவாக்கியம். அவரே உன்னதமான நபர் அல்லது சனாதனமானவர். நாம் அனைவரும் நித்தியமானவர்கள். இப்போது நாம் இந்த உடல் என்னும் கூட்டுக்குள் அடைபட்டுக் இருக்கின்றோம். நமக்கு பிறப்பு இறப்பை சந்திக்கிறோம். ஆனால் உண்மையில் நமக்கு பிறப்பு இறப்பு இல்லை. நாம் நித்தியமான ஆன்மாக்கள். நம் செயல்களுக்கும் நம் ஆசைகளுக்கும் தகுந்தார்போல், ஒரு உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு மேலும் மற்றொரு உடலுக்கு பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இது நடந்து கொண்டே இருக்கிறது. உண்மையில் நமக்கு பிறப்பு இறப்பு இல்லை. இது பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது; ந ஜாயதே ந ம்ரியதே வா. (BG 2.20) உயிர்வாழி பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை. அது போல் தான் இறைவனும் நித்யம் நீயும் நித்தியம். பூரணத்துடன் உன்னுடைய நித்தியமான உறவை நிறுவுவது... நித்யோ நித்யானாம் சேதனஷ் சேதனானாம். உயிர்வாழிகளிலேயே அவர்தான் உத்தம புருஷர். நித்திய மானவர்களில் எல்லாம் உத்தம நித்தியமானவர்.
எனவே கிருஷ்ண பக்தியின் மூலம் நம் புலன்களை தூய்மை செய்யும் போது இந்த ஞானம் நமக்கு வரும் அதன் மூலம் கடவுளை காணலாம். மேலும் படியுங்கள்.
பக்தர்: கிருஷ்ணர் அருளால் கிருஷ்ண உணர்வு கொண்ட மனிதன் பரம ஞானத்தை உணர்ந்து இருப்பான், ஏனெனில் அவன் தூய பக்தி தொண்டில் திருப்தியாக இருக்கிறான். பரம ஞானத்தினால் ஒருவன் பூரணம் ஆகிறான். அத்தகைய பூரண அறிவினால் ஒருவர் தன்னுடைய கருத்துக்களில் ஸ்திரமாக நிற்கமுடியும், ஆனால் படிப்பு கொடுக்கும் ஞானத்தால் ஒருவர் ஏமாற்ற படுவதோடு அதிலுள்ள மாறுபாடுகள் கண்டு குழப்பமும் அடைகிறார். பரம்பொருளை உணர்ந்த ஆன்மாவே தன்னடக்கம் கொண்டவர், ஏனெனில் அவர் கிருஷ்ணரிடம் சரணடைந்து இருக்கிறார். அவர் உன்னதமானவர் ஏனெனில் சாதாரண பாண்டித்தியம் கொண்டு அவரால் செய்வதற்கு ஒன்றுமில்லை.
பிரபுபாதர்: ஆமாம். ஒருவர் படிப்பறிவு இல்லாதவராக இருந்தாலும், அவர் தாழ்மையுடன் ஆன்மிகத் தொண்டில் ஈடுபட்டால் இறைவனை உணர முடியும். ஒருவர் படித்தவராக இருக்கலாம், பெரும் பண்டிதராக இருக்கலாம், ஆனால் அவரால் இறைவனை உணர முடியாது. பகவான் ஜட நிலைகளால் கட்டுப்படுத்தப்படுவது இல்லை. அவரே பரமாத்மா. அதுபோல்தான் பகவானை உணரும் வழிமுறையும் ஜட நிலைகளுக்கு கட்டுப்படுவதில்லை. நீ ஏழையாக இருப்பதால் உன்னால் கடவுளை அறிய முடியாது என்பதில்லை. அல்லது நீ செல்வந்தனாக இருப்பதால் உன்னால் கடவுளை அறிய முடியும் என்பதும் இல்லை. கல்வி அறிவு இல்லாததால், உன்னால் கடவுளை அறிய முடியாது என்பதும் இல்லை. நீ அதிகம் படித்தவன் என்பதால் கடவுளை அறிந்து விடலாம் என்பதும் இல்லை. அவர் நிபந்தனையற்றவர். அப்ரதிஹதா. ஸ வை பும்ஸாம் பரோ தர்ம: இதுவே பகவத்கீதையில் முதல் தரமான தர்ம கொள்கை என்று கூறப்படுகிறது.
