TA/Prabhupada 0670 – நீங்கள் கிருஷ்ணரில் நிலைப்பெற்றுவிட்டால் – அங்கே பௌதிக இயக்கம் எதுவுமிருக்காது



Lecture on BG 6.16-24 -- Los Angeles, February 17, 1969

பக்தர்: பதம் 19: "காற்று வீசாத இடத்தில் உள்ள தீபம் அசையாமல் இருப்பதைப் போல... (பகவத் கீதை 6.19)."

பிரபுபாதா: இந்த உதாரணத்தைப் பாருங்கள்.

பக்தர்: "...மனதை அடக்கிய யோகியும், திவ்யமான ஆத்மாவின் மீதான தனது தியானத்தில் எப்போதும் ஸ்திரமாக உள்ளான்."

பிரபுபாதா: இந்த அறையில், காற்று வீசாததால், விளக்கு நிலையாகச் சுடர் விட்டு எரிவதை பாருங்கள். அது போலவே, உங்கள் மனம் கிருஷ்ணரிடம் ஆழ்ந்து இருந்தால், உங்கள் மனதின் சுடர் இந்தச் சுடரைப் போலவே சீராக இருக்கும். பின்னர், சுடர் அசையாமல் இருப்பதைப் போல் உங்கள் மனமும் சஞ்சலமடையாமல் இருக்கும். அதுவே யோகத்தின் பூரணத்துவம்.

பக்தர்: பதம் 20-23: "ஸமாதி என்று அழைக்கப்படும் பக்குவநிலையில், மனம் யோகப் பயிற்சியின் மூலமாக, ஜட செயல்களிலிருந்து முழுமையாக விலக்கப் படுகிறது (பகவத் கீதை 6.20)."

பிரபுபாதா: ஸமாதி என்றால், ஸமாதி என்றால், .....சூன்யமாக்குவது அல்ல, அது நடக்காது. க்லேஷோ 'திகரஸ் தேஷாம் அவ்யக்தாஸக்த- சேதஸாம் சில யோகிகள், உங்களை நீங்களே கட்டுப்படுத்தி, செயலற்று இருக்கச் சொல்லுகிறார்கள். என்னை நான் எப்படி செயலற்ற நிலையில் வைத்திருக்க முடியும்? நான் செயல்படும் ஆத்மா. எனவே அது இயலாத காரியம். செயலற்று இருத்தல் என்றால், நீங்கள் கிருஷ்ண உணர்வில் நிலை பெற்றிருக்கும்போது, ஜட செயல்களற்று இருக்கிறீர்கள். அதுவே செயலற்றதன்மை. அப்போது உங்களுக்கு ஜடவிஷயங்களின் தொந்தரவே இருக்காது. இதுவே செயலற்றதன்மை. ஆனால் கிருஷ்ணருக்கான உங்கள் செயல்பாடுகள் அதிகரிக்கும். கிருஷ்ணருக்கான உங்கள் செயல்களையும், நடவடிக்கைகளையும் எவ்வளவுக்கெவ்வளவு அதிகரிக்கிறீர்களோ, அந்த அளவிற்கு, ஜட விஷயங்களில் செயலற்று இருப்பீர்கள். அதுவே வழிமுறையாகும். ஆனால் நீங்கள் மற்ற வகையில் முயற்சி செய்தீர்கள் என்றால், உதாரணத்திற்கு, ஒரு குழந்தையை எடுத்துக் கொள்வோம், ஒரு குழந்தை அமைதியற்று இருக்கிறது. அந்தக் குழந்தையை உங்களால் அமைதியாக்க முடியாது. நீங்கள் அந்தக் குழந்தைக்கு, ஏதாவது விளையாட்டு பொருளையோ, அழகான படத்தையோ கொடுத்தால், அது அமைதியாக விளையாடிக் கொண்டிருக்கும். அதுவே வழி. எனவே, மக்கள் செயலற்று இருக்கிறார்கள். இல்லை, இல்லை... செயலற்று அல்ல, ... என்ன சொல்வது, அலைந்து கொண்டு. ஆனால், நீங்கள் அவரை நிலைபெற வேண்டும் என்று விரும்பினால், அவருக்குக் கிருஷ்ண உணர்வுச் செயல்களைக் கொடுங்கள். அதன் பின் அவர் நிலையாக இருப்பார்... அதுவே உணர்தல். நான் கிருஷ்ணருடையவன் என்று அவர் உணராவிட்டால், அவர் ஏன் கிருஷ்ண உணர்வில் ஈடுபட வேண்டும்? நான் ஜடத்திற்கோ, இந்த நாட்டிற்கோ, சமூகத்திற்கோ தொடர்புடையவன் அல்ல. நான் எந்த முட்டாளுக்கும் சொந்தமானவன் அல்ல, நான் கிருஷ்ணருக்கு மட்டுமே சொந்தமானவன். இதுவே செயலற்ற தன்மை.

இதுவே என் நிலை. நான் கிருஷ்ணருடைய பின்னப்பகுதி. இதுவே பூரண ஞானம். மமைவாம்ஸோ ஜீவ (பகவத் கீதை 15.7) - எல்லா உயிர்வாழிகளும் எனது பின்னப்பகுதிகளே. எனவே, "நான் கிருஷ்ணருடையவன், கிருஷ்ணருடைய பின்னப்பகுதி" என்று நீங்கள் புரிந்து கொண்ட உடனேயே, உடனே, ஜட செயல்களில் செயலற்றுப் போய்விடுவீர்கள். ஆம்.