TA/Prabhupada 0705 – இறை விஞ்ஞானத்தின் சிறப்பை நாம் பகவத்கீதையில் காணலாம்



Lecture on BG 6.46-47 -- Los Angeles, February 21, 1969

பக்தர்: நாம் கிருஷ்ணரின் விரிவங்கமான விஷ்ணுவைப் பற்றி என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

பிரபுபாதர்: ஆம். கிருஷ்ணரால் தன்னை விரிவுபடுத்திக் கொள்ள இயலும். எப்படியெனில் நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள், நீங்கள் உங்களுடைய வீட்டில் இல்லை. ஏனென்றால், நீங்கள் பந்தப்பட்ட நிலையில் இருக்கிறீர்கள். ஆன்மீகமாக, முக்தியடைந்திருந்தால் நீங்களும் விரிவடையலாம். ஆனால், கிருஷ்ணருக்கு பௌதிகமான உடல் இல்லாததால், அவரால் பல கோடிக்கணக்கான உருவங்களாக விரிவடைய முடியும். அவர் இங்கேயும் அமர முடியும், அங்கேயும் அமர முடியும். ஈஷ்₂வர꞉ ஸர்வ-பூ₄தாநாம் ஹ்ருத்₃-தே₃ஷே₂ (அ)ர்ஜுந திஷ்ட₂தி (BG 18.61). அவர் எல்லாரது இதயத்திலும் வீற்றிருக்கிறார். அவரது விரிவங்கத்தின் மூலம். அவர் ஒருவராக இருந்தாலும் அவரால் விரிவடைய முடியும். அதற்கு... காரணம் அவர் உன்னதமானவர். உதாரணத்திற்கு சூரியன் மிகவுயர்ந்தது. நீங்கள் பகல் பொழுதில் 5000 மைல் தொலைவில் உள்ள உங்கள் நண்பருக்கு தந்தி மூலம், "சூரியன் எங்கே?" என்று கேட்டால், அவர் சொல்லுவார் "என்னுடைய தலைக்கு மேல்" என்று. அத்துடன் நீங்களும் சூரியன் உங்கள் தலைக்கு மேல் இருப்பதைக் காணலாம். காரணம் சூரியன் மிகவுயர்ந்தது. எனவே கிருஷ்ணர் உன்னதமானவராக இருப்பதால், அவரால் எல்லா இடத்திலும் ஒரே சமயத்தில் இருக்க முடியும். இதுவே விரிவடைதல். இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சூரியன் என்றால் என்ன? அது கிருஷ்ணருடைய ஒரு சிறிய படைப்பு. சூரியனால் ஒரே சமயத்தில் எல்லோரின் தலையின் மேலும் இருக்க முடியுமானால், ஒருவர் 5000 மைல் தொலைவில் இருந்தாலும், கிருஷ்ணரால் இருக்க முடியாதா என்ன? நீங்கள் ஏன் உங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தக் கூடாது? சூரியன், கிருஷ்ணரை விட உயர்ந்ததா என்ன? இல்லை. கிருஷ்ணரால் கோடிக்கணக்கான சூரியன்களை உருவாக்க முடியும். எனவே சூரியனுக்கு இத்தகைய சக்தி இருந்தால் ஏன் கிருஷ்ணருக்கு இருக்காது? ஆக நீங்கள் கிருஷ்ணரை புரிந்துகொள்வதில்லை.

