TA/Prabhupada 0735 – நாம் மிகவும் முட்டாள்கள் – அதனால் அடுத்த ஜென்மம் இருப்பதை நம்புவதில்லை
Lecture on SB 7.9.41 -- Mayapura, March 19, 1976
இப்போது பல சிறுவர்கள் உள்ளனர். அதாவது..... அவன் ஒரு வேளை, "இல்லை, இல்லை. நான் இளைஞனாக மாட்டேன். நான் சிறுவனாகவே இருப்பேன்", என்று கூறினால் அது சாத்தியமல்ல. அவன் அவனுடைய உடலை மாற்றிக் கொண்டுதான் ஆக வேண்டும். . அவனுக்கு விருப்பமில்லை என்பதைப் பற்றிய பேச்சே இல்லை. கட்டாயம் அவன் மாற்றிக் கொண்டே ஆக வேண்டும். அதைப் போலவே, இந்த உடல் முடிந்த பிறகு, "இன்னொரு உடல் இருக்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை" என்று நீங்கள் கூறலாம், ஆனால் இது கட்டாயம். அதாவது ஒரு இளைஞன் நினைக்கலாம், " இந்த உடல் மிகவும் அருமையாக இருக்கிறது. நான் நன்றாக அனுபவிக்கிறேன். நான் முதியவன் ஆக மாட்டேன்" அது முடியாது. நீங்கள் கட்டாயம் முதியவன் ஆகவேண்டும். இது இயற்கையின் சட்டம். உங்களால் மறுக்க முடியாது. அதைப்போலவே மரணத்திற்குப் பின், இந்த உடல் முடிந்தபிறகு நீங்கள் கட்டாயம் அடுத்த உடலை அடைந்தே ஆக வேண்டும். ததா2 தே3ஹாந்தர-ப்ராப்தி:. மேலும் இதைக் கூறுவது யார்? உன்னதமான பகவான், முழுமுதற் கடவுள். உன்னத அதிகாரியான அவர் கூறுகிறார். மேலும் உங்களுடைய சாதாரண காரணங்களைக் கொண்டு , இதனை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சித்தால், ஒரு எளிமையான உதாரணம் இங்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே உயிர் இருக்கிறது. இதனை நீங்கள் மறுக்க முடியாது. உயிர் இருக்கிறது. இப்போது இந்த உயிர், இந்த உடல், உங்கள் கைகளில் இல்லை. தற்போதைய நொடியில், உயிர் இருப்பதனால், உங்கள் ஞானத்தைப் பற்றி நீங்கள் மிகவும் பெருமைகொண்டிருக் கிறீர்கள். கடவுளின் இருப்பை ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு நீங்கள் மிகவும் முட்டாள் தனத்துடன் இருக்கிறீர்கள். இதனை நீங்கள் முட்டாள்தனமாக செய்யலாம். ஆனால் மரணத்திற்குப் பின், நீங்கள் முழுமையாக இயற்கையின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள். இதனை நீங்கள் நிராகரிக்க முடியாது. முட்டாள் தனத்தில் இருக்கும்போது, "அரசாங்கத்தின் சட்டத்தில் நம்பிக்கை கொள்வதில்லை. என்ன வேண்டுமோ அதை நான் செய்து கொள்வேன்" என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் நீங்கள் கைது செய்யப்பட்டால், அதன் பிறகு எல்லாம் முடிந்தது. பிறகு கன்னத்தில் அறைகளும், செருப்புகளும் மட்டும்தான். அவ்வளவுதான்.
எனவே அடுத்த பிறவியின் மேல் நம்பிக்கை கொள்ள முடியாத அளவிற்கு நாம் முட்டாள்களாக உள்ளோம். இது வெறும் முட்டாள்தனம் தான். அடுத்த வாழ்க்கை இருக்கிறது, முக்கியமாக கிருஷ்ணரே குறிப்பிடும் போது. "எங்களுக்கு நம்பிக்கை இல்லை" என்று நீங்கள் கூறலாம். உங்களுக்கு நம்பிக்கை இருந்தாலும், நம்பிக்கை இல்லாவிட்டாலும், அது விஷயமல்ல. நீங்கள் இயற்கையின் சட்டத்தின் கீழ் உள்ளீர்கள். ப்ரக்ரு'தே: க்ரியமாணானி கு3ணை: கர்மாணி ஸர்வஷ:2 (ப.கீ 3.27). காரணம்' கு3ண-ஸங்கோ3 'ஸ்ய ஸத்3-அஸத்3-ஜன்ம-யோனிஷு (ப.கீ 13.22), கிருஷ்ணர் கூறுகிறார். ஏன் ஒருவன் நல்ல நிலையில் உள்ளான்? ஏன் ஒருவன், ஒரு மனிதன்.... ஒரு உயிர்வாழி , நல்ல உணவு வகைகளை, நன்றாக உண்டு வாழ்கிறான், மேலும் மற்றொரு மிருகம் மலத்தை உண்கிறது? இது தற்செயலானது அல்ல. இது தற்செயல் அல்ல. கர்மணா தை3வ-நேத்ரேண (ஸ்ரீமத்.பா 3.31.1). ஒருவர், மலம் உண்ணும் படியான செயல்களை செய்திருந்த காரணத்தினால், அவன் கட்டாயம் உண்ண வேண்டும். ஆனால் மாயா, மாய சக்தியானது மிகவும் புத்திசாலித்தனமானது, ஆகையால் அந்த மிருகம் மலத்தை உண்ணும் போதும், அவன் "நான் சொர்க்கத்தை போல அனுபவிக்கிறேன்" என்று நினைக்கிறான். இதுதான் மாயை என்று அழைக்கப்படுகிறது. எனவே மலத்தை உண்ணும் போது கூட, அவன் சொர்கத்தின் இன்பத்தை அனுபவிப்பதாக நினைக்கிறான். அவன் அறியாமையினால் மூடப்படாத வரை, அவன்.... " முற்பிறவியில்.... நான் ஒரு மனிதனாக இருந்தேன், நான் நல்ல உணவு வகைகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இப்போதோ நான் மலம் உண்ணும் படியான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளேன்" என்று நினைவு கூர்ந்தால், அதற்குப்பின் அவனால் தொடர முடியாது. இதுதான் ப்ரக்ஷேபாத்மிக-ஷ2க்தி-மாயா என்று அழைக்கப்படுகிறது. நாம் மறந்து விடுகிறோம். மறதி இருக்கிறது