TA/Prabhupada 0657 – இந்த யுகத்தில் நமக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரே இடம் கோயிலாகும்



Lecture on BG 6.6-12 -- Los Angeles, February 15, 1969

பக்தர்: "யோகப் பயிற்சி செய்வதற்கு ஒருவர் தனிமையான இடத்திற்கு செல்ல வேண்டும்... (ப.கீ. 6.11)."

பிரபுபாதர்: இதுவே பரிந்துரை, இதை எப்படி பயிற்சி செய்ய வேண்டும்? உங்கள் நாட்டில், யோகப் பயிற்சி மிகவும் பிரபலமாக உள்ளது. யோக மையங்கள் என்ற பெயரில் பல இருக்கின்றன. ஆனால் யோகப் பயிற்சியை எப்படி செய்ய வேண்டும் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்படியாக பரிந்துரை செய்கிறார். மேலே படியுங்கள்.

தாமல் கிருஷ்ணா: "ஒருவர் தனிமையான இடத்திற்கு சென்று குஷப் புல்லை விரித்து, அதனை மான் தோலால் மூடி அதன் மேல் மெல்லிய துணி பரப்ப வேண்டும். ஆசனம் மிக உயரமாகவும் இருக்கக்கூடாது மிக தாழ்ந்ததாகவும் இருக்கக்கூடாது, புனித இடத்தில் இருக்க வேண்டும். பின்னர் யோகி அதன் மேல் சரியாக உட்கார்ந்து கொண்டு மனதையும் புலனையும் கட்டுப்படுத்தி யோகப்பயிற்சி செய்ய வேண்டும், மனதை தூய்மைப்படுத்தி புத்தியை ஒருமுகப்படுத்த வேண்டும்."

பிரபுபாதர்: முதல் பரிந்துரை எப்படி உட்கார வேண்டும் எங்கு உட்கார வேண்டும் என்பதுதான். உட்கார்ந்து யோகம் செய்வதற்கான சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே முதல் பரிந்துரை. மேலே தொடருங்கள்.

தாமல் கிருஷ்ணா: "பொருளுரை: புனித இடம் என்பது பாதயாத்திரை தலத்தை குறிக்கிறது. இந்தியாவில் யோகிகள், ஆன்மீகவாதிகள் அல்லது பக்தர்கள் அனைவருமே வீட்டை விட்டு, பிரயாக, மதுரா, பிருந்தாவனம், ரிஷிகேஷ், ஹரித்துவார் போன்ற புனிதத் தலங்களில் சென்று வசிக்கின்றனர். அங்கு யோகப் பயிற்சி செய்கின்றனர்."

பிரபுபாதர்: இப்போது நீங்கள் ஒரு புனிதத் தலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால். இந்தக் காலத்தில் எத்தனை பேருக்கு புனிதத் தலத்தை தேர்ந்தெடுக்க முடிகிறது? தனது வயிற்றுப் பாட்டுக்காக குறுகிய நகரங்களில் வாழவேண்டி இருக்கிறது. புனிதத்தலம் என்ற பேச்சுக்கு இடம் எது? எனவே புனிதத் தலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் யோகப் பயிற்சி செய்வது எப்படி? அதுதானே முதல் பரிந்துரை. எனவே பக்தி யோக முறையில் கோவிலே புனிதத்தலம். இங்கு வாழ்வது நிர்குணம் ஆன்மீகம். நகரம் என்பது ரஜோகுணத்திற்கான இடம் என்பது வேத வாக்கியம். காடு சத்துவ குணத்திற்கான இடம். கோவில் ஆன்மீக மயமானது. நகரத்திலும் மாநகரத்தில் வாழ்வது ரஜோ குண இடம். ரஜோகுணம் இடத்தில் வாழ வேண்டாம் என்றால் காட்டிற்குச் செல்லலாம். அது சத்துவகுண இடம். ஆனால் கோவிலோ கடவுளின் கோவிலும் ரஜோ சத்துவ குணங்களுக்கு அப்பாற்பட்டது. எனவே இந்தக் காலத்தில் கோவில் மட்டுமே தனிப்பட்ட இடமாகும். தனிமைகாக காட்டிற்குச் செல்வது சாத்தியமில்லை. யோகப் பயிற்சி செய்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக, தேவை இல்லாதவைகளை எல்லாம் செய்வது யோகப் பயிற்சி ஆகாது. யோகப் பயிற்சியை எப்படி செய்வது என்பதற்கு இங்கே பரிந்துரை உள்ளது. தொடருங்கள். ஆமாம்.

தாமல் கிருஷ்ணா: "ப்ருஹன்-நாரதீய புராணத்தில் கூறப்பட்டுள்ளது, கலியுகத்தில், இந்த யுகத்தில் அல்லது காலத்தில், மக்களின் வாழ்நாள் குறைவாக இருக்கிறபடியால், ஆன்மீக உணர்வு மெதுவாகத்தான் ஏற்படுகிறது, அதுவும் பல இன்னல்களால் தடைபடுகிறது, பகவானின் திவ்ய நாமங்களை ஜெபிப்பது சிறந்த ஆன்மீக உணர்வாகும். சண்டை சச்சரவுகள் நிரம்பிய இக்காலத்தில் முக்திக்கான ஒரே வழி பகவான் நாமங்களை ஜெபிப்பது. வெற்றிக்கு வேறு வழி இல்லை"

பிரபுபாதர்: ஆமாம். அதுவே பிரகன் நாரதீய புராணத்தின் பரிந்துரை.

ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம்
கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ கதிர் அன்யதா
(சை.ச. ஆதி 17.21)

ஹரேர் நாம, பகவானின் திவ்ய நாமங்களை மட்டுமே ஜெபியுங்கள். அதுவே தன்னை உணர்வதற்கும், மனதை ஒருமுகப்படுத்துவதற்கும், தியானத்திற்கும் ஒரே வழி. வேறு வழி இல்லை வேறு வழியே இல்லை வழியே இல்லை. மற்ற பயிற்சிகள் பயனற்றவை. ஒரு சிறு குழந்தை கூட இதில் பங்கேற்கலாம் அதுவே இதன் சிறப்பு. இது அனைவருக்குமானது.