TA/Prabhupada 0736 - அனைத்து மோசடி வகை மத அமைப்புகளையும் கைவிடுங்கள்



Arrival Lecture -- Calcutta, March 20, 1975

ஸ்ரீமத் பாகவதம் எந்த குறிப்பிட்ட வகை மதத்திற்கும் பெயரிடவில்லை அது கூறுகிறது, "அந்த மதம், அந்த மத அமைப்பு, சிறப்பானது" ஸ வை பும்ஸாம் பரோ தர்ம: (ஸ்ரீ.பா 1.2.6), "ஆழ்நிலை" இந்த இந்து மதம், முஸ்லீம் மதம், கிறித்துவம், அவை அனைத்தும் ப்ராக்ருத, ஆனால் நாம் இந்த ப்ராக்ருத-வை மதம் என்று சொல்லப்படுவதை தாண்டி செல்ல வேண்டும், நாங்கள் இந்துக்கள், "" நாங்கள் முஸ்லீம், "" நாங்கள் கிறிஸ்தவர்கள். " தங்கம் போல. தங்கம் என்பது தங்கம் தான். தங்கம் இந்து தங்கம் அல்லது கிறிஸ்தவ தங்கம் அல்லது முஹம்மது தங்கமாக இருக்க முடியாது. ஒரு தங்கக்கட்டி இந்து அல்லது முஸ்லீமின் கையில் உள்ளது என்றால், "இது முஸ்லீம் தங்கம்", "இது இந்து தங்கம்" என்று யாரும் சொல்ல மாட்டார்கள். எல்லோரும் "இது தங்கம்" என்று சொல்வார்கள். எனவே நாம் தங்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்-இந்து தங்கம் அல்லது முஸ்லீம் தங்கம் அல்லது கிறிஸ்தவ தங்கம் அல்ல. இறைவன் கிருஷ்ணர், ​​ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ (ப. கீ.18.66), என்று சொன்னபோது அவர் இந்த இந்து மதத்தையோ முஸ்லிம் மதத்தையோ குறிக்கவில்லை. இவை நியமிக்கப்பட்டவை. எனவே அது தூய்மையான ஒரு நிலைக்கு நாம் வர வேண்டும்; எந்த நியமனமும் இல்லை. அஹம் ப்ரஹ்மாஸ்மி: : "நான் கிருஷ்ணரின் ஒரு பகுதி" இது உண்மையான மதம். இந்த கருத்தாக்கம் இல்லாமல், எந்த விதமான நியமிக்கப்பட்ட மதமும், அதாவது ப்ராக்ருத அது ஆழ்நிலை அல்ல.

எனவே நமது கிருஷ்ண பக்தி இயக்கம் ஆழ்நிலை கொண்டது, பரோ தர்மம். ஸ வை பும்ஸாம் பரோ தர்ம: . பரா என்றால் "மேலே" என்று பொருள். மதம் என்று அழைக்கப்படுவதற்கு மேலே. எனவே இவை நம்மால் தயாரிக்கப்பட்ட விஷயங்கள் அல்ல. இது ஆரம்பத்தில் ஸ்ரீமத்-பாகவதத்தில் கூறப்படுகிறது, தர்ம: ப்ரோஜ்ஜித-கைதவ: அத்ர (ஸ்ரீ.பா 1.1.2): எந்த வகையான கைதவ:, பாசாங்கு அல்லது பொய், மாயை, "கைதவ: கைதவ: என்றால் மோசடி என்று பொருள் "மதத்தின் மோசடி வகை நிராகரிக்கப்படுகிறது, தூக்கி எறியப்படுகிறது," ப்ரோஜிதா. ப்ராக்ருஷ்ட-ரூபேண உஜ்ஜித. நாம் தரையைத் துடைப்பது போல நாம் தூசியின் கடைசி துகளை எடுத்து அதை தூக்கி எறிந்து விடுகிறோம், இதேபோல், கிருஷ்ணா பக்தி கொள்ள நாம் இந்த மத முறை என்று அழைக்கப்படும் மோசடி வழிகளை விட்டுவிட வேண்டும் ஏனெனில் அனுபவம் உணர்த்துவது பல நியமிக்கப்பட்ட மதங்களை பின்பற்றுவதால் கடவுளிடம் எப்படி பக்தி கொள்வது என்ற நிலையை யாரும் அடையவில்லை யாரும் அடையவில்லை. இது நடைமுறை அனுபவம். அது ... ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபு அவர் அறிமுகப்படுத்தினார் ஆனால் பகவான் கிருஷ்ணர் "இது உண்மையான மதம்," என்று குறிப்பால் உணர்த்தி இருக்கிறார் மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ. இது தான் மதம். வேறு எந்த மதமும், மத அமைப்பு, கடவுளை எவ்வாறு பக்தி கொள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்காது, இது மதத்தின் மோசடி வகை. சைதன்யா மஹாபிரபு கூறுகிறார், ப்ரேமா பும்-அர்தோ மஹான். மேலும் பாகவதமும் அதையே சொல்கிறது வாழ்க்கையில் வெற்றியின் உண்மையான சாதனை கடவுளை அல்லது கிருஷ்ணரை எப்படி பக்தி கொள்வது அதுவே வாழ்க்கையின் பரிபூரணத்துவம்