TA/Prabhupada 0727 – நான் கிருஷ்ணரின் சேவகருடைய சேவகருக்கு சேவகன்



Lecture on SB 7.9.28 -- Mayapur, March 6, 1976

பக்தி வினோத தாகூர் இந்தப் பாடலை இயற்றியுள்ளார். ஷரீர அவித்யா-ஜால், ஜடேந்த்ரிய தாஹே கால. கால என்றால் பாம்புகள், கால சர்ப்பம். கால சர்ப்பம், எந்த நொடி வேண்டுமானாலும் உங்களை தீண்டி மரணம் அடையச் செய்யலாம். நாம் ஒவ்வொரு நொடியும் தீண்டப்பட்டுக்கொண்டிருக்கிறோம். கிருஷ்ணருடைய கருணையினால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இல்லையென்றால், கால சர்ப்பத்தை எந்த நொடி வேண்டுமானாலும் வரவழைக்கும் அளவிற்கு நமது புலன்கள் மிக ஆபத்தானதாகும். இதை பல இடங்களில் காணலாம், கால-ஸர்ப-படலீ ப்ரோத்காத-தம்'ஸ்த்ராயதே. ஒரு பக்தர் கூறுகிறார், "ஆம், நான் காலசர்ப்பத்தால் சுற்றப்பட்டு உள்ளேன், இந்தப் பாம்பு மிக அழகாக இருக்கின்றது. ஆனால் நான் இதன் விஷப் பற்களை பிடுங்கி விடுவேன்." ஆனால் அந்த கால சர்ப்பத்தின்..…அது என்ன சொல்லுவார்கள்? விஷப் பற்கள்? அவற்றை உடைத்து விட்டால்-பிடுங்கி விட்டால்-அவை ஆபத்தானதல்ல. பயங்கரமானது. விஷப் பற்கள் பிடுங்கப்படாத வரை அவை ஆபத்தானது தான். ஸோ ப்ரோத்காத-தம்'ஸ்த்ராயதே. ஸ்ரீ பிரபோதாணந்த சரஸ்வதி, கால-ஸர்ப-படலீ ப்ரோத்காத-தம்'ஸ்த்ராயதே (சைதன்ய-சந்த்ராம்ருதம்) என்று கூறியிருக்கிறார். "ஆம், என்னை சுற்றி கால சர்ப்பம் உள்ளது, ஆனால் சைதன்ய மகாபிரபுவின் கருணையினால் நான் அதன் விஷப் பற்களை பிடுங்கி விட்டேன். எனவே அது இனிமேல் ஆபத்தானது அல்ல." இது எப்படி சாத்தியம்? சைதன்ய மகாபிரபுவின் கருணையினால் இது சாத்தியம்தான். ஒரு அனுபவப்பட்ட பாம்பாட்டியால்..... பாம்பின் விஷ பற்களை பிடுங்க முடியும், என்பதைப் போல இந்த விஷம் சில மருந்துகளுக்கு தேவைப்படுவதால், இந்த விஷப் பல் பிடுங்கப்படுகிறது. அதற்குப் பின் அவை பயனற்றது தான். ஆனால் அவை மீண்டும் வளர்ந்துவிடும். நீங்கள் அதன் பற்களை பிடுங்கினால் கூட, அது மீண்டும் வளரும்படியாக அதனுடைய உடல் அமைக்கப்பட்டிருக்கிறது. அது எப்படி சாத்தியம் என்பது இங்கே கூறப்பட்டுள்ளது. காமாபிகாமம் அனு ய: ப்ரபதன் ப்ரஸங்காத். அது உடைக்கப்பட்டாலும், நீங்கள் கெட்ட சகவாசத்தை ஏற்படுத்திக் கொண்டால், பிறகு மறுபடி அது வளர்ந்துவிடும். காமாபிகாமம். ஒரு காமம், ஒரு காம ஆசை இன்னொரு காம ஆசையை உருவாக்குகிறது. இந்த வகையில், இது ஒன்றன்பின் ஒன்றாக தொடர்கிறது. இதுதான் திரும்பத் திரும்ப பிறப்பும் இறப்பும் வருவதற்கான காரணம். பூத்வ பூத்வா ப்ரலீயதே (ப.கீ 8.19). எனவே, நாம் பக்தி தளத்திற்குள் நுழைய விரும்பினால், பிறகு நாம் இதனை கைவிட வேண்டும். அன்யாபிலாஷிதா-ஷூன்யம் (ப.ர.சி. 1.1.11). அன்யாபிலாஷிதா-ஷூன்யம்.