அகி₂லாத்ம-பூ₄த꞉ (BS 5.37). அவரால் விரிவடையும் முடியும். இதனை நீங்கள் 13ஆவது அத்தியாயத்தில் காணலாம். அதாவது க்ஷேத்ர-ஜ்ஞம் சாபி மாம் வித்₃தி₄ ஸர்வ-க்ஷேத்ரேஷு பா₄ரத (BG 13.3). க்ஷேத்ர, க்ஷேத்ர-ஜ்ஞம். எப்படியெனில், நீங்கள் ஒரு ஆத்மா. நீங்கள் இந்த உடலுக்கு உரிமையாளர். என்னுடைய இந்த உடலுக்கு நான் உரிமையாளன், உங்கள் உடலுக்கு நீங்கள் உரிமையாளர். ஆனால் நான் இந்த உடலில் இருப்பதன் காரணத்தாலாகும்... ஆனால் கிருஷ்ணர் எல்லா உடல்களுக்கும் உரிமையாளர், காரணம் அவர் எங்கும் வீற்றிருக்கிறார். உதாரணத்திற்கு, இந்த வீடு எனக்கோ அல்லது வேறு யாருக்கோவாவது சொந்தமாக இருக்கலாம். அந்த வீடு அவனுக்கு சொந்தமாக இருக்கலாம், ஆனால் அமெரிக்கா முழுவதும் அரசுக்குச் சொந்தமானது. அதைப்போல, உயர்வைப் பற்றி கேள்வி எழும்போது, விரிவங்கம் என்பதனால் அது சாத்தியமாகிறது. ஆனால், என்னால் விரிவடைய இயலாததால் கிருஷ்ணராலும் விரிவடைய இயலாது. இது தவளையின் தத்துவம். இது முட்டாள்தனம். நாம் எப்போதும் நம்முடைய நிலையை பொறுத்தே சிந்திக்கிறோம். என்னால் விரிவடைய முடியாத போது கிருஷ்ணரால் விரிவடைவது எப்படி சாத்தியம்? நீங்கள் யார்? உங்களுடைய நிலை என்ன? ஏன் நீங்கள் கிருஷ்ணரை உங்களுடன் ஒப்பிடுகிறீர்கள்? ஆம், கிருஷ்ணரால் விரிவடைய முடியும். பல உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உங்களால் விரிவடைய முடியாது என்பதால் கிருஷ்ணராலும் விரிவடைய முடியாது என்று நினையாதீர்கள். முட்டாள்தனமான தத்துவத்தின் குறைபாடு இதுவே. அவர்கள் கடவுள் மிகப் பெரியவர் என்று வார்த்தையில் சொல்லலாம். ஆனால், அவர் யோசிக்கும்போது "ஒ, அவர் எந்த அளவுக்கு பெரியவராக இருப்பார்? என்னால் செய்ய முடியாத போது, எப்படி கிருஷ்ணர் செய்வார்?". ஆனால் வாய் வார்த்தையில் "ஓ கடவுள் மிகப் பெரியவர்." கடவுள் எந்த அளவிற்கு பெரியவர் என்பதை பற்றி அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை. அதனை நாம் பகவத்கீதையில் காணலாம். எனவே, இந்த இறை விஞ்ஞானத்தின் மிகச்சிறந்த தன்மை இதுதான். அகி₂லாத்ம-பூ₄த꞉ (BS 5.37). நீங்கள் கடவுள் எந்த அளவிற்கு பெரியவர் என்று தெரிந்துகொள்ள விரும்பினால் இந்த வேத இலக்கியத்தை குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். வேறு எந்த இலக்கியத்தையும் அல்ல.

பக்தர்: பிரபுபாதா? நாம் தெய்வத்திரு பக்தி சித்தாந்த சரஸ்வதி அவர்கள் நேராக நிமிர்ந்து உட்காருவார்கள் என்று அறிவோம். இது பகவத்கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஒருவர் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும் என்று. இது நாம் கவனத்துடன் ஜெபம் செய்வதற்கு உதவுமா, நாம் நேராக நிமிர்ந்து உட்கார்ந்தால், (தெளிவாக இல்லை) இல்லாமல் நேராக அமர முயன்றால், ஜபத்தின் போது...?

பிரபுபாதா: இல்லை இல்லை, அமரும் விதமெல்லாம் தேவை இல்லை. ஆனால் அப்படி உட்கார முடிந்தால், அது உங்களுக்கு உதவும். உங்களால் இப்படி நேராக நிமிர்ந்து உட்கார முடிந்தால், அது மிக நல்லது. அது உங்களுக்கு உதவும். நீங்கள் ஜெபம் செய்யும் போதும் செவியுறும் போதும் கவனம் செலுத்த உதவும். எனவேதான் இவை தேவையாக இருக்கிறது. ஆனால், அவற்றிற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் அவர் ஒரு பிரம்மச்சாரி. அவரால் அப்படி அமர இயலும். அது ஒரு பிரம்மச்சாரியின் அறிகுறி. அவர் ஒரு போலி பிரம்மச்சாரி அல்ல. அவர் உண்மையான பிரம்மச்சாரி. ஆம்.