இந்துமதம் மிகச் சிறந்த மதம் என்று பாகவதம் கூறுவதில்லை. கிறிஸ்தவ முதன்மையானது இஸ்லாம் முதன்மையானது வேறு எந்த மதத்தையும் அவ்வாறு கூறுவதில்லை. பல்வேறுவிதமான சமயங்களை உருவாக்கி விட்டோம். ஆனால் பாகவதம் கூறும் முதன்மையானது தர்மக் கொள்கை. எது? ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே (ஸ்ரீ.பா. 1.2.6). எந்த தர்மம் உன்னுடைய பக்தி தொண்டையும் பகவத் அன்பையும் முன்னேற்ற உதவுகிறதோ அதுவே. அவ்வளவுதான். இதுதான் உயர்தரமான தர்மத்தின் சமயத்தின் விளக்கம். இந்த சமயம் முதல் தரமானது அந்த சமயம் தரமற்றது என்று நாம் ஆராயவில்லை. நான் சொல்வது போல இந்த ஜட உலகில் முக்குணங்கள் இருப்பது உண்மைதான். எனவே அந்த குணங்களுக்கு தகுந்தார்போல் சமயங்களும் உருவாக்கப்பட்டன. ஆனால் சமயங்களின் நோக்கம் கடவுளை உணர்வது தான். கடவுளின் பால் எப்படி அன்பு செலுத்துவது. இதுவே நோக்கம். எந்த சமய முறையாக இருந்தாலும். அது பகவத் அன்பை உனக்குக் கற்றுக் கொடுக்குமானால், அதுவே உயர் தரமானது. இல்லையேல் அதனால் பயனில்லை. நீ உன் சமயக் கொள்கைகளை நல்ல முறையில் கண்டிப்புடன் கடைப்பிடிக்கலாம், ஆனால் உனக்கு இறைவன் மேல் அன்பு அறவே இல்லை. ஜடப் பொருட்களின் மேல் உனக்குள்ள அன்பு உயர்கிறது என்றால் அது சமயம் இல்லை. பாகவதத்தின் தீர்ப்புப்படி: ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே (ஸ்ரீ.பா. 1.2.6). அப்ரதிஹதா. அஹைதுக்யப்ரதிஹதா. அந்த சமய வழிமுறை காரணம் அற்றது. எந்த தடங்கலும் இல்லாதது. அத்தகைய சமயக் கொள்கையின் வழிமுறைகளை அடைவோமானால் அனைத்து விதத்திலும் ஆனந்தம் கொள்வோம் என்பதை அறியலாம். இல்லையேல் வேறு சாத்தியக்கூறு இல்லை.
ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே (ஸ்ரீ.பா. 1.2.6). அதோக்ஷஜ. இறைவனின் மற்றொரு பெயர் அதோக்ஷஜ. அதோக்ஷஜ என்றால் இறைவனைக் காண்பதற்கான அனைத்து ஜட முயற்சிகளையும் வெல்லுதல். அதோக்ஷஜ என்றால் சோதனை செய்த அறிவு. கடவுளை சோதனை செய்து அறிதல் முடியாது. அதனை வேறு விதமாகத்தான் அறிய வேண்டும். கீழ்ப்படிந்து கேட்டல் மற்றும் ஆன்மிகத் தொண்டு புரிதல் இவையே வழி. அப்போதுதான் நீ கடவுளை உணரலாம். எனவே எந்த சமயக் கொள்கை உனக்கு கற்றுக் கொடுத்து உதவுகிறதோ, இறை அன்பை வளர்த்துக் கொள்வதற்காக எந்தக் காரணமும் இன்றி உதவுகிறதோ... "கடவுள் என் புலன் இன்பத்திற்காக நான் வேண்டியதை எல்லாம் தருகிறார் எனவே நான் அவரை விரும்புகிறேன்." அது அன்பு அல்ல. எதுவும் இல்லாமல்.... பகவான் உயர்ந்தவர். பகவானே என் தந்தை. அவருக்கு அன்பு செய்வது என்னுடைய கடமை அவ்வளவுதான். கொடுக்கல் வாங்கல் இல்லை. "கடவுளே நீ என் வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய் நான் உன்னை விரும்புகிறேன்" இல்லை. அன்றாட உணவினை பகவான் மிருகங்கள், நாய், பூனைக்கு கூட தான் தருகிறார். அதாவது பகவான் அனைத்துக்கும் தந்தையாவார் அனைவருக்கும் அவர் உணவு வழங்குவார். எனவே அதற்குப் பெயர் அன்பு அல்ல. அன்பு என்பது காரணமின்றி வருவது. இறைவன் கூட எனக்கு உணவு வழங்குவதில்லை, ஆனால் நான் இறைவனை விரும்புகிறேன். அதுவே அன்பு. அதுதான் அன்பு.
சைதன்ய மஹாபிரபு சொல்கிறார்: ஆஷ்லிஷ்ய வா பாத-ரதாம் பினஷ்டு மாம் (சை.ச. அந்திய 20.47). "நீ என்னை ஏற்றுக்கொள் அல்லது என்னை ஏறி மிதித்துக் கொண்டு சென்றுவிடு. அல்லது என் கண்முன்னேயே வராதே. உன்னை காணாமல் நான் நெஞ்சு உடைந்து போகிறேன். இருந்தும் நான் உன்னை விரும்புகிறேன்." அதுவே தூய்மையான இறைபக்தி. நாம் இறைவனை அந்த உயர்ந்த நிலையில் இருந்து அன்பு செலுத்துவோமானால் பூரண ஆனந்தத்தை உணரலாம். இறைவன் ஆனந்த மயமானவன், அதுபோலவே நாமும் ஆனந்தமயமானவர்கள். அதுவே பூரணமான உண்மை. மேலும் படியுங்கள்.