TA/Prabhupada 0741 – மனித சமுதாயத்தை மாற்றியமைப்பதே கிருஷ்ணப் பிரக்ஞை இயக்கத்தின் நோக்கம்



Lecture on BG 4.13 -- Bombay, April 2, 1974

ததா தேஹாந்தர-ப்ராப்தி:. தேஹினோ 'ஸ்மின் யதா தேஹே (ப.கீ 2.13) இது அறிவைப் பற்றிய முதல் புரிதல், ஆனால் இதை மக்கள் உடலுக்குள் ஆன்மா இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் மிகவும் முட்டாள்களாக இருக்கிறார்கள் எனவே அவை சாஸ்திரத்தில், ஸ ஏவ கோ³-க²ரḥ: என்று விவரிக்கப்பட்டுள்ளன: (ஸ்ரீ.பா. 10.84.13) இது போன்ற மக்கள், மாடுகளையும் கழுதைகளையும் விட மேலானவர்கள் அல்லர்." விலங்குகளின் கூட்டத்தின் இடையே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது எனவே தற்காலத்தில் மக்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளனர். நிதானமான வாழ்க்கை இல்லை, தீரா. நீங்கள் சமூகத்தில் அமைதியான வாழ்க்கையை விரும்பினால் இந்த திட்டத்தை நீங்கள் ஏற்க வேண்டும். சாதுர்-வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் (ப.கீ 4.13). பிராமண வகுப்பு மக்கள், சத்ரிய வகுப்பு, வைஷ்ய வகுப்பு என்று இருக்க வேண்டும்.

வைஷ்ய வகுப்பு………. பொதுவாக, நாம் , வைஷ்ய என்றால் வியாபார வர்க்கம் என்று புரிந்துகொள்கிறோம் இல்லை. தற்போதைய தருணத்தில் வைஷ்யாக்கள் என அழைக்கப்படுபவர்கள் சூத்ரர்கள், சூத்ரர்களை விடக் கீழானவர்கள். ஏன்? இப்போது வைஷ்யர்களின் தொழில் க்ருஷி-கோ-ரக்ஷ்ய-வாணிஜ்யம் வைஷ்ய-கர்ம ஸ்வபாவ-ஜம் (ப.கீ 18.44) வைஷ்யர்கள் உணவு தானியங்களை தயாரிப்பதில் ஈடுபட வேண்டும், ஆனால் அவர்கள் அதில் ஆர்வம் காட்டுவதில்லை போல்ட் மற்றும் நட்டுகள் மற்றும் டயர்கள், ஆகியவற்றிற்கான தொழிற்சாலைகளைத் திறக்க அவர்கள் ஆர்வமாக உள்ளனர். இப்போது நீங்கள் டயர் மற்றும் போல்ட் நட் சாப்பிடுகிறீர்கள்? இல்லை, நீங்கள் சாப்பிட முடியாது நீங்கள் அரிசி சாப்பிட வேண்டும், அரிசி ஒரு கிலோவுக்கு பத்து ரூபாய். அவ்வளவுதான் ஏனென்றால் எந்த வைஷ்யரும் உணவு தானியங்களை உற்பத்தி செய்யவில்லை. இது குறைபாடு.

அவர்கள் இந்த குறைபாட்டைக் காணவில்லை அவர்கள் வெறுமனே , சத்தமிடுகிறார்கள், "ஓ, இது விலை அதிகரித்துள்ளது" என்று. ஏன், அதிகரித்தது விலை? பம்பாய் நகரில் மில்லியன் கணக்கான மக்கள் உள்ளனர். உணவு தானியத்தை உற்பத்தி செய்வது யார்? ஆனால் அவர்கள் வைஷ்யா என்று அழைக்கப்படுகின்றனர் . எந்த வகையான வைஷ்யா பிராமண கலாச்சாரம் இல்லை; மூளை இல்லை உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடிய க்ஷத்ரியா இல்லை. பல குறைபாடுகள் உள்ளன.

எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையை, சமூகம், மனித சமூகம் ஆகியவற்றை மறுவடிவமைக்க விரும்பினால் அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ நீங்கள் கிருஷ்ணரின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் கிருஷ்ணர் பக்தி இயக்கத்தின் நோக்கம் இதுதான் மொத்தமாக, முழுமையாக, மனித சமுதாயத்தை மாற்றியமைத்தல். நாங்கள் புதிய கருத்தை உருவாக்கவில்லை, விஷயங்களை ஜோடனை செய்ய வில்லை . இது மிகவும் விஞ்ஞானமானது. உங்கள் வாழ்க்கையின் பணியை நீங்கள் உண்மையில் நிறைவேற்ற விரும்பினால், பகவத்-கீதையின் இந்த ஆலோசனையை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் எந்தவொரு குறைபாடுகளும் இல்லாமல், புருஷோத்தமராகிய கிருஷ்ணரால் சொல்லப்பட்டது, மிகவும் விஞ்ஞானமானது

நான் ஏதாவது பேசினால், பல குறைபாடுகள் இருக்கலாம், ஏனென்றால் நான் அபூரணன். நாம் ஒவ்வொருவரும், அபூரணர்கள். நாம் தவறு செய்கிறோம். தவறுவது மனித இயல்பு ஆகும். தைரியமாக நான் ஒருபோதும் எந்த தவறும் செய்யவில்லை." என்று சொல்லக்கூடிய மனிதர்கள் யாரும் இல்லை. அது சாத்தியமில்லை. நீங்கள் தவறு செய்ய வேண்டும் சில நேரங்களில் நாம் மாயை, ப்ரமாத. ஏனென்றால் நாம் அனைவரும், இந்த உடலை "நான்" என்று ஏற்றுக்கொள்கிறோம், அது "நான்" இல்லை. அது பிரமாத என்று அழைக்கப்படுகிறது. பிரம, பிரமாத பின்னர் விப்ரலிப்ஸா . எனக்கு பிரமை கொள்கிறேன், நான் தவறு செய்கிறேன், நான் திகைக்கிறேன், நான் மாயை கொள்கிறேன் ஆனாலும், நான் குரு பதவியை எடுத்து கொள்கிறேன். அது மோசடி நீங்கள் குறைபாடுடையவராக இருந்தால், உங்கள் வாழ்க்கையில் பல குறைபாடுகள் ஏற்பட்டிருந்தால் நீங்கள் எவ்வாறு குருவாக முடியும்? நீங்கள் ஒரு ஏமாற்றுக்காரன் யாரும் குரு இல்லை, ஏனென்றால் யாரும் பூரணத்துவம் பெறவில்லை என்றால், நீங்கள் எவ்வாறு குருவாக முடியும்? எனவே இது தொடர்ந்து நடக்கிறது