TA/Prabhupada 0778 - மனித சமுதாயத்திற்கு அளிக்கப்படும் மிகப்பெரிய நன்கொடை அறிவே ஆகும்
Lecture on SB 6.1.17 -- Denver, June 30, 1975
நிதாஇ : "இந்த பௌதிக உலகில், தூய்மையான பக்தர்களின் பாதையைப் பின்பற்றி அவர்கள் நன்னடத்தை கொண்டவர்கள் மற்றும் முதல் தர தகுதிகளையும் கொண்டு அவர்கள் நாராயணாவின் சேவைக்கு முழுமையாக அழைத்துச் செல்லப்பட்டதன் காரணமாக அவர்களின் வாழ்க்கையும் ஆத்மாவும் நிச்சயமாக மிகவும் புனிதமானவை எந்த பயமும் இல்லாமல், சாஸ்திரங்களினால் அங்கீகரிக்கப்பட்டது. "
பிரபுபாதர்:
- ஸத்ரீசீனோ ஹ்யயம் லோகே
- பந்தா: க்ஷேமோ 'குதோ-பய:
- ஸுஷீலா: ஸாதவோ யத்ர
- நாராயண-பராயணா:
எனவே பக்தர்களின் சங்கம் என்று சாஸ்திரம் கூறுகிறது ... நாராயண-பராயணா: என்றால் பக்தர்கள் என்று பொருள். நாராயணா-பாரா: நாராயணாவை வாழ்க்கையின் இறுதி இலக்காக எடுத்தவர். நாராயணா, கிருஷ்ணர், விஷ்ணு - இவர்கள் ஒரே தத்வா, விஷ்ணு-தத்வா. எனவே மக்களுக்கு தெரியாது நாராயணா அல்லது விஷ்ணு அல்லது கிருஷ்ணரை வணங்கும் நிலையை அணுகுவதற்கு இது மிகவும் உயர்ந்த மற்றும், உறுதிப்படுத்தப்பட்ட தளம் என்று. நாம் காப்பீட்டைப் பெறுவது போலவே, இது உறுதி செய்யப்படுகிறது. யாரால் உறுதி கொடுக்கப்பட்டது? கிருஷ்ணரால் உறுதி கொடுக்கப்பட்டது கிருஷ்ணர் உறுதி கொடுக்கிறார் அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி (ப.கீ 18.66). கௌந்தேய ப்ரதிஜானீஹி ந மே பக்த: ப்ரணஷ்யதி (ப.கீ 9.31) அபி சேத் ஸுதுராசாரோ பஜதே மாம் அனன்ய-பாக், ஸாதுர் ஏவ ஸ மன்... (ப.கீ 9.30) பல உறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாராயண-பரா. கிருஷ்ணர் தனிப்பட்ட முறையில் "நான் உன்னைப் பாதுகாப்பேன்" என்று கூறுகிறார். பாவ காரியங்கள், அறியாமை காரணமாக மக்கள் அவதிப்படுகிறார்கள். அறியாமையால், அவர்கள் பாவ காரியங்கள் செய்கிறார்கள், பாவ காரியங்கள் எதிர் வினை செய்கின்றன. அறியாத ஒரு குழந்தையைப் போலவே, அவர் எரியும் நெருப்பைத் தொடுகிறார் அது கையை எரிக்கிறது, அவர் துன்பப்படுகிறார். "குழந்தை அப்பாவி, தீ சுட்டது" என்று நீங்கள் கூற முடியாது. இல்லை. இது இயற்கையின் விதி. அறியாமை. எனவே பாவச் செயல்கள் அறியாமையால் செய்யப்படுகின்றன. எனவே ஒருவர் அறிவை பெற்று இருக்க வேண்டும். சட்டத்தின் அறியாமைக்கு அனுமதி கிடையாது. நீங்கள் நீதிமன்றத்திற்குச் சென்று, "ஐயா, எனக்கு கஷ்டம் வரும் என்று எனக்குத் தெரியவில்லை, நான் திருடியதால் ஆறு மாதங்கள் சிறைக்கு செல்ல வேண்டும் என்று. இது எனக்குத் தெரியாது ..." செய்தது தெரிந்தோ அல்லது தெரியாமலோ, நீங்கள் சிறைக்குச் செல்ல தான் வேண்டும்.
