TA/Prabhupada 0726 - அதிகாலையில் எழுந்து ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபியுங்கள்



750304 - Lecture CC Adi 01.15 - Dallas

நாரத முனிவர் ஸ்ரீமத் பாகவதத்தில், கூறுகிறார், அதாவது, "இப்போது இந்த மனித வாழ்க்கையை நீ பெற்றிருக்கிறாய். எனவே எங்கே உணவு , எங்கே இருப்பிடம், எங்கே என்னுடைய பாதுகாப்பு, எங்கே என்னுடைய பாலுறவில் திருப்தி, என்று தேட வேண்டிய அவசியம் உனக்கு இல்லை. அது உன்னுடைய பிரச்சனை அல்ல. நீ எதற்காக முயற்சி செய்ய வேண்டும் என்றால், வாழ்க்கையின் பௌதிக தேவைகளில் இருந்து எப்படி விடுபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளத்தான் முயற்சி செய்ய வேண்டும்". இதுதான் அறிவுரை. நாம் தவறு செய்கிறோம். நாம்.... இன்று காலை நடைப்பயிற்சியின் போது, இவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும், ஆனாலும் உணவு பிரச்சனையை சந்திப்பதை பார்த்தோம். விடியற்காலை 6 மணிக்கெல்லாம் அவர்கள் வேலைக்கு செல்கிறார்கள். அவர்கள் வேலைக்கு செல்கிறார்கள். ஏன்? வாழ்க்கையின் தேவைகளுக்காகத்தான்.

ஆக, இது எந்த மாதிரியான நாகரீகம்? விடியற்காலை ஆறு மணிக்கு..... வேத நாகரிகத்தின் படி, ஒருவன் விடியற்காலையில் எழுந்து ஹரே கிருஷ்ண ஜபம் செய்ய வேண்டும். மங்கள ஆரத்தி செய்து, விக்ரகங்களை வழிபட வேண்டும். இதுதான் காலை பணிகள். ஆனால் உலகத்தின் மிகப் பணக்கார நாட்டில், தங்களது ரொட்டித் துண்டுகளை சம்பாதிப்பதற்காக காலை ஆறு மணிக்கெல்லாம் வேலைக்கு போகிறார்கள். இது வாழ்க்கையின் மிக நல்ல முன்னேற்றமா? மேலும் அவர்கள் நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டியிருக்கும். இங்கு மட்டுமல்ல, எல்லா இடங்களிலும், தங்களுடைய தினசரி உணவை சம்பாதிப்பதற்காக அவர்கள், தங்கள் வீட்டிலிருந்து ஐம்பது அல்லது 100 மைல் தொலைவு வரை வெளியே செல்கிறார்கள். ஒவ்வொரு நகரத்திலும்..... இந்தியாவில் கூட இதே நிலைதான்- பம்பாயில் கூட, 100 மைல் தொலைவில் இருந்து அவர்கள் வருகிறார்கள், தினசரி பாசஞ்சர் ரயில்களில் அபாயகரமான நிலையில் தொங்கிக் கொண்டே வருகிறார்கள். மேலும் ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது கலியுகத்தின் இறுதியில் மனிதன் எந்த அளவிற்கு வேலை செய்ய வேண்டியிருக்கும் என்றால்........ அவர்கள் ஏற்கனவே கழுதை போல உழைக்கிறார்கள், உண்மையில் வெறும் ரொட்டித் துண்டுகளுக்காக அவர்கள் கழுதை போல உழைக்க வேண்டி வரும். இப்படித் தான் முன்னேற்றம் இருக்கும். அதுமட்டுமல்ல, உணவு, குறிப்பாக சத்வ குணத்தில் இருக்கும் உணவுகள், அதாவது பழங்கள், காய்கறிகள், பால், அரிசி, கோதுமை, சர்க்கரை, முதலியவை கிடைக்காது - முழுவதுமாக கிடைக்காது. ஆக, படிப்படியாக நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். நான் நடைமுறையில் இதைப் பார்த்திருக்கிறேன். நான் மாஸ்கோ சென்றிருந்தபோது, அங்கே வாழ்வது குறைந்தபட்சம் எனக்கு, மிக கடினமாக இருந்தது. அங்கே எந்த அரிசியும் கிடைக்கவில்லை. எந்த கோதுமையும் கிடைக்கவில்லை. மிக அரிதாக..... காய்கறிகள் கிடையாது, பழங்கள் கிடையாது. சில அழுகிய பழங்களே கிடைத்தன... எனவே எனக்கு மட்டுமாவது, இது மிக கடினமாக இருந்தது. பாலும் கிடைத்தது, இறைச்சித் துண்டுகளும் கிடைப்பது என்னவோ உண்மைதான். ஓ, அது எவ்வளவு வேண்டுமோ, அவ்வளவு நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் இது மனித வாழ்க்கை அல்ல. மனித வாழ்க்கை என்பது..... கவிராஜ கோஸ்வாமியால் இங்கே விளக்கப்பட்டுள்ளது, மத்-ஸர்வஸ்வ-பதாம்போஜௌ ராதா-மதன-மோஹனௌ (CC Adi 1.15). நம்முடைய ஒரே செல்வம், ராதா ராணி உடனான ஸ்ரீகிருஷ்ணரின் தாமரை பாதங்களாகத்தான் இருக்க வேண்டும். மதன மோகன. கிருஷ்ணர் எந்த அளவிற்கு அழகானவர் என்றால், மன்மதனையும் கவரும் அளவிற்கு அழகானவர். மதன மோகன. மதன என்றால் மன்மதன். மன்மதன் இந்தப் பிரபஞ்சத்திலேயே மிக அழகான நபராக கருதப்படுகிறான். ஆனால் கிருஷ்ணர் அதைவிட அழகானவர். கந்தர்ப-கோடி-கமனீய-விஷேஷ-ஷோபம் (பி. ஸம் 5.03). இது சாஸ்திரங்களில் விளக்கப்பட்டுள்ளது. சாஸ்திரங்களில் இருந்தும், அல்லது ஆதாரங்களிலிருந்து, நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், கிருஷ்ணர் இங்கே இருந்தபோது, அவர் பல கோபியரகளை கவர்பவர் ஆக இருந்தார். கோபியர்கள் மிக அழகான பெண்கள், மேலும் கிருஷ்ணர் அவர்களைக் கவர்பவராக இருந்தார். ஆக, கிருஷ்ணர் எந்த அளவிற்கு அழகாக இருந்திருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள். கோபியர்களுக்கு மட்டுமல்ல, கிருஷ்ணருக்கு 16,108 ராணிகள் இருந்தனர். எனவேதான் அவருடைய பெயர் கிருஷ்ணர். அவர் எல்லோரையும் கவர்பவர். ஜயதம் ஸுரதௌ பங்கோர் மம (CC Adi 1.15). எனவே, ஏன் அவர் நம்மைப்போன்ற வீழ்ந்த ஆத்மாக்களுக்கும் கவர்ச்சிகரமாக இருக்க மாட்டார்? எனவே இதுதான் கிருஷ்ணருடைய நிலை.