எனவே, "எப்படி இது பூஜ்ஜியம் ஆகும்? நான் ஒரு உயிர் வாழி. இது எப்படி பூஜ்யம் ஆகும்? நான் எப்போதும் சிந்தித்துக்கொண்டு, திட்டமிட்டு கொண்டிருக்கிறேன். எனக்கு பல ஆசைகள் உள்ளன." அவர்கள் கூறுகிறார்கள்.... உயிர் வாழியின் நிலை என்ன என்று தெரியாதவர்கள் கூறுகின்றனர், அதாவது "ஆசைகளை விட்டு விடுங்கள். ஆசை இல்லாத நிலை அடையுங்கள்." அது சாத்தியமல்ல. ஆசை இல்லாத நிலை சாத்தியமல்ல. நான் ஒரு உயிர்வாழி என்பதால், நான் ஆசைப்பட வேண்டும். எனவே ஆசைகள் தூய்மைப் படுத்தப்பட வேண்டும். இதுதான் தேவைப்படுகிறது. நீங்கள் ஆசைகளை சூனியம் ஆக்க முடியாது. அது சாத்தியமல்ல. ஸர்வோபாதி-வினிர்முக்தம்' தத்-பரத்வேன நிர்மலம் (சை.சரி மத்ய 19.170). இப்போது நம்முடைய ஆசைகள், என்னுடைய அடையாள நிலையைப் பொறுத்தே இருக்கிறது. "நான் ஒரு இந்து.", "நான் ஒரு இஸ்லாமியன்.", "நான் ஏன் கிருஷ்ண உணர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்?" நான் இந்த வகையில் அடையாளப்படுத்திக் கொண்டு இருப்பதால், நான் இந்த அடையாளங்களை ஏற்றுக் கொண்டிருப்பதால், "நான் ஒரு இந்து," , "நான் ஒரு இஸ்லாமியன்." "நான் ஒரு கிறிஸ்தவன்." எனவே நம்மால் கிருஷ்ண உணர்வை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "ஓ இந்த...... கிருஷ்ணர் ஒரு இந்து கடவுள். கிருஷ்ணன் ஒரு இந்தியன். நான் ஏன் கிருஷ்ணரை ஏற்றுக்கொள்ள வேண்டும்? இல்லை. "நீங்கள் ஆசை இல்லாமல் இருக்க வேண்டும்" என்றால், உங்களுடைய தவறான புரிதல்களை நீங்கள் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது "நான் ஒரு இந்து," "நான் ஒரு கிறிஸ்தவன்," "நான் ஒரு இந்தியன்," "நான் இது." இது தான் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். " நான் கோபியர்களின் தலைவனின் தாமரைப் பாதங்களின் தாசன் (சை.சரி மத்ய 13.80)" என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். "நான் கிருஷ்ணருடைய , சேவகனுடைய , சேவகனுடைய, சேவகன் ஆவேன்." இதுதான் தூய்மைப்படுத்தல். இதற்குப்பின் ஆசைப்படலாம். இதன்பிறகு கிருஷ்ணரின் சேவையை தவிர வேறெதற்கும் நீங்கள் ஆசைப்பட மாட்டீர்கள். இதுவே பக்குவ நிலை. நீங்கள் இந்த தளத்திற்கு வந்தபின், கிருஷ்ணருக்கு சேவை செய்வதை தவிர வேறு எதற்கும் ஆசைப்பட மாட்டீர்கள், எப்போதும் , 24 மணி நேரமும், அதன்பிறகு நீங்கள் விடுதலைபெற்றவர் ஆவீர்கள். ஸர்வோபாதி-வினிர்முக்தம்' தத்-பரத்வேன நிர்மலம் (சை.சரி மத்ய 19.170). அதற்குப் பிறகு நீங்கள் எந்தவித பௌதிக களங்கமில்லாத நிர்மலம் ஆவீர்கள். இந்த நிலையில்தான் ஹ்ரு'ஷீகேன ஹ்ரு'ஷீகேஷ-ஸேவனம்' பக்திர் உச்யதே. பிறகு....... என்னுடைய புலன்கள் இருக்கும்; நான் புலன்கள் இல்லாமல் போவேன் என்பது முட்டாள்தனம். இல்லை. என்னுடைய புலன்கள் இருக்கும். அவை செயல்படும். அவை கிருஷ்ணரின் சேவைகளுக்காக மட்டும் செயல்படும். இதுதான் தேவைப்படுகிறது. மேலும், கிருஷ்ணருடைய சேவகனால் பயிற்சி அளிக்கப்படும் போதுதான் , அது சாத்தியப்படும். இல்லையென்றால் அது சாத்தியப்படாது.

மிக்க நன்றி.

பக்தர்கள் : ஜெய பிரபுபாதா.(முடிவு)