எனவே மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு அறிவு. அவர்களை அறியாமையில், இருளில் வைக்க அது மனித சமூகம் அல்ல, அது பூனைகள் மற்றும் நாய்கள் ... அவர்கள் அறியாமையில் இருப்பதால், யாரும் அவைகளுக்கு அறிவைக் கொடுக்க முடியாது, அவைகளால் அறிவை பெற்று கொள்ளவும் முடியாது. எனவே மனித சமுதாயத்தில் அறிவைக் கொடுப்பதற்கான நிறுவனம் உள்ளது. அதுவே மிகப்பெரிய பங்களிப்பு. அந்த அறிவு, உயர்ந்த அறிவு, வேதங்களில் உள்ளது. வேதைஷ் ச ஸர்வை: (ப.கீ 15.15). மற்றும் அனைத்து வேதங்களும் உறுதி செய்கின்றன, கடவுள் என்ன என்பதை ஒருவர் அறிந்து கொள்ள வேண்டும். அது விரும்பப்படுகிறது. (பக்கத்தில் :) சத்தம் செய்யாதீர்கள். வேதைஷ் ச ஸர்வை. மக்களுக்கு அது தெரியாது. இந்த பௌதிக உலகத்திற்கு, உண்மையான அறிவு என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. உணர்வு திருப்திக்காக அவர்கள் தற்காலிக விஷயங்களில் ஓய்வில்லாமல் இருக்கிறார்கள், ஆனால் அறிவின் உண்மையான குறிக்கோள் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. ந தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும் (ஸ்ரீ.பா 7.5.31): அறிவின் குறிக்கோள், விஷ்ணுவை, கடவுளை அறிவது. அது அறிவின் குறிக்கோள். அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா. ஜீவஸ்ய தத்த்வ-ஜிஜ்ஞாஸா (ஸ்ரீ.பா 1.2.10) இந்த வாழ்க்கை, மனிதனின் வாழ்க்கை, முழுமையான உண்மையை புரிந்து கொள்வதற்காகவே. அது தான் வாழ்க்கை. முழுமையான உண்மையை புரிந்து கொள்ள முயற்சிக்காமல், நாம் ஓய்வின்றி இருந்தால், எப்படி கொஞ்சம் வசதியாக சாப்பிடலாம், எப்படி கொஞ்சம் வசதியாக தூங்குவது அல்லது கொஞ்சம் வசதியாக உடலுறவு கொள்வது எப்படி, இவை விலங்கு நடவடிக்கைகள். இவை விலங்கு நடவடிக்கைகள். மனித செயல்பாடு என்றால் கடவுள் என்றால் என்ன என்பதை அறிவது. அது மனித செயல்பாடு. ந தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும் துராஷயா யே பஹிர்-அர்த-மானின: (ஸ்ரீ.பா 7.5.31) இதை அறியாமல், அவர்கள் இருப்புக்காக போராடுகிறார்கள் வெளிப்புற ஆற்றலை சரிசெய்வதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள், பஹிர்-அர்த-மானின:. மற்றும் மக்கள், தலைவர்கள், அந்தா யதாந்தைர் உபனீயமானா:(ஸ்ரீ.பா7.5.31) பெரிய, பெரிய விஞ்ஞானிகள், தத்துவஞானியிடம், "வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?" என்று கேளுங்கள். அவர்களுக்கு தெரியாது. அவர்கள் கோட்பாடு மட்டும் செய்கிறார்கள், அவ்வளவுதான். கடவுளைப் புரிந்துகொள்வதே வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள்.