TA/Prabhupada 0671 – மகிழ்ச்சி என்பது இரண்டு – கிருஷ்ணர் மற்றும் நீங்கள்
Lecture on BG 6.16-24 -- Los Angeles, February 17, 1969
பக்தர்: தூய மனதால் தன்னைக் கண்டு, தன்னில் இன்பத்தை அனுபவிப்பதற்க்கு ஒருவனிடம் உள்ள திறனிலிருந்து இப்பக்குவ நிலையை உணரலாம்.
பிரபுபாதா: தூய மனம். இதுவே தூய மனம். தூய மனம் என்றால், "நான் கிருஷ்ணருக்கு சொந்தமானவன்" என்று புரிந்து கொள்வதே. இதுதான் தூய மனம். மனம், இப்போது என் மனம் களங்கப்பட்டுள்ளது. ஏன்? நான் இதற்குச் சொந்தமானவன், நான் அதற்குச் சொந்தமானவன்... இப்படியாக நான் நினைத்துக் கொள்கிறேன். ஆனால் என் மனம் "நான் கிருஷ்ணருக்கு சொந்தமானவன்" என்று எப்போது உறுதியாக நினைக்கின்றதோ, அதுதான் என் பக்குவ நிலை. ஆம்.
பக்தர் : "...அந்த இன்ப நிலையில், அவன் திவ்யமான புலன்களின் மூலம் எல்லையற்ற திவ்யமான ஆனந்தத்தை அனுபவிக்கிறான்..."
பிரபுபாதா: ஆத்மாவில் ஆனந்தம், அதாவது பரமாத்மாவான கிருஷ்ணரிடத்தில் ஆனந்தம் காண்பது. யோகப் பயிற்சி. அதில் நான் ஒரு தனி ஆத்மா. நான் பரமாத்மாவான விஷ்னுவுடன் ஸமாதியில் இருக்கும்போது, அதுவே ஸ்திரமான மனம். எனவே அப்பொழுது ஆத்மாவும் பரமாத்மாவும் இன்பம் அனுபவிப்பர். தனிமையில் ஒருவர் இன்பத்தை அனுபவிக்க முடியாது. அதற்கு இருவர் வேண்டும். நீங்கள் தனிமையில் இன்பத்தை உணர்ந்தது உண்டா? இல்லை. எனவே, தனிமையில் இனிமை சாத்தியமல்ல. இன்பம் என்றால் இருவருக்கானது. கிருஷ்ணரும், நீங்களும். பரமாத்மா மற்றும் ஜீவாத்மா. இதுவே வழிமுறை. நீங்கள் தனிமையில் இன்பம் அனுபவிக்க முடியாது. அது உங்கள் நிலை அல்ல. சரி, மேலே சொல்லவும்.
பக்தர்: இவ்வாறு நிலை பெற்றவன், உண்மையிலிருந்து என்றும் வழுவுவதில்லை, இதைவிட உயர்ந்த இலாபம் ஏதுமில்லை என்று நினைக்கிறான். அத்தகு நிலையில் அமைந்தவன், மாபெரும் துயரங்களுக்கு மத்தியிலும் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை. இதுவே...
பிரபுபாதா: மிகக் கடினமான சூழ்நிலையிலும், "நான் கிருஷ்ணருடைய அம்சம்" என்பதில் உறுதியாக இருந்தீர்களென்றால், மிகக் கடினமான சூழ்நிலையிலும் அவ்வாறு இருந்தால், அதுவே சரணாகதியாகும். கிருஷ்ணர் உங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் உங்கள் முயற்சியைத் தொடரருங்கள், புத்தியை பயன்படுத்துங்கள், ஆனால் கிருஷ்ணரிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். பாலஸ்ய நேஹ பிதரௌ ந்ருஸிம்ம (ஸ்ரீமத் பாகவதம் 7.9.19). கிருஷ்ணர் நிராகரித்தால், பிறகு யாருமே உங்களைக் காப்பாற்ற முடியாது. வேறு எந்த முயற்சியும் உங்களைக் காப்பாற்ற முடியாது. அப்படி நினைக்காதீர்கள்... ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். சிறந்த மருத்துவர்கள் அவனுக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த மருந்தும் அளிக்கப்படுகிறது. ஆனால் அவன் உயிருக்கு என்ன உத்திரவாதம்? இல்லை. உயிருக்கு உத்திரவாதம் இல்லை. மிகச் சிறந்த மருத்துவர்கள், மிகச் சிறந்த மருந்தை அளித்தாலும், கிருஷ்ணர் நிராகரித்துவிட்டால், அவன் மரணமடைவான். மேலும் கிருஷ்ணரின் பாதுகாப்பு இருந்தால், சிறந்த மருத்துவ சிகிச்சை இல்லையென்றாலும் அவன் பிழைத்துக் கொள்வான். எனவே, கிருஷ்ண