TA/Prabhupada 0714 – நான் கிருஷ்ணருக்காக பேசவேண்டும் – பலன் என்னவாயிருந்தாலும் பரவாயில்லை



Lecture on SB 1.16.24 -- Hawaii, January 20, 1974

காலம், மிகவும் வலிமை வாய்ந்தது. காலம்.... காலத்தினால் எல்லாவற்றையும் செய்ய இயலும். காலம் உங்களை மிகவும் மகிழ்வானவராகவும் செய்யும், காலம் உங்களை துன்பத்தில் ஆழ்த்தி, மிகுந்த துன்பத்தில் ஆழ்த்தி, சோகமாகவும் செய்ய முடியும். காலத்தால் உங்களுக்கு கொடுக்கவும் முடியும். மேலும் காலம் கிருஷ்ணர் தான், கால ரூபேண. நீங்கள் பகவத் கீதையின் பதினொன்றாம் அத்தியாயத்தில் காணலாம்.... எனக்கு இப்போது மறந்து விட்டது, அதாவது..... "நீங்கள் யார்?" விராட ரூபத்தை, விஸ்வரூபத்தைப் பார்த்த அர்ஜுனன் கேட்டான், "ஐயா நீங்கள் யார்?" எனவே அவர் கூறினார், "நான் இப்போது காலமாக, காலத்தின் வடிவத்தில் இருக்கிறேன். நான் அனைவரையும், உங்கள் அனைவரையும் கொல்வதற்காக வந்திருக்கிறேன்." எனவே, நம்முடைய வேலை எப்படி இருக்க வேண்டும் என்றால், இந்த வாழ்க்கையை முழுவதுமாக கிருஷ்ண உணவிற்காக பயன்படுத்த வேண்டும். வேறு எந்த வேலையும் இல்லை. இதுவே சைதன்ய மகாபிரபுவின் பரிந்துரை. மேலும் இது மிகக் கடினமானது அல்ல. கடினமானது அல்லவே அல்ல. கீர்தனீய: ஸதா ஹரி: (சை.சா ஆதி3 17.31). ஆனால் இது கடினமானது தான். இந்த ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை இருபத்திநான்கு மணி நேரமும் உச்சாடனம் என்பது மிகவும் கடினமானது. பழக்கப் படாதவர்கள், வெறுமனே உச்சரித்துக் கொண்டே இருப்பதால் பித்துப் பிடித்தவர்கள் ஆவார்கள். அப்படியல்ல (தெளிவாக கேட்கவில்லை). நீங்கள் ஹரிதாசர் தாகூரை நகல் செய்ய முடியாது. அதாவது "நான் இப்போது ஒரு தனிமையான இடத்திற்கு சென்று ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிப்பேன்." அது சாத்தியம் அல்ல, ஐயா. ஹரே கிருஷ்ணா மந்திர ஜபத்தில் கவனத்தை செலுத்துவதற்கு ஆன்மீக வாழ்க்கையில் ஆழ்ந்த முன்னேற்றம் தேவை. அது அவ்வளவு எளிதானது அல்ல.

எனவே, ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு, ஏதாவது ஒரு சேவையில் ஈடுபடுத்திக் கொள்ளுதல் என்பது மிக அவசியம். ஆரம்ப நிலையில், முதிர்ந்த பக்தரை நகல் செய்ய முயற்சிசெய்தால், பிறகு அதுவெறுமனே நகைப்புக்குறியதாகத் தான் இருக்கும். ஆரம்ப நிலையில் நாம் எப்போதும் செயலில் ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும். கிருஷ்ணர் பலவகையான சேவை செய்யும் வாய்ப்புக்களை வைத்திருக்கிறார். நீங்கள் கிருஷ்ணருக்கு பலவகையிலும் சேவை செய்யலாம். கர்மணா மனஸா வாசா ஏதாவஜ் ஜன்ம-ஸாபல்யம்' தேஹினாம் இஹ தேஹிஷு (SB 10.22.35). கர்மணா மனஸா வாசா ஷ்ரேய-ஆசரணம்' ஸதா. கர்மணா மனஸா, நமக்கு மூன்று வகையான வாய்ப்புகள் உள்ளன. நம்முடைய செயல்களால், கர்மணா, நம்முடைய சிந்தனையால், மனஸா மற்றும் நம்முடைய வாக்கினால், வாசா. நாம் செயல்கள் செய்யலாம். கர்மணா மனஸா வாசா. எனவே த்ரிதண்ட சன்யாசம் என்றால்..... நான்கு தண்டங்கள் உண்டு. ஒரு தண்டம் அந்த நபரை குறிப்பதாக கூறப்படுகிறது. மற்ற மூன்று தண்டங்கள் மனம் வாக்கு மற்றும் காயத்தை குறிக்கின்றன. இந்த தண்டம் என்றால், நீங்கள் அறிந்திருக்கலாம் அல்லது அறியாமல் இருக்கலாம். தயவுசெய்து புரிந்து கொள்ள முயற்சி... எனவே கர்மணா, இந்த தண்டம் என்றால் "நான் என்னையும், என்னிடத்தில் உள்ள உடைமைகள் எல்லாவற்றையும் ஈடுபடுத்துவதாக உறுதி ஏற்கிறேன்" எனவே என்னிடம் என்னுடைய உடமைகள் உள்ளன. நான் என்னுடைய உடலால் செயலை செய்ய முடியும், மனதால் செயலை செய்ய முடியும் மேலும், நான் வாக்கினாலும் செயலை செய்ய முடியும். எனவே த்ரிதண்ட சந்நியாசம் என்றால் தன்னுடைய வாழ்வை, அதாவது, தன்னுடைய மனம், வாக்கு மற்றும் காயத்தை அர்ப்பணித்தவர் என்று பொருள். இதுதான் த்ரி தண்ட சன்யாசம். யார் ஒருவர் தன்னுடைய மனதையும், உடலையும், தன்னுடைய சொற்களையும், பகவானுடைய சேவையில் அர்ப்பணிக்கிறாரோ, அவரே சன்யாசி. சன்னியாசி என்றால் வெறுமனே ஆடைகளை மாற்றி விட்டு மாறாக சிந்திப்பதில்ல. இல்லை. யாராக இருந்தாலும், உடையை மாற்றினாலும் மாற்றாவிட்டால் சன்னியாசி என்பவர், தன்னுடைய மனம் வாக்கு காயத்தின் மூலம் முழுமையாக ஈடுபட்டிருந்தால் அவர் தான் சன்யாசி, ஸ சன்னியாசி.

