TA/Prabhupada 0691 – எவரேனும் நமது சமுதாயத்தில் தீக்ஷைபெற விரும்பினால், நாங்கள் நான்கு நியமங்களை வலியிறு



Lecture on BG 6.35-45 -- Los Angeles, February 20, 1969

பக்தர் : "எல்லா களங்கங்களில் இருந்தும் விடுபட்ட பக்குவமான நிலை கிருஷ்ண உணர்வே. இது பகவத் கீதையிலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. பற்பல ஜென்மங்கள் புண்ணியம் செய்தபின் எல்லா களங்கங்களிலிருந்தும் மாயையின் எல்லா இருமைகளிலிருந்தும் முழுமையாக விடுபட்டவன், இறைவனின் திவ்யமான அன்பு தொண்டில் ஈடுபடுபவன் ஆகிறான்"

பிரபுபாதா : ஆம். யேஷாம்' த்வந்த-க3தம்' பாபம் (ப.கீ 7.28) பகவத்கீதையில் இருக்கும் மிகச் சரியான ஸ்லோகம் யேஷாம்' த்வந்த-க3தம்' பாபம் பாபம் என்றால் பாவம். பாவச் செயல்களை முற்றிலும் நிறுத்திய ஒருவர்...... ஜனானாம்' புண்ய-கர்மணாம்: புண்ணியச் செயல்களை மட்டுமே செய்தவர், அப்படிப்பட்வர், இருமைகளில் இருந்து விடுபட்டு, கிருஷ்ண உணர்வில் நிலைத்திருக்கிறார். நமது மனம் அலைபாய்ந்து கொண்டிருப்பதால், நாம் ஏற்றுக் கொண்டாலும், கொள்ளாவிட்டாலும், இருமைகள் எப்பொழுதும் வந்தே தீரும். நான் கிருஷ்ண உணர்வுடன் இருந்தாலும், அல்லது வேறு எந்த உணர்வில் இருந்தாலும் இந்த பிரச்சனைகள் எப்பொழுதும் இருக்கும். ஆனால் ஒருவன் முற்பிறவியின் புண்ணிய செயல்களில் முன்னேறியவனாக இருந்தால், "நான் கிருஷ்ண உணர்வில் இருப்பேன்" , என்று அவன் நிலையாக இருக்கிறான் எனவே இந்த முறையானது, இந்த ஹரே கிருஷ்ணா ஜபம், நீங்கள் உங்கள் முற்பிறவியில் அல்லது இந்தப் பிறவியில் புண்ணிய செயல்கள் செய்யாமல் இருந்தாலும், பரவாயில்லை . இந்த எளிமையான முறையை நீங்கள் நேர்மையாக எடுத்துக் கொண்டீர்களானால், ஹரே கிருஷ்ண ஜபம் செய்து, நீங்கள் உடனடியாக தூய்மை அடைகிறீர்கள். ஆனால் இனிமேல் எந்தப் பாவச் செயல்களிலும் ஈடுபட மாட்டேன் என்கிற உறுதியோடு செய்ய வேண்டும்.

