TA/Prabhupada 0734 – பேச இயலாத ஒருவர் பெரும் விரிவுரையாளராகிறார்



Lecture on SB 7.7.19-20 -- Bombay, March 18, 1971

இங்கு விளக்கப்பட்டிருக்கும் தத்துவம், சாங்கிய தத்துவத்தின் விளக்கமாகும். 24 மூலப்பொருட்கள், 24 மூலப்பொருட்கள். 8 ஸ்தூல மற்றும் சூட்சும மூலப்பொருட்கள் மற்றும் அதன் படைப்பு, 10 இந்திரியங்கள்- புலன்கள், செயல்படும் புலன்கள் மற்றும் ஞானத்தை அளிக்கும் புலன்கள். 10+8 18. பிறகு புலன் பொருட்கள் 5. 18 + ஐந்து, 23. மேலும் , அதன் பிறகு ஆத்மா. 24 மூலப்பொருட்கள், சாங்கிய தத்துவமானது இவற்றை விவரிக்கிறது. சாங்கிய தத்துவம்.... ஐரோப்பிய தத்துவவாதிகள், அவர்களுக்கு இந்த சாங்கிய தத்துவ முறை மிகவும் பிடிக்கும். காரணம், இந்த சாங்கிய தத்துவத்தில், இந்த 24 மூலப் பொருட்களும் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சாங்கிய தத்துவம். தே3ஹஸ் து ஸர்வ-ஸங்கா4தோ ஜக3த் (SB 7.7.23). ஆக, இரண்டு வகையான உடல்கள் உள்ளன. அசையும் மற்றும் அசையாதது. ஆனால், இவை எல்லாமே இந்த 24 மூலப் பொருட்களின் கலவை தான். அத்ரைவ ம்ரு'க்3ய: புருஷோ நேதி நேதீத்ய் (SB 7.7.23). இப்போது, ஒருவர் இந்த 24 மூலப்பொருட்கள்ளுக்குள் ஆத்மாவை காண வேண்டும். ஒவ்வொன்றாக நிராகரிப்பதன் மூலம், "ஆத்மா எங்கே, ஆத்மா எங்கே, ஆத்மா எங்கே" என்று தேட வேண்டும். ஆனால் ஒருவர் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளையும், வழிமுறையையும் பின்பற்றினால் தான், இதனை காண முடியும். இது சாத்தியம்.

அன்வய-வ்யதிரேகேண
விவேகேனோஷ2தாத்மனா
ஸ்வர்க3-ஸ்தா2ன-ஸமாம்னாயைர்
விம்ரு'ஷ2த்3பி4ர் அஸத்வரை:
(SB 7.7.24)

எனவே மேற்கொண்டு விளக்குவது, இது சற்று கடினமான விஷயம் தான், ஆனால் மிக முக்கியமானது. பிரகலாத மகாராஜா, தன்னுடைய அசுரகுல நண்பர்களுக்கு விளக்குகிறார். 5 வயது சிறுவன், எவ்வாறு சாங்கிய தத்துவத்தை அவனால் விளக்க முடிகிறது? காரணம் அவர் ஒரு பக்தர், இந்த முழு தத்துவத்தையும் அதிகாரியான நாரத முனிவரிடம் கேட்டுள்ளார். மூக2ம்' கரோதி வாசாலம்' பங்கு3ம்' லங்க4யதே கி3ரிம் (CC Madhya 17.80). எனவே, ஆன்மீக குருவினுடைய, கருணை விளக்கப்பட்டுள்ளது. மூக2ம்' கரோதி வாசாலம்' (CC Madhya 17.80). மூக2ம் என்றால் ஊமை, வாய் பேச முடியாதவர். அவர் மிகப்பெரும் சொற்பொழிவாளராக, உரையாற்றுபவராக ஆகிறார். ஊமையாக இருந்தால் கூட, அவர் பெரும் சொற்பொழிவாளர் ஆகிறார். மூக2ம்' கரோதி வாசாலம்' . பங்கு3ம்' லங்க4யதே கி3ரிம் (CC Madhya 17.80), மேலும் முடவன் ஒருவர், நடக்க முடியாதவர், அவர் மலையையும் கூட தாண்டுகிறார். மூக2ம்' கரோதி வாசாலம்' பங்கு3ம்' லங்க4யதே... யத் க்ரு'பா தம் அஹம்' வந்தே3 (CC Madhya 17.80), யாருடைய கருணையால் இதெல்லாம் சாத்தியமாகிறதோ, அவருக்கு என் மரியாதை கலந்த வந்தனங்கள். பரம் ஆனந்த3 ப4வம், முழுமுதற் கடவுள், இன்பத்தின் இருப்பிடம். கிருஷ்ணரின் கருணையால் இது சாத்தியமாகிறது. ஜட கணக்கீட்டின்படி இது சாத்தியமற்றது. ஜட கணக்கீட்டின்படி ஒருவர் "இது எப்படி சாத்தியம்? ஊமை மிக நன்றாக சொற்பொழிவாற்றுவதாக கூறுகிறீர்களா? இது சாத்தியமல்ல." என்று கூறுவார். அல்லது ஒரு முடவன் மலைகளை தாண்டுவதா? எனவே ஜடரீதியாக இது சாத்தியமற்றது. ஆனால் கிருஷ்ணர் அல்லது அவரது பிரதிநிதியின் கருணையினால்...... உதாரணமாக, பிரகலாத மகாராஜா 5 வயது சிறுவன், ஆத்மாவின் நிலையைப் பற்றி மிக அழகாக விவரிக்கிறார். ஏன்? காரணம் அவர் கிருஷ்ணரின் பிரதிநிதியான , நாரத முனிவரின் கருணையைப் பெற்றிருக்கிறார். எனவே இது சாத்தியம்.