TA/Prabhupada 0701 – குருவின்மேல் பாசம் கொண்டிருந்தால் போதும் – இந்த ஜென்மத்தின் எல்லா கடமைகளும் தீர்ந்த

(Redirected from TA/Prabhupada 0701)


Lecture on BG 6.46-47 -- Los Angeles, February 21, 1969

பிரபுபாதா: சரியா?

தாமல் கிருஷ்ணா: பிரபுபாதா, நான் கேள்விப்பட்டேன் - ஆன்மீக குரு …. எப்பொழுதும் பிறவி எடுத்து திரும்பி வருவார் அவருடைய பக்தர்கள், சீடர்கள், கடவுளை அடையும் வரை என்று . அதை விளக்க முடியுமா?

பிரபுபாதா: ஆம். ஆனால் அதைப் பயன்படுத்த முயற்சிக்காதீர்கள். (சிரிப்பு) உங்கள் ஆன்மீக குருவுக்கு அதுபோன்று கஷ்டம் கொடுக்க முயற்சிக்காதீர்கள். இந்த வாழ்க்கையில் உங்கள் பணியை முடிக்கவும். குறிப்பாக சிரத்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு இது பொருந்தும் அவருடைய பக்தர், அவருடைய சீடர் ஆன்மீக குருவுக்கு சேவை செய்வதில் தீவிரமாக இருக்க வேண்டும். அவர் புத்திசாலி என்றால் அவர் "நான் ஏன் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும் என்னை மீண்டும் மீட்டெடுக்க என் ஆன்மீக குரு சிரம பட வேண்டுமா? என்று இந்த வாழ்க்கையில் எனது என் பணி முடிக்கப்படட்டும். அது தான் சரியான சிந்தனை. ஓ, என் ஆன்மீக குரு நிச்சயம் வருவார் என்று நான் நம்புகிறேன், எனவே எல்லா முட்டாள்தனங்களையும் நான் செய்கிறேன்." என்பதல்ல ஆகவே, உங்களுக்கு ஆன்மீக குருவிடம் பாசம் ஏதேனும் இருந்தால் அவர் உங்களை மீட்டெடுக்க மீண்டும் வரக்கூடாது என்பதற்காக இந்த வாழ்க்கையிலேயே உங்கள் பணிகளை முடிக்க வேண்டும். சரியா? இந்த பணியை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம். மாறாக, உங்கள் பணியை முடிக்க தீவிரமாக இருங்கள்.

அது ஒரு உண்மை பில்வமங்கல டாகுர பற்றிய ஒரு உதாரணம் உள்ளது. பில்வமங்கல டாகுர, அவரது முந்தைய வாழ்க்கையில், பக்தி சேவையின் மிக உயர்ந்த தளமான ஏறக்குறைய பிரேமா பக்திக்கு உயர்த்தப்பட்டார் ஆனால் எப்போதும் கீழ் நிலைக்கு வீழ்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே எப்படியோ அவர் கீழே நிலைக்கு விழுந்தார். பகவத்-கீதையில் கூறப்பட்டுள்ளபடி அடுத்த வாழ்க்கையில் அவர் மிகவும் பணக்கார குடும்பத்தில் பிறந்தார்: ஷுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே (ப.கீ 6.41) எனவே அவர் ஒரு பணக்கார பிராமண குடும்பத்தில் பிறந்தார், ஆனால் அவர் பணக்காரர்கள் செய்வது போல… பெண்கள் மீது மோகம் கொண்டார் எனவே அவரது ஆன்மீக குரு ஒரு விபச்சாரியின் மூலம் அவருக்கு அறிவுறுத்தினார் என்று கூறப்படுகிறது. சரியான நேரத்தில், அவருடைய ஆன்மீக குரு, அந்த விபச்சாரியின் மூலம், நீங்கள் இந்த சதை மற்றும் எலும்புடன் மிகவும் மோகம் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் க்ரிஷ்ணருடன் இவ்வளவு இணைந்திருந்தால், நீங்கள் எவ்வளவு நல்லதை அடைய முடியும். உடனே அவர் அந்த நிலைக்கு வந்தார். எனவே அந்த பொறுப்பு ஆன்மீக குருவுக்கு ஆனால் அதை நாம் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. அது மிகவும் நல்லதல்ல. நாம் முயற்சி செய்ய வேண்டும்: யஸ்ய ப்ரஸாதாத் பகவத்-ப்ரஸாத:. நம்முடைய ஆன்மீக குருவை அவர் என்னை விபச்சாரியின் வீட்டிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற நிலையில் வைக்க நாம் நடந்து கொள்ளக்கூடாது ஆனால் அவர் அதை செய்ய வேண்டும். அவர் தனது சீடரை ஏற்றுக்கொள்வதால், அவருக்கு அது போன்ற பொறுப்பு உள்ளது