நமது இயக்கத்தில், நாம் நான்கு கட்டுப்பாடு விதிகளை வைத்திருப்பது போல. நமது இயக்கத்தில் தீட்சை பெற விரும்பும் யாருக்கும், நாம் 4 கொள்கைகளை விதிக்கிறோம். தவறான பாலுறவை தவிர்த்தல். பாலுறவு வேண்டாம் என்று நாம் சொல்வதில்லை. தவறான பாலுறவைத் தவிர்க்க வேண்டும் நீங்கள் திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளை பெறுவதற்காக பாலுறவில் ஈடுபடலாம். வேறு எந்த காரணத்துக்காகவும் அல்ல எனவே, தகாத பாலுறவை தவிர்த்தல், போதைப் பொருட்கள் உட்கொள்வதை தவிர்த்தல். நமது மாணவர்கள், அவர்கள் புகை பிடிப்பது இல்லை. காபி, டீ போன்றவற்றைக் கூட எடுத்துக் கொள்வதில்லை. எனவே மற்றவைகளை பற்றி சொல்ல என்ன இருக்கிறது , எனவே அவர்கள் தூய்மையாக உள்ளார்கள் சூதாட்டத்தை தவிர்த்தல் மற்றும் மாமிச உணவை தவிர்த்தல். அவ்வளவுதான். நீங்கள் இந்த நான்கு கட்டுப்பாட்டு விதிகளை மட்டும் கடைபிடித்தீர்கள் என்றால், உடனேயே நீங்கள் களங்கமற்றவர் ஆகலாம். உடனேயே. மேற்கொண்டு வேறெந்த முயற்சியும் இல்லாமலேயே. எனவே, கிருஷ்ண உணர்வு அருமையானது அதாவது, நீங்கள் இணைந்த உடனேயே களங்கமற்றவர் ஆகலாம். ஆனால் மேற்கொண்டு களங்கம் அடையாதீர்கள். அதற்காகத்தான் இந்த கட்டுப்பாட்டு விதிகள். காரணம் இந்த நான்கு தவறுகளிலிருந்து தான் நம்முடைய களங்கங்கள் ஆரம்பிக்கின்றன. ஆனால் நாம் இவற்றை தடுத்து விட்டால், களங்கம் என்ற பேச்சுகே இடமில்லை. நான் கிருஷ்ண உணர்வு பயிற்சியை மேற்கொண்ட உடனேயே நான் விடுதலை பெறுகிறேன். இப்போது, நான் இந்த கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிப்பதில் கவனமாக இருந்தால், நான் விடுதலை பெறுகிறேன். களங்கமற்றவனாகத் தொடர்கிறேன். இதுவே வழிமுறையாகும். ஆனால், கிருஷ்ண உணர்வு என்னை விடுதலை பெறச் செய்வதால், எல்லா தவறுகளையும் செய்து விட்டு,பிறகு ஜபம் செய்வதால் விடுதலை பெற்று விடலாம் என்று நீங்கள் நினைத்தால் அது ஏமாற்று வேலையாகும் அதனை அனுமதிக்கக் கூடாது. நீங்கள் விடுபெறுகிறீர்கள். ஆனால் திரும்ப அவற்றில் ஈடுபடாதீர்கள். " நான் தவறுகளையும் செய்துவிட்டு, அவற்றிலிருந்து விடுபடவும் செய்வேன்" என்று நினைத்தீர்களானால்.....

நீங்கள் எல்லா வகையான பாவங்களையும் செய்துவிட்டு, கோயிலுக்கு வந்து குற்றத்தை ஒப்புக் கொண்டால், நீங்கள் பாவங்களிலிருந்து விடுபெறுகிறீர்கள் என்று சில மதங்களில் சொல்லப் படுவதைப் போன்றதாகும். எனவே இந்த பாவங்கள் செய்து குற்றத்தை ஒப்புக்கொள்வது, பாவங்கள் செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ளுதல், இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இங்கே அது போல அல்ல. நீங்கள் விடுபெறுகிறீர்கள் என்பது சரி. அதனால் திரும்ப செய்யாதீர்கள் .அதுவே குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அர்த்தமாகும். குற்றத்தை ஒப்புக்கொள்ளுதல் , நீங்கள், " நான் இத்தகைய பாவச் செயல்களை செய்து இருக்கிறேன்" என்று ஒப்புக்கொண்டால் பிறகு நீங்கள் ஏன் திரும்ப அதை செய்கிறீர்கள்? நீங்கள் அதனை ஒப்புக் கொண்டால், அது பாவகரமானது என்று ஒப்புக்கொண்டால் ,உதாரணத்திற்கு திருடுதல் என்பது பாவம். ஆக, ஒப்புக் கொள்வதால் நீங்கள் விடுபெறுகிறீர்கள் என்றால், ஏன் அதனை துரும்ப செய்கிறீர்கள்?அதற்கு சிறிது புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு, பாவத்திலிருந்து விடுபெற்று விட்டேன், அதனால், தொடர்ந்து அதையே செய்து, மறுபடி ஒப்புக்கொண்டு, பாவத்திலிருந்து விடுபெறலாம் என்று பொருள் அல்ல. இல்லை இது நல்லதல்ல . அது நல்லதல்ல என்றால், நீங்கள் , அது நல்லதல்ல என்று ஒப்புக்கொண்டீர்கள், பிறகு, அதை நீங்கள் திரும்பச் செய்யக்கூடாது. இது தான் நோக்கம். நீங்கள்,பாவம் செய்து குற்றத்தை ஒப்புக்கொண்டு, பாவம் செய்து குற்றத்தை ஒப்புக்கொண்டு, பாவம் செய்து குற்ற்த்தை ஒப்புக்கொண்டு என்று இதனை தொடர்ந்து செய்து கொண்டிருப்பது நல்லதல்ல. எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும்., இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம், இதன் நான்கு கட்டுப்பாட்டு விதிகள், இதில் கட்டுப்பாடில்லாமல் ஈடுபட்டீர்களென்றால், பிறகு நீங்கள் களங்கமடைவீர்கள் ஆனால், இந்த நான்கு கட்டுப்பாட்டுவிதிகளை கடைப்பிடிப்பதில் கவனமாக இருந்தால்..... நாம் பாலுறவில் ஈடுபடக் கூடாது என்று சொல்லவில்லை, ஈடுபடலாம், ஆனால் இந்த காரணத்திற்காக, அந்த காரணத்திற்காக அல்ல. அதைப் போலவே, நீங்கள் சாப்பிடலாம்,ஆனால், இந்த வழிமுறையில், அந்த வழிமுறையில் அல்ல.

