TA/Prabhupada 0713 – பரபரப்பாய் இருக்கும் முட்டாள் ஆபத்தானவன்
Lecture on SB 1.16.23 -- Hawaii, January 19, 1974
ஜட வசதி வாய்ப்புகளை நீங்கள் எவ்வளவுதான் நன்றாக செய்து கொண்டாலும், உங்களால் இங்கேயே இருந்துவிட முடியாது. முடியாது..... உங்களுக்கு குறிப்பிட்ட அளவு சக்தி கிடைத்திருக்கிறது. அந்த சக்தி வேறொரு காரணத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய சக்தி வாழ்க்கையின் சரியான குறிக்கோளுக்காக பயன்படுத்தப் படவில்லை, உங்களுடைய பெயரளவு பௌதிக மகிழ்ச்சியை அதிகப்படுத்துவதற்காக உங்களது சக்தியை பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றால்,........ உண்மையில், அவர்கள் மகிழ்ச்சியாகவும் இல்லை. இல்லையென்றால், எதற்காக இத்தனை இளம் பெண்களும் ஆண்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்? காரணம் இந்த வகையான முன்னேற்றம் நம்மை மகிழ்விக்காது. அதுதான் உண்மை. எனவே, உங்களுடைய சக்தியை தேவையில்லாத விஷயத்திற்காக விரயம் செய்தீர்கள் என்றால், நீங்கள் முன்னேற்றம் அடையவில்லை, நீங்கள் தோற்கடிக்கப் படுகிறீர்கள். அதை அவர்கள் அறிவதில்லை.
அது ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பராபவஸ் தாவத் அபோத-ஜாதோ யாவன் ந ஜிஜ்ஞாஸத ஆத்ம-தத்த்வம் (SB 5.5.5). பராபவ. பராபவ என்றால் தோல்வி. தாவத் என்றால்"இருக்கும் வரை". பௌதிக வாதியின் எல்லா செயல்களுமே தோல்விதான். பராபவஸ் தாவத் அபோத-ஜாதோ. அபோத. அபோத என்றால் முட்டாள்கள், மூடர்கள், அறியாமையில் இருப்பவர்கள். பிறப்பிலிருந்தே மூடர்களாக அறியாமையில் இருப்பவர்கள். நாம் முட்டாளாகவே பிறந்தவர்கள். எனவே நாம் சரியாக கற்றுக் கொள்ளவில்லை என்றால், பிறகு நாம் முட்டாள்களாகவும் மூடர்களாகவுமே இருந்து விடுவோம், மேலும் இந்த முட்டாள்களின் மற்றும் மூடர்களின் செயல்கள் வெறும் கால விரயம் மட்டுமே. ஏனென்றால்..... என்ன சொல்வார்கள்? சுறுசுறுப்பான முட்டாள், சுறுசுறுப்பான முட்டாள். ஒரு முட்டாள் சுறுசுறுப்பாக இருந்தால், அவன் தன்னுடைய சக்தியை வெறுமனே வீணடித்துக் கொள்கிறான் என்று அர்த்தம். குரங்கைப் போல. குரங்கு மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது. மேலும், திரு டார்வின் கூற்றுப்படி, அவர்கள் குரங்கில் இருந்து வருகின்றனர். ஆக குரங்கினுடைய வேலை வெறும் காலவிரயமே. அது மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது. நீங்கள் பார்க்கலாம். சுறுசுறுப்பான முட்டாள் என்றுமே ஆபத்தானவன். நான்கு வகையான மனிதர்கள் உள்ளனர்: சோம்பேறி புத்திசாலி, சுறுசுறுப்பான புத்திசாலி, சோம்பேறி முட்டாள் மற்றும் சுறுசுறுப்பான முட்டாள். எனவே முதல்தரமான மனிதன் என்பவன் சோம்பேறி புத்திசாலி ஆவான். உதாரணமாக நீதிபதிகளை பார்க்கலாம். அவர்கள் மிகவும் சோம்பேறியானவர்கள், மேலும் மிகவும் புத்திசாலிகள். இதுவே முதல் தர மனிதன். அவர்கள் நிதானமாக எல்லா செயல்களையும் செய்கிறார்கள். அடுத்து சுறுசுறுப்பான புத்திசாலிகள். புத்திசாலித்தனம் மிகவும் நிதானமாக பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் மூன்றாவது வகுப்பினர்: சோம்பேறி முட்டாள், சோம்பேறி அதேசமயம் முட்டாள். நான்காவது வகுப்பினர்: சுறுசுறுப்பான முட்டாள். சுறுசுறுப்பான முட்டாள் மிகவும் ஆபத்தானவன். ஆக, இந்த எல்லா மனிதர்களும் சுறுசுறுப்பாக உள்ளனர். இந்த நாட்டிலும், எல்லா இடத்திலும், உலகமெங்கிலும், இந்த நாடு அந்த நாடு என்றில்லை. அவர்கள் குதிரை இல்லாத வண்டிகளை கண்டுபிடித்திருக்கிறார்கள்- மிகுந்த பரபரப்பு. "பாம்,பாம்," (கார் சத்தத்தைப் போல்) இந்த வழி, இந்த வழி, இந்த வழி. ஆனால், உண்மையில் அவர்கள் புத்திசாலிகள் அல்ல. சுறுசுறுப்பான முட்டாள்கள். எனவேதான், அவர்கள் பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள். அதுதான் உண்மை. அவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார்கள், ஆனால் அவர்கள் முட்டாளாக இருக்கும் காரணத்தினால், பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள்.