அனாஷ்ரித: கர்ம-பலம்' கார்யம்' கர்ம கரோதி ய:, ஸ ஸந்ந்யாஸீ (ப. கீ.6.1) என்று கிருஷ்ணர் கூறுகிறார். சன்யாசி யார்?அனாஷ்ரித: கர்ம-பலம். "நான் கிருஷ்ணருக்காகப் பேசுகிறேன்." பிறகு, உங்களுக்கு கிடைக்கும் லாபம் என்ன? "என்ன லாபம் என்பதைப் பற்றி கவலை இல்லை, நான் கிருஷ்ணருக்காகப் பேசுகிறேன். அவ்வளவுதான்." ஸ ஸந்ந்யாஸீ, கிருஷ்ணர் கூறுகிறார். "இது என்னுடைய கடமை, கார்யம்". கார்யம் என்றால் கடமை. "என்னுடைய கடமை, கிருஷ்ணருக்காக பேசுவது மட்டுமே. அவ்வளவுதான். நான் வேறு எதையும் பேசப் போவது இல்லை". அவரே சன்யாசி. அனாஷ்ரித: கர்ம..... இப்போது, நீங்கள் உங்களுக்காக பேசுவதற்கு ஒரு வழக்கறிஞரை நீதிமன்றத்தில் ஈடுபடுத்தினால், "உடனே எனக்கு 2000 ரூபாய் கொடுங்கள்". அவர் கட்டணத்தை நிர்ணயிப்பார். ஆனால் ஒரு சன்யாசி இருபத்திநான்கு மணி நேரமும் கிருஷ்ணருக்காகப் பேசுவார். எந்தவித லாபத்தைப் பற்றியும் எதிர்பார்க்க மாட்டார். இதுவே சன்யாசி. இருபத்திநான்கு மணி நேரமும் தன் உடலை கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்துவார்- அவரே சன்யாசி இருபத்திநான்கு மணி நேரமும் கிருஷ்ணரைப் பற்றிய சிந்தனையில் இருப்பார்- அவரே சன்யாசி. அவர்தான் சன்யாசி. வேறு எந்த வேலையும் இல்லை. அனாஷ்ரித: கர்ம-பலம்' கார்யம்' கர்ம.... ஒவ்வொருவரும் தங்களுடைய சுய லாபத்திற்காக வேலை செய்கின்றனர், "எனக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்? இதனால் எனக்கு எந்த அளவுக்கு பெயரும் புகழும் கிடைக்கும்?" அவனுடைய சொந்த லாபத்திற்காக. மேலும் இதுவே பௌதிகம் ஆகிறது. இது தான் பௌதிக இயற்கை. நீங்கள் உங்கள் சொந்த நலனிற்காக செயல்படும் போது, உடனேயே அது பௌதிக ரீதியாக உள்ளது. மேலும், நீங்கள் கிருஷ்ணருடைய நன்மைக்காக செயல்படும்போது, உடனேயே அது ஆன்மீகம் ஆகிறது. அவ்வளவுதான். இதுவே ஆன்மீகத்திற்கும் பௌதிகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஆகும்.