TA/Prabhupada 0707 – சுறுசுறுப்பற்ற சோதாக்களும், சோம்பல் மிக்கவர்களும் ஆன்மிக வாழ்வில் உயரமுடியாது



Lecture on SB 3.26.30 -- Bombay, January 7, 1975

ஆன்மீக உலகம் இருக்கிறது. பரஸ் தஸ்மாத் து பா₄வ꞉ அந்ய꞉ (BG 8.20) என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார். "இன்னொரு பா₄வ (இயற்கை) இருக்கிறது". அந்த இயற்கை என்ன? ஸர்வேஷு நஷ்₂யத்ஸு ந விநஷ்₂யதி: "இந்த ஜட உலகம் (பிரபஞ்சத் தோற்றம் / நிலையற்ற உலகம்), அழிந்தாலும், அது நிலையாக இருக்கும். அது அழிவதேயில்லை." இதற்கு பல உதாரணங்கள் உண்டு. பாலைவனத்திலுள்ள கானல் நீரைப் போல. பாலைவனத்தில் சிலசமயம் ஒரு பெரும் நீர்த்தேக்கம் இருப்பதைப்போல தென்படும். விலங்கு தாகத்தினால் அந்த நீரை நோக்கி ஓடும், ஆனால் அங்கு தண்ணீர் இருக்காது. எனவே அந்த விலங்கு இறந்துவிடும். ஆனால் மனிதன் விலங்கு போல இருக்கக் கூடாது. அவர்கள் தங்கள் தரத்தை உயர்த்த வேண்டும். அவர்களுக்கு விஷேசமான உணர்வு கிடைத்துள்ளது. அவர்கள் கடவுளால் கொடுக்கப்பட்ட இந்த வேத இலக்கியங்களால் தங்கள் புரிதலின் தரத்தினை உயர்த்திக் கொள்ளலாம். வியாசதேவர் கிருஷ்ணரின் அவதாரம் ஆவார். அவர் நமக்கு இந்த வேத இலக்கியங்களை அளித்துள்ளார். எனவே அவருக்கு வேதவியாசர் (கடவுளின் அவதாரம்) என்று பெயர். மஹா-முநி-க்ருதே கிம் வா பரை꞉. ஊகம் செய்து கொள்வதற்கு எந்த அவசியமுமில்லை. வியாசதேவரை சீடப் பரம்பரை மூலம் பின்பற்றினாலே போதும். வியாசதேவரின் சீடர் நாரதமுனிவர். நாரதமுனிவரின் சீடர் வியாசதேவர். இந்த சீடப் பரம்பரையில், நாம் அறிவைப் பெற்றோமானால், அதுவே பக்குவமான அறிவு. எனவே இதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நிஷ்₂சயாத்மிகா.

ரூப கோஸ்வாமி கூறுகிறார், ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறுவதற்கு, முதலாவது கொள்கை உற்சாகம் என்று. உத்ஸாஹாத். உத்ஸாஹ என்றால் உற்சாகம்: "ஆம், கிருஷ்ணர் கூறுகிறார், ஸர்வ-த₄ர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷ₂ரணம் வ்ரஜ (BG 18.66). நான் இதனை ஏற்றுக்கொண்டு கிருஷ்ணர் கூறியபடி உற்சாகத்துடன் இக்கொள்கையில் செயல்படுவேன்." கிருஷ்ணர் கூறுகிறார், மன்-மநா ப₄வ மத்₃-ப₄க்தோ மத்₃-யாஜீ மாம் நமஸ்குரு (BG 18.65), எனவே நாம் அதைச் செய்ய வேண்டும், உற்சாகத்துடன் செயல்படுத்த வேண்டும்: "சரி, நான் எப்பொழுதும் கிருஷ்ணரை நினைத்துக் கொண்டே இருப்பேன்." மன்-மநா꞉. கிருஷ்ணர் நேரடியாகக் கூறுகிறார். மன்-மநா ப₄வ மத்₃-ப₄க்த꞉, "நீ என்னுடைய பக்தன் ஆவாயாக." எனவே நாம் உற்சாகத்துடன் இருக்க வேண்டும், "ஆம், நான் கிருஷ்ணரின் பக்தன் ஆவேன்." மன்-மநா ப₄வ மத்₃-ப₄க்தோ மத்₃-யாஜீ. "என்னை வழிபடு" என்று கிருஷ்ணர் கூறுகிறார். எனவே நாம் கிருஷ்ணரை வழிபடுவதற்கு உற்சாகமாக இருக்க வேண்டும், அதிகாலையில் எழுந்து மங்கள ஆரத்தி செய்ய வேண்டும். இவையெல்லாம்தான் உற்சாகம். உத்ஸாஹ. உற்சாகம் இல்லாதவர்கள், சோம்பேறியாக, சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பவர்கள் ஆன்மீக வாழ்வில் முன்னேற முடியாது. வெறுமனே உறங்கிக் கொண்டு முன்னேற முடியாது. ஒருவர் மிக மிக உற்சாகமாக, நேர்மறையாக இருக்க வேண்டும். உத்ஸாஹாத்₃ தை₄ர்யாத். தை₄ர்ய என்றால் பொறுமை, இப்படியில்லை "நான் மிகுந்த உற்சாகத்துடன் பக்தி தொண்டினை ஆரம்பித்துவிட்டதால்....." ஏற்கனவே பக்குவ நிலையை அடையப்பட்டுவிட்டது, ஆனால் பொறுமையை இழந்தால் "நான் ஏன் இன்னும் பக்குவம் அடையவில்லை? என இன்னும் சில சமயம் ஏன் என்னை மாயா உதைக்கிறாள்?" ஆம், இது பழக்கப்பட்டதுதான். இது தொடரவே செய்யும். இது நின்றுவிடும். நிஷ்₂சயாத். தை₄ர்யாத், நிஷ்₂சயாத், அதாவது கிருஷ்ணர் "ஸர்வ-த₄ர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷ₂ரணம் வ்ரஜ (BG 18.66), எனும் போது, இப்போது நான் எல்லாவற்றையும் விட்டு விட்டேன். எனக்கு எந்த தொழில் கடமைகளும் இல்லை. கிருஷ்ணருக்கு சேவை செய்வதற்காகத் தான். இவ்வாறு ஆனதும், அது நிஷ்₂சய. நிச்சயமாக கிருஷ்ணர் எனக்கு பாதுகாப்பு கொடுப்பார்". இதுதான் நிஷ்₂சய. அதிருப்தி கொள்ள வேண்டாம். கிருஷ்ணர் பொய் சொல்பவர் அல்ல. அவர் கூறுகிறார், அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்₄யோ மோக்ஷயிஷ்யாமி.