TA/Prabhupada 0776 - நான் நாயாக மாறினால் என்ன தவறு? கல்வியின் விளைவு இதுவே



Lecture on SB 6.1.12 -- Los Angeles, June 25, 1975

பரிந்துரையானது அதயோ வ்யாதய: மூன்று வகையான பரிதாப நிலை உள்ளது-அனைவருக்கும், ஒரு குறிப்பிட்ட நபருக்கு அல்ல. அத்யாத்மிக, அதிபௌதிக, அதிதைவிக. இந்த ஜட உடலைப் பெற்றவுடனேயே, நீங்கள் கஷ்டப்பட வேண்டியிருக்கும். எனவே இந்த துன்பத்தை நீங்கள் நிறுத்த விரும்பினால், நீங்கள் ஒழுங்குமுறையான வாழ்க்கை வாழ வேண்டும். ஒழுங்குமுறை வாழ்க்கை அடுத்த வரியில் பரிந்துரைக்கப்படுகிறது:

தபஸா ப்ரஹ்மசர்யேண
ஷமேன ச தமேன ச
த்யாகேன ஸத்ய-ஷௌசாப்யம்
யமேன நியமேன வா
(ஸ்ரீ.பா 6.1.13)

இவை மனிதனின் பரிந்துரைக்கப்பட்ட கடமைகள். பரிந்துரைக்கப்பட்ட கடமைகள் யாவை? முதலில் பரிந்துரைக்கப்பட்ட கடமை தபஸா: அவர்கள் கடினமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தான் மனித வாழ்க்கை. அது எல்லா இடங்களிலும் பரிந்துரைக்கப்படுகிறது. ருஷபதேவ பரிந்துரைத்தார், தபோ திவ்யம் புத்ரகா யேன ஷுத்த்யேத் ஸத்த்வ: "என் அன்பான சிறுவர்களே, பூனைகள், நாய்கள் மற்றும் பன்றிகளைப் போல வாழ வேண்டாம்" என்று அவர் அறிவுறுத்தினார். நாயம் தேஹோ தேஹ-பாஜாம் ந்ருலோகே கஷ்டான் காமான் அர்ஹதே விட்-புஜாம் யே (ஸ்ரீ.பா.5.5.1) "நான் கடினமாக உழைக்கவில்லை என்றால், நான் எப்படி என் உணர்வுகளை பூர்த்தி செய்வேன்? இரவில் எனக்கு இந்த போதை இருக்க வேண்டும், இந்த பெண், இந்த கிளப், இது ... நான் கடினமாக உழைக்கவில்லை என்றால், இந்த இன்பத்தை நான் எவ்வாறு பெறுவேன்? "

எனவே ருஷபதேவ கூறுகிறார், "இந்த வகையான இன்பம் பன்றிகளுக்கு கிடைக்கிறது. இது மிகவும் நல்ல வகை இன்பம் அல்ல, உணர்வு திருப்தி." நாயம் தேஹோ தேஹ-பாஜாம் ந்ருலோகே கஷ்டான் காமான் அர்ஹதே விட்-புஜாம் யே. விட்-புஜாம் என்றால் மலம் உண்பவர். எனவே அவர்களும் மலம் சாப்பிட்டு மகிழ்கிறார்கள், தாய், சகோதரி என்று பொருட்படுத்தாமல், எந்த பாகுபாடும் இல்லாமல், உடலுறவு கொள்வது. எனவே நாய்கள் மற்றும் பன்றிகள் மத்தியில் இந்த வகையான உணர்வு திருப்தி நாகரிகம் உள்ளது, ஆனால் மனித வாழ்க்கை அதற்காக அல்ல. மனித வாழ்க்கை என்பது தபஸ்யா, கட்டுப்பாடு கொண்டிருத்தல், இதனால் மனித வாழ்க்கை, உங்கள் மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறப்பை நிறுத்த முடியும் உங்கள் நித்திய ஜீவனுக்கு வந்து, ஆனந்தமான நித்திய ஜீவனை அனுபவிக்கலாம். அதுவே வாழ்க்கையின் நோக்கம். "பரவாயில்லை" என்பது அல்ல. கல்வி என்பது ஒரு பல்கலைக்கழக மாணவரிடம், அவருக்கு அறிவிக்கப்பட்டால், "நீங்கள் பொறுப்பற்ற முறையில் வாழ்ந்தால், அடுத்த வாழ்க்கையில் நீங்கள் நாயாக மாறலாம்," எனவே அவர்கள், "நான் ஒரு நாயாக மாறினால் என்ன தவறு?" என்கிறார்கள்(சிரிப்பு) இது கல்வியின் விளைவாகும். அவர் கவலைப்படவில்லை. "நான் ஒரு நாயின் உயிரைப் பெற்றால், தெருவில் என் பாலியல் வாழ்க்கைக்கு எனக்கு எந்த தடையும் இருக்காது" என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார். அவ்வளவுதான். அவர் அதை முன்னேற்றம் என்று நினைக்கிறார். "இப்போது கட்டுப்பாடில்லாமல் நான் தெருவில் பாலியல் வாழ்க்கையைப் பெற்றால் ..." அவர்கள் படிப்படியாக வருகிறார்கள், அந்த முன்னேற்றம்.

எனவே இதுதான் நிலை. எனவே அவர்கள் அடுத்த பிறப்பை பற்றி நம்பவில்லை, பூனைகள் மற்றும் நாய்களின் வாழ்க்கையைப் பற்றி என்ன பேசுவது. "கருத்தில் கொள்ளாதே." எல்லாம் மிகவும் இருட்டாக இருக்கிறது. எனவே, நாம் கிருஷ்ண பக்தி கொள்ளாவிட்டால், மனித நாகரிகம் அழிந்து போகிறது. அது மனித நாகரிகம் அல்ல. மனித நாகரிகம் என்பது பொறுப்பான வாழ்க்கை. உண்மையில், நாம் கல்வி கற்கிறோம், நாம் பள்ளிக்குச் செல்கிறோம், கல்லூரிக்குச் செல்கிறோம், பொறுப்புள்ள மனிதராக ஆவதற்காக. எனவே இந்த பொறுப்பு இருக்க வேண்டும், "இந்த பிறப்பை மீண்டும் மீண்டும் ஏற்படாமல் செய்வது எப்படி." பல இடங்களில் இது அறிவுறுத்தப்படுகிறது. அதுதான் மனித வாழ்க்கையின் ஒரே நோக்கம். புனர்-ஜன்ம-ஜயாய