உணர்வில் நிலை பெற்ற, கிருஷ்ணரிடம் சரணடைந்த ஒருவன்... சரணடைதல் என்பதன் ஒரு பகுதி, கிருஷ்ணர் என்னைப் பாதுகாப்பார் என்பதாகும். பிறகு, நீங்கள் ஒரு குழந்தையைப் போல ஆனந்தமாக இருப்பீர்கள். அந்தக் குழந்தை, நம்பிக்கையுடன், தன் பெற்றோர்களிடத்தில் சரணடைந்துள்ளது. "என் தாயும், தந்தையும் என்னுடன் இருக்கிறார்கள்." எனவே அவன் ஆனந்தமாக உள்ளான். கதா³ஹம் ஐகாந்திக-நித்ய-கிங்கர꞉ (ஸ்தோத்ர-ரத்ன 43). உங்களைப் பாதுகாக்கவும், காப்பாற்றவும் ஒருவர் இருக்கிறார் என்றால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் அல்லவா? ஆனால், உங்கள் பொறுப்பில், நீங்களே எல்லாவற்ரையும் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், அப்போது மகிழ்ச்சியுடன் இருப்பீர்களா? அதைபோலவே, கிருஷ்ண உணர்வில், முழு நம்பிக்கையுடன், "கிருஷ்ணர் எனக்குப் பாதுகாப்பு அளிப்பார்" என்பதில் உறுதியாக இருந்தால், மேலும், கிருஷ்ணருக்கு உண்மையாக இருந்தால், அதுவே மகிழ்ச்சியின் தரம். மற்ற எந்த வகையிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அது சாத்தியமல்ல. ஏகோ ப³ஹூனாம்ʼ வித³தா⁴தி காமான் (கட² உபநிஷத்³ 2.2.13).
அது தான் உண்மை. நீங்கள் கிருஷ்ணருக்கு எதிரான நிலையில் இருந்தாலும் கூடக் கிருஷ்ணர் உங்களுக்குப் பாதுகாப்பளிக்கிறார். கிருஷ்ணரின் பாதுகாப்பு இல்லாமல், உங்களால் ஒரு நொடி கூட வாழ முடியாது. அவர். அந்த அளவிற்கு கருணையுள்ளவர். ஆனால், அதை நீங்கள் ஒப்புக் கொண்டு, அதை ஏற்றுக் கொள்ளும் போதுதான், நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். இப்போதும் உங்களுக்குக் கிருஷ்ணர் பாதுகாப்பு அளிக்கிறார், ஆனால், நீங்க்ள் உங்கள் வாழ்க்கையை உங்கள் பொறுப்பில் வைத்துக்கொண்டுள்ளதால், நீங்கள் இதை உணர முடியாது. எனவே கிருஷ்ணர் உங்களுக்குச் சுதந்திரம் அளிக்கிறார், "சரி, உன் இஷ்டத்திற்கு செயல்படு. என்னால் முடிந்தவரை நான் உன்னைப் பாதுகாக்கிறேன்." ஆனால், நீங்கள் கிருஷ்ணரிடம் முழுமையாகச் சரணடையும்போது, முழு பொறுப்பையும் அவரே ஏற்றுக்கொள்கிறார். அதுவே சிறந்தது. அதுவே சிறந்த பாதுகாப்பு. ஒரு தந்தையைப் போல. வளர்ந்த குழந்தை தந்தையை பற்றிக் கருதாமல், சுதந்திரமாகச் செயல்படுகிறான். அந்தத் தந்தை என்ன செய்ய முடியும்? "சரி, உன் விருப்பம்போல் செய்." ஆனால், தனது பாதுகாப்பின் கீழ் உள்ள குழ்ந்தையை, அவர் அதிக கவனத்துடன் பார்த்துக்கொள்வார் இது
பகவத் கீதையில் குறிபிடப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம்: ஸமோ (அ)ஹம்ʼ ஸர்வ-பூ⁴தேஷு (பகவத் கீதை 9.29). " நான் எல்லோருக்கும் சமமானவன்." ந மே த்வேஷ்ய: "யாரும் என்னுடைய எதிரியல்ல." எப்படி எதிரியாக முடியும்? அனைவருமே கிருஷ்ணரின் குழந்தைகளே. எப்படி ஒருவர் கிருஷ்ணரின் எதிரியாக முடியும்? அவர் கிருஷ்ணரின் குழந்தை. அது சாத்தியமல்ல. கிருஷ்ணர் அனைவருக்கும் நண்பர். ஆனால் நாம் அவருடைய நட்பைக் கருதுவதில்லை. இதுவே நமது நோயாகும். இதுவே நமது நோய். அவர் எல்லோருடைய நண்பர். ஸமோஹம் சர்வ பூதேஷு. (பகவத் கீதை 9.29) ஆனால், இதனை ஏற்றுக்கொள்பவர், "கிருஷ்ணரே எனக்கு இவ்வகையில் பாதுகாப்பளிக்கிறார்" என்று புரிந்து கொள்கிறார். இதுவே மகிழ்ச்சிக்கான வழியாகும்.