TA/Prabhupada 0759 - பசுக்களுக்கு தெரியும் ‘இந்த மக்களால் தன்னை கொல்ல முடியாதென்று’ எனவே அவை பதற்றப்படுவத

(Redirected from TA/Prabhupada 0759)


750522 - Lecture SB 06.01.01-2 - Melbourne

பன்றி மலத்தை விரும்பி சாப்பிடுகிறது. அதாவது மலம் வரை கூட எந்தவொரு கெட்ட பொருட்களையும் உணவாக ஏற்றுக்கொள்ள முடியும். அதுதான் பன்றியின் வாழ்க்கை. மனித வாழ்க்கை? இல்லை, இல்லை, இல்லை. நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? உங்களிடம் நல்ல பழங்கள், பூக்கள், தானியங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளன, மேலும் பால் உற்பத்தியில் இருந்து தயாரிக்கப்பட்டு அதை சாப்பிடுங்கள். இதை கடவுள் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஏன் மலம் சாப்பிட வேண்டும்? இது மனித உணர்வு. ஆகவே சிறந்த உணவு கிடைக்கும்போது, ​​நான் சிறந்த உணவை, வைட்டமின்கள் நிறைந்த, சுவை நிறைந்த, ஆற்றல் நிறைந்த உணவை உண்ண வேண்டும். நான் ஏன் வேறு ஏதாவது எடுக்க வேண்டும்? இல்லை. அது தான் மனித நுண்ணறிவு.

எனவே எங்கள் திட்டம் என்னவென்றால், கிருஷ்ணருக்கு சிறந்த உணவுப்பொருட்களை வழங்குகிறோம். கிருஷ்ணர், "எனக்கு இந்த உணவுப்பொருளை கொடுங்கள்" என்று கூறுகிறார். அது என்ன? பத்ரம், புஷ்பம், ஃபலம் தோயம் யோ மே பக்திய பிரயச்சதி, தத் அஹம் அஸ்னாமி (ப கீ 9.26). நீங்கள் ஒரு விருந்தினரை அழைத்தால், நீங்கள் அவரிடம், "என் அன்பு நண்பரே, நான் உங்களுக்கு என்ன வழங்க முடியும், நீங்கள் சாப்பிட விரும்புகிறீர்களா?" ஆகவே, "இந்த விஷயத்தை எனக்குக் கொடுங்கள், நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்" என்று அவர் சொன்னால், அதை அவருக்குக் கொடுப்பது உங்கள் கடமையாகும். இதேபோல், சிலர் கேட்க கூடும் "நான் கிருஷ்ணருக்கு இறைச்சி வழங்க முடியாதா என்று ?" இல்லை, கிருஷ்ணர் சொல்லவில்லை. கிருஷ்ணர் அதை விரும்பவில்லை. பகவத் கீதையில் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார் ". நீங்கள் எனக்குக் கொடுங்கள் ..." பத்ரம், புஷ்பம், ஃபலம் தோயம் யோ மே பக்திய பிரயச்சதி, (பா கீ 9.26): "நீங்கள் எனக்கு காய்கறிகளைக் கொடுங்கள், எனக்கு பழங்களைக் கொடுங்கள், தானியங்களைக் கொடுங்கள், பால் கொடுங்கள், நல்ல நீர், பூ, துளசி." தத் அஹம் அஸ்னாமி: "நான் அதை சாப்பிடுகிறேன்." என்று. கிருஷ்ணா அல்லது கடவுள், அவர் கடவுள் என்பதால் எதையும் சாப்பிட முடியும். அவர் எல்லாம் வல்லவர். ஆனால் அவர் பக்தர்களிடம், “இவற்றை எனக்குக் கொடுங்கள்” என்று கேட்கிறார். எனவே, நாம் இந்த விஷயங்களை கிருஷ்ணருக்கு வழங்குகிறோம், வகைகளை தயார் செய்வோம். அதுவே நமது அறிவாற்றல். நீங்கள் வகைகளை உருவாக்கலாம். ஒரு பால் போல. நீங்கள் பாலில் இருந்து ஐம்பது வகையான தயாரிப்புகளை தயார் செய்யலாம்-குறைந்தபட்சம். பல வகைகள்.

புதிய பிருந்தாபனில் நாங்கள் மாடுகளை வைத்திருக்கிறோம். அது ஒரு உதாரணம். மேலும் பசுக்கள் பால் கொடுக்கின்றன, பால் வழங்குகின்றன, மற்ற விவசாயிகளை விட இரட்டிப்பாக. ஏன்? ஏனென்றால், "இந்த மக்கள் என்னைக் கொல்ல மாட்டார்கள்" என்று மாடுகளுக்குத் தெரியும். அவை கவலையில் இல்லை. நீங்கள் ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபட்டுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம், "ஏழு நாட்களுக்குப் பிறகு, நான் கொல்லப்படுவேன்" என்று உங்களுக்குத் தெரிந்தால், அந்த வேலையை மிக நேர்த்தியாக செய்ய முடியுமா? இல்லை. இதேபோல், மேற்கத்திய நாடுகளில் பசுக்களும் அறியும், "இந்த மக்கள் எனக்கு மிக நல்ல தானியங்களையும் புல்லையும் தருகிறார்கள், ஆனால் எல்லாவற்றிற்கும் பிறகு அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்" எனவே அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. ஆனால் "நீங்கள் கொல்லப்பட மாட்டீர்கள்" என்று அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டால், அவர்கள் இரட்டிப்பு பால், இரட்டிப்பு பால் கொடுப்பார்கள். அது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஷ்டிராவின் காலத்தில், பசுவின் பால் பை மிகவும் நிரம்பியிருந்தது, மேய்ச்சல் நிலத்தில் அவை பால் சுரந்து நிலத்தில் காணப்பட்டன, மேலும் மேய்ச்சல் நிலம் ஈரப்பதமாகவும், பாலுடன் சேறும் சகதியுமாக மாறியது. நிலம் தண்ணீருடன் அல்ல, பாலுடன் சேறும் சகதியுமாக இருந்தது. அதுதான் அன்றைய நிலை. எனவே பசு மிகவும் முக்கியமானது, நாம் நல்ல உணவு, பால் பெற முடியும். தினமும் காலையில் பால் தேவைப்படுகிறது. ஆனால் இது என்ன நீதி, விலங்கிலிருந்து பால் எடுத்த பிறகு அதனை கொல்வது ? அது மிகவும் நல்ல நியாயமா ? எனவே இது மிகவும், மிகவும் பாவமானது, அதற்காக நாம் கஷ்டப்பட வேண்டும். சாஸ்திரங்களில் "நீங்கள் இந்த பாவச் செயலைச் செய்தால், நீங்கள் இந்த வகையான நரகத்திற்குச் செல்வீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது. பாகவதத்தில், ஐந்தாவது கான்டோவில் விளக்கம் உள்ளது.