TA/Prabhupada 0737 – நான் இந்த உடல் அல்ல – இதுவே ஆன்மிகத்தின் முதல் அறிவு



Lecture on BG 4.1 -- Bombay, March 21, 1974

பிரபுபாதா: உடல் தான் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆத்மா ஒன்றே. உங்கள் ஆத்மா, என் ஆத்மா, ஒன்றே. ஆனால் உங்கள் உடல் அமெரிக்க உடல் என்று அழைக்கப்படுகிறது, என் உடல் இந்திய உடல் என்று அழைக்கப்படுகிறது. அதுதான் வித்தியாசம். உங்களுக்கு வேறு உடை கிடைத்ததைப் போல. எனக்கு வேறு உடை கிடைத்துள்ளது. வாஸாம்ஸி ஜீர்ணானி யதா வி... (BG 2.22) உடல் உடை போன்றது.

எனவே முதல் ஆன்மீக அறிவு என்பது , "நான் இந்த உடல் அல்ல." இதுதான் பின்னர் ஆன்மீக அறிவு தொடங்குகிறது. இல்லையெனில் ஆன்மீக அறிவுக்கு வாய்ப்பு இல்லை. யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தாதுகே ஸ்வ-தீ: கலத்ராதிஷு பௌம இஜ்ய-தீ: (ஸ்ரீ.பா 10.84.13) "இந்த உடல் நான். இது, நான், நானே" என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஒருவர், அயோகியர், விலங்கை போன்றவர் அவ்வளவுதான். இந்த மோசமான விலங்குத்தனம், உலகம் முழுவதும் நடக்கிறது. நான் அமெரிக்கன், "" நான் இந்தியன், "" நான் பிராமணன், "" நான் க்ஷத்திரியன்" இது மோசடி. இதைத் தாண்டி நீங்கள் செல்ல வேண்டும். பின்னர் ஆன்மீக அறிவு ஏற்படும். அது பக்தி-யோகா.

மாம் ச யோ 'வ்யபிசாரேண
பக்தி-யோகேன ஸேவதே
ஸ குணான் ஸமதீத்யைதான்
ப்ரஹ்ம-பூயாய கல்பதே
(ப.கீ 14.26)

அஹம் ப்ரஹ்மாஸ்மி. இது தேவை. எனவே இந்த யோகா முறையைப் புரிந்து கொள்ள, பக்தி-யோகா ஏனெனில் பக்தி-யோகத்தால் மட்டுமே நீங்கள் ஆன்மீக தளத்திற்கு வர முடியும் அஹம் ப்ரஹ்மாஸ்மி. நாஹம் விப்ரோ சைதன்யா மஹாபிரபு சொன்னார், நாஹம் விப்ரோ ந க்ஷத்ரிய... அது என்ன ஷ்லோக?

பக்தர்: கிபோ விப்ரா கிபா நைசா.கிபா விப்ர கிபா ந்யாஸீ...

பிரபுபாதா: "நான் ஒரு பிராமணன் அல்ல, நான் க்ஷத்திரியன் அல்ல, நான் ஒரு வைசியன் அல்ல, நான் ஒரு ஸுத்ரன் அல்ல. நான் ஒரு பிரம்மச்சாரி அல்ல, நான் ஒரு க்ருஹஸ்தா அல்ல, நான் ஒரு வானப்பிரஸ்தா அல்ல ... " ஏனென்றால் நமது வேத நாகரிகம் வர்ணா மற்றும் ஆஸ்ரமத்தை அடிப்படையாகக் கொண்டது எனவே சைதன்யா மஹாபிரபு இந்த எல்லாவற்றையும் மறுத்தார்: "நான் இவற்றில் ஒன்றையும் சேர்ந்தவன் அல்ல." உங்கள் நிலை என்ன? கோபீ-பர்து: பத-கமலயோர் தாஸ-தாஸாநுதாஸ:: (சை.ச மத்ய 13.80) "நான் கோபிகளை பராமரிப்பவரின் நித்திய சேவகன்." அதாவது கிருஷ்ணர் பிரசங்கித்தார்: ஜீவேர ஸ்வரூப ஹய நித்ய-க்ருஷ்ண-தாஸ (சை. ச மத்ய 20.108-109) அதுதான் நம் அடையாளம். நாம் கிருஷ்ணரின் நித்திய சேவகன் ஆகையால், கிருஷ்ணருக்கு எதிராகக் கலகம் செய்த சேவகர்கள், அவர்கள் இந்த பொருள் உலகத்திற்கு வந்துள்ளனர். எனவே, இந்த சேவகர்களை மீட்டெடுக்க, கிருஷ்ணர் வருகிறார் கிருஷ்ணர் சொல்கிறார்,

பரித்ராணாய ஸாதூனாம்
வினாஷாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய
ஸம்பவாமி யுகே யுகே
(ப.கீ 4.8)

கிருஷ்ணர் வருகிறார் அவர் மிகவும் கனிவானவர்.

எனவே கிருஷ்ணர் இங்கு வருவதைப் பயன்படுத்திக் கொள்வோம், இந்த பகவத் கீதையை விட்டு சென்றார். இதை முழுமையாகப் படித்து, உங்கள் வாழ்க்கையை முழுமையாக்குங்கள் அது தான் கிருஷ்ணா பக்தி இயக்கம். இது ஒரு போலி இயக்கம் அல்ல. இது மிகவும் அறிவியல் இயக்கம் எனவே இந்தியாவுக்கு வெளியே, இந்த ஐரோப்பிய, அமெரிக்கர்கள், அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த இந்திய இளைஞர்கள் ஏன் செய்வதில்லை? அங்கே என்ன தவறு? இது சாியானதல்ல. நாம் ஒன்றாக சேரலாம், இந்த கிருஷ்ணா பக்தி இயக்கத்தை மிகவும் தீவிரமாகத் தொடங்கி இந்த துன்ப படும் மனிதகுலத்தை விடுவிப்போம். அதுதான் நம் நோக்கம். அவர்கள் அறிவு இல்லாமல் துன்பப்படுகிறார்கள். முழுமையான எல்லாம் இருக்கிறது, தவறான நிர்வாகத்தால் ..... இது மோசடிகள் மற்றும் திருடர்களால் நிர்வகிக்கப்படுகிறது நீங்கள் கிருஷ்ணா பக்தியில் பரிபூரணமாகி நிர்வாகத்தை எடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக ஆக்குங்கள்.

மிக்க நன்றி. ஹரே கிருஷ்ணா