TA/Prabhupada 0773 - நமது ஆன்மிக வாழ்வை எப்படி செயல்படுத்துவது என்பதில் எப்பொழுதும் கவனம் தேவை
Lecture on SB 2.3.19 -- Los Angeles, June 15, 1972
ப்ரத்யும்னா: ஆகவே, பக்கம் 153 இல் உள்ள இரண்டாவது பத்தியில்: "ஒட்டகம் என்பது முட்களை சாப்பிடுவதில் மகிழ்ச்சி அடையும் ஒரு வகையான விலங்கு. இதேபோல், குடும்ப வாழ்க்கையை அல்லது இன்பம் என்று அழைக்கப்படும் இந்த உலக வாழ்க்கையை அனுபவிக்க விரும்பும் ஒரு நபர் ஒட்டகத்துடன் ஒப்பிடப்படுகிறார். பொருள்சார் வாழ்க்கை முட்கள் நிறைந்ததாக இருக்கிறது, எனவே ஒருவர் இதனை சிறப்பாகப் பயன்படுத்த, வேத விதிமுறைகளின் பரிந்துரைக்கப்பட்ட முறையால் மட்டுமே வாழ வேண்டும். "
பிரபுபாதா: நீங்கள் முட்களைக் கடந்து செல்வதைப் போலவே, நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், முட்கள் உங்கள் ஆடையுடன் சிக்கி, நீங்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். இது வேதங்களில் கூறப்படுகிறது, குரஸ்ய தாரா நிஷிதா துராத்யயா (கத உபநிஷத் 1.3.14). நாம் சவரக்கத்தியை கொண்டு ஷவரம் செய்வது போல. சவரக்கத்தி மிகவும் கூர்மையானது. எனவே சவரக்கத்தியை நாம் கவனமாகக் கையாள முடிந்தால், நமது கன்னங்களை மிகவும் ம்ரிதுவாக சுத்தப்படுத்திக் கொள்கிறோம் ஆனால் கொஞ்சம் கவனக்குறைவு, உடனடியாக வெட்டி, இரத்தம் சுரக்கும். சிறிய கவனமின்மை. அந்த உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. குரஸ்ய தாரா நிஷிதா துராத்யயா துர்கம் பதஸ் தத் கவயோ வதந்தி. மோக்ஷத்தின் பாதை மிகவும் கடினம். நாம் திருவீட்டிற்கு திரும்பிச் செல்ல முயற்சிப்பது போல, மீண்டும் கிருஷ்ணரின் (கடவுளின்) ராஜ்யத்திற்கு. பாதை மிகவும் கடினம். குரஸ்ய தாரா நிஷிதா துராத்யாய துர்கம். துர்கம் என்றால் கடந்து செல்வது மிகவும் கடினம். ஆனால் கொஞ்சம் கவனம் உங்களை காப்பாற்றும். கொஞ்சம் கவனம், "நான் மிகவும் ஆபத்தான வழியைக் கடந்து செல்கிறேன், எனவே நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்." ஆகவே, நம்முடைய ஆன்மீக வாழ்க்கையை நாம் எவ்வாறு செயல்படுத்துகிறோம் என்பதில் நம் கவனம் எப்போதும் இருக்க வேண்டும்.
அது மிகவும் எளிது. ஒழுங்குமுறைக் கொள்கைகளை நாங்கள் கண்டிப்பாக கடைபிடித்து குறைந்தபட்சம் பதினாறு சுற்றுகள் நாம சங்கீர்த்தனம் செய்கிறோம். அது நம்மைக் காப்பாற்றும். ஆனால் இந்த கொள்கைகளுக்கு நாம் கவனக்குறைவாகிவிட்டால், முட்களால் குத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது. எல்லா இடங்களிலும் நிறைய முட்கள் உள்ளன. அல்லது அதே உதாரணம் குரஸ்ய தார. நீங்கள் ஷவரம் செய்கிறீர்கள், உங்கள் முகத்தை மிகவும் சுத்தப்படுத்திக் கொள்கிறீர்கள், ஆனால் கொஞ்சம் கவனக்குறைவு, உடனடியாக இரத்தத்தை விரயமாக்குகிறது. நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலே படிக்கவும்.