பாதுகாத்துக் கொள்ளுதல். கிருஷ்ணர் கூட அர்ஜுனரை பாதுகாத்துக் கொள்ள அறிவுறுத்தினார். எனவே பாதுகாத்துக் கொள்ளுதல் , சரியான காரணத்திற்காக இருந்தால், அது தடை செய்யப்பட்டதல்ல. எனவே, நாம் கிருஷ்ண உணர்விற்கு வந்தால், உடனே நாம் எல்லா களங்களிலிருந்தும் விடுபெறுவோம். மேலும், இந்த கட்டுப்பாட்டு விதிகளில் கவனம் செலுத்தினால், நமது வாழ்வு தூய்மையடைகிறது. மேலும் இந்த தூய்மையான வாழ்க்கையை நமது இறப்பு வரை நம்மால் தொடர முடிந்தால், நீங்கள் இறைவனின் திருநாட்டிற்கு மாற்றம் பெறுவது உறுதி தொடர்ந்து படிக்கவும். இது கீதையில் கூறப்பட்டுள்ளது. நாம் ஏற்கனவே படித்து உள்ளோம்: த்யக்த்வா தே3ஹம்' புனர் ஜன்ம நைதி (ப.கீ 4.9) முழு கிருஷ்ண உணர்வில் இருக்கும் நபர், இந்த உடலை விடுவதால் திரும்ப இந்த பௌதீக உலகத்திற்கு பங்கு கொள்வதற்காக வருவதில்லை ஒரு நல்ல குடும்பத்திற்கு, நல்லறக் குடும்பத்திற்கு, ஒரு செல்வந்தரின் குடும்பத்திற்கு வரும் யோகி, அவன் திரும்பி வருகிறான் ஆனால், நீங்கள் கிருஷ்ண உணர்வில் பக்குவமாக இருந்தால், நீங்கள் திரும்பி வர மாட்டீர்கள். ஆன்மீக வானில் உள்ள கோலோக விருந்தாவனத்தில் நிலையாக இருப்பீர்கள் எனவே நாம் திரும்பி வராமல் இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் நான் திரும்பி வந்தால், எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒரு நல்ல குடும்பத்தில், செல்வந்தரின் குடும்பத்தில் எனக்கு பிறப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் நான் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் ,பிறகு நான் திரும்பவும் என்னை வேறு இழிந்த பிறவிகளுக்கு தாழ்த்திக் கொள்ள நேரிடும். நாம் ஏன் இந்த அபாயத்தை எதிர்கொள்ள வேண்டும்? இந்த வாழ்விலேயே பூரண கிருஷ்ண உணர்வை அடைவது தான் சிறந்தது. அது மிகவும் எளிதானது. மிகவும் கடினமானதல்ல நீங்கள் உங்களை கிருஷ்ணரின் சிந்தனையிலேயே வைத்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான். இது மிக எளிதான விஷயம். பிறகு உங்களுடைய அடுத்த பிறவி ஆன்மீக வானில் நிச்சயிக்கப்படுகிறது இறைவனுடைய திருநாட்டில் அல்லது கோலோக விருந்தாவனத்தில். ஆமாம்.