TA/Prabhupada 0686 – வீசுகின்ற காற்றைப் பிடிக்க இயலாது –அதேபோல கிளர்ச்சிமிக்க மனதைப் பிடித்து நிறுத்துத



Lecture on BG 6.30-34 -- Los Angeles, February 19, 1969

விஷ்ணுஜன: ஸ்லோகம் 34 : கிருஷ்ணா, மனம் அமைதியற்றதும், குழப்பம் நிறைந்ததும், அடங்காததும், சக்தி மிகுந்ததுமாயிற்றே. கிருஷ்ணா, மனம் அமைதியற்றதும், குழப்பம் நிறைந்ததும், அடங்காததும், சக்தி மிகுந்ததுமாயிற்றே. (BG 6.34)

பிரபுபாதா: ஆம், நீங்கள் காற்றை கட்டுப்படுத்தினால் கூட......... அது சாத்தியமல்ல , யாராலும் காற்றே கட்டுப்படுத்த முடியாது. ஆனால், ஏட்டளவில் நீங்கள் காற்றை கட்டுப்படுத்த முடியும் என்று வைத்துக்கொண்டாலும் கூட, மனதை கட்டுப்படுத்த முடியாது அது மிகவும் கடினம். மனம் , சஞ்சலம் மிக்கதும் , அலை பாய்வதும் ஆகும்.

விஷ்ணுஜன : பொருளுரை : மனம் , புத்திக்கு படிந்தவனாக இருக்க வேண்டும் என்று போதிலும் , சில சமயங்களில் புத்தியை வென்று விடுமளவிற்கு , மனம் மிகவும் பலமானதாகவும் அடங்காததுமாக விளங்குன்கிறது . நடைமுறை உலகில் பற்பல எதிர் சக்திகளை சமாளிக்க வேண்டிய மனிதனுக்கு , மனதை அடக்குவது நிச்சயமாக மிகவும் கடினமான செயலே. எதிரிக்கும் நண்பனுக்கும் சமமான மனோநிலையை செயற்கையாக உருவாக்கிக் கொள்ளலாமே தவிர, இறுதியில் எந்த உலக மனிதனாலும் அவ்வாறு செய்ய முடியாது. ஏனெனில், வீசும் காற்றை அடக்குவதை விட இது கடினமானதாகும். வேத இலக்கியங்களில், "பௌதீக உடல் என்னும் ரதத்தில் பிரயாணியாக ஆத்மாவும் , சாரதியாக புத்தியும் , ஓட்டும் உபகரணமாக மனமும், குதிரைகளாக புலன்களும் உள்ளன. இவ்வாறு , மனம் மற்றும் புலன்களின் சேர்க்கையால் , ஆத்மா இன்ப துன்பத்தை அடைகிறான். பெரும் சிந்தனையாளர்கள் இவ்வாறே எண்ணுகின்றனர் " ஆனால் சில சமயங்களில் மோசமான வியாதி சிறப்பான மருந்தையும் வென்று விடுவதைப் போல, பலமானதும் , அடங்காததுமான மனம் , ஒருவனது சுய புத்தியையும் அடிக்கடி வென்று விடுகிறது . இத்தகு பலமிக்க மனம் யோகப் பயிற்சியால் கட்டுப்படுத்தப்பட வேண்டும் ஆனால் அர்ஜுனனை போன்ற சாதாரண மனிதனுக்கு இது என்றும் அசாத்தியமே. அப்படியிருக்க நவீன மனிதனைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்? இங்கு கூறப்பட்டிருக்கும் உவமை பொருத்தமானது: வீசும் காற்றை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. குழம்பிய மனதை கட்டுப்படுத்துவது அதைவிடக் கடினமானது ஆகும்.

பிரபுபாதா : எனவேதான் இந்த ஹரே கிருஷ்ண மந்திர உச்சாடனம் நம் மனதை உடனடியாக ஆக்கிரமித்து கொள்ளும்.. நீங்கள் வெறுமனே கிருஷ்ணா என்று உச்சரித்து கேட்பீர்களானால், உடனடியாக உங்கள் மனம் கிருஷ்ணரில் நிலைபெறும். அதாவது உடனடியாக யோக நிலையை அடையலாம் . ஏனென்றால் மொத்த யோகப் பயிற்சி என்பதே , நம் மனதை விஷ்ணுவின் வடிவத்தில் ஒருநிலைப்படுத்துவதற்குத்தான். மேலும் விரிவங்கமான விஷ்ணுவிற்கு மூலம் கிருஷ்ணரே ஆவார். கிருஷ்ணர் , இதோ இந்த விளக்கை போன்றவர் . இப்போது இந்த விளக்கில் இருந்து , இந்த மெழுகுவர்த்தியில் இருந்து , நீங்கள் இன்னொரு மெழுகுவர்த்தியை ஏற்ற முடியும் . மேலும் ஒன்று , மேலும் ஒன்று , மேலும் ஒன்று , என ஆயிரக்கணக்கான மெழுகுவர்த்திகளை நீங்கள் ஏற்ற முடியும். ஒவ்வொரு விளக்கும் , இந்த விளக்கை போலவே சக்தி வாய்ந்தது . அதில் எந்த சந்தேகமும் இல்லை . ஆனால் ஒருவர் இந்த விளக்கை தான் மூல விளக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். அதைப்போலவே , கிருஷ்ணர் லட்சக்கணக்கான விஷ்ணு ரூபங்களாக விரிவடைகிறார். ஒவ்வொரு விஷ்ணுவும் கிருஷ்ணரைப் போன்றவரே . ஆனால் கிருஷ்ணரே மூல விளக்கு. ஏனெனில் கிருஷ்ணரிடம் இருந்தே அனைத்தும் விரிவடைந்துள்ளது.

எனவே, யார் ஒருவன் தன் மனதை ஏதாவது ஒரு வகையில் கிருஷ்ணரிடம் நிலைநிறுத்துகின்றானோ, அவன் ஏற்கனவே யோகத்தின் பக்குவத்தை அடைந்து விட்டான் இதுவே கிருஷ்ண பக்தி இயக்கத்தின் பொருளாகும்.