ப்ரத்யும்னா: "ஒருவரின் சொந்த இரத்தத்தை உறிஞ்சுவதன் மூலம் பொருள் உலகில் வாழ்க்கை பராமரிக்கப்படுகிறது. பொருள் இன்பத்திற்கான ஈர்ப்பின் மையப் புள்ளி பாலியல் வாழ்க்கை. பாலியல் வாழ்க்கையை அனுபவிப்பது என்பது ஒருவரின் சொந்த இரத்தத்தை உறிஞ்சுவதாகும், மேலும் இதைவிட அதிகம் விளக்கப்பட வேண்டியதில்லை, இதன் பொருளறிய. முள் கிளைகளை மெல்லும்போது ஒட்டகம் தனது சொந்த இரத்தத்தையும் உறிஞ்சுகிறது. ஒட்டகம் சாப்பிடும் முட்கள் ஒட்டகத்தின் நாக்கை வெட்டுகின்றன, எனவே ஒட்டகத்தின் வாய்க்குள் இரத்தம் வரத் தொடங்குகிறது. புதிய இரத்தத்துடன் கலந்த முட்கள் முட்டாள்தனமான ஒட்டகத்திற்கு ஒரு சுவையை உருவாக்குகின்றன, எனவே அது முள் உண்ணும் பழக்கத்தை தவறாக இன்பம் என்று நினைத்து அனுபவிக்கிறது. இதேபோல், பெரிய வணிக அதிபர்கள், வெவ்வேறு வழிகளில் மற்றும் கேள்விக்குரிய வழிமுறைகளால் பணம் சம்பாதிக்க மிகவும் கடினமாக உழைக்கும் தொழிலதிபர்கள், தங்கள் செயலின் முள் விளைவை தங்கள் சொந்த இரத்தத்துடன் கலக்கிறார்கள். ஆகவே பாகவதம் இந்த நோயுற்றவர்களைக் ஒட்டகங்களுடன் சேர்த்துக் கொண்டுள்ளது.
பிரபுபாதா: பணம் சம்பாதிப்பதற்கும், இன்பம் பெறுவதற்கும் அவர்கள் எத்தனை ஆபத்துக்களை எதிர் நோக்குகிறார்கள். திருடர்கள், கொள்ளையர்கள், அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். அவர்கள் திருடச் செல்கிறார்கள், ஒரு மனிதனின் வீட்டிற்குச் செல்கிறார்கள், "அவர் வந்துவிட்டார்" என்று தெரிந்தவுடன், வீட்டின் உரிமையாளரான அந்த மனிதன் உடனடியாக அவரைச் சுடக்கூடும் என்று அறியப்படுகிறது. அந்த ஆபத்து அவர் வைக்கும் பணயம். எனவே கொள்ளைக்காரர் மற்றும் திருடர்கள் மட்டுமல்ல, நாம் அனைவரும் கூட. இது "பதம் பதம் யத விபதாம் "(ஸ்ரீ பா 10.14. 58), என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடியிலும் ஆபத்து உள்ளது. ஒவ்வொரு அடியிலும். நம் மோட்டார் கார்களை மிக வேகமாக, எழுபது மைல், நூறு மைல் வேகத்தில் இயக்குகிறோம், ஆனால் எந்த நேரமும் பெரும் ஆபத்து ஏற்படலாம். எனவே உண்மையில் பொருள் வாழ்வில் எந்த அமைதியும் இருக்க முடியாது. அது சாத்தியமில்லை. ஸமாச்ரிதா ஏ பத பல்லவ பிளவம் (ஸ்ரீ பா 10.14.58). ஆகவே நாம் பகவானின் தாமரை பாதங்களில் அடைக்கலம் அடைய வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க, நாம் அமைதியாக இருக்க விரும்பினால், இதுதான் ஒரே வழி.