TA/Prabhupada 0793 - அறிவுறுத்தலின் இடையே வித்தியாசமில்லை, ஆகையால் குரு ஒருவரே
Lecture What is a Guru? -- London, August 22, 1973
எனவே குருவினுடைய வேலை, ஞான விளக்கை ஏந்தி, அதனை அறியாமையில் உள்ள அல்லது அறியாமை இருளில் உள்ள தனது சீடர்களின் முன் வைத்து, அவனை அறியாமையின் அல்லது இருளின் துன்பங்களிலிருந்து காப்பது தான். இதுதான் குருவின் வேலை.
இன்னொரு ஸ்லோகம் கூறுகிறது,
- தத்3-விஜ்ஞானார்த2ம்' ஸ கு3ரும் ஏவாபி4க3ச்சே2த்
- ஸமித்-பாணி: ஷ்2ரோத்ரியம்' ப்3ரஹ்ம-னிஷ்ட2ம்
- (மு.உ1.2.12)
இதுதான் வேதங்களின் கூற்று. குரு அவசியம் தேவையா என்று யாரோ ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆம், கட்டாயம் தேவை. அதுதான் வேதங்களின் கூற்று. வேதங்கள் என்று கூறுகிறது, தத்3-விஜ்ஞானார்த2ம்'. தத்3- விஜ்ஞான என்றால் ஆன்மீக அறிவு. ஆன்மீக அறிவு; ஆன்மீக அறிவைப் பெறுவதற்காக. தத்3-விஜ்ஞானார்த2ம்'. ஸ என்றால் ஒன்று; குரும் ஏவ - ஏவ என்றால் கட்டாயம் . குரு --ஒரு குருவிடம். குருவிடம் கட்டாயம் செல்ல வேண்டும். ஏதோவொரு ஒரு குரு அல்ல. "குரு." காரணம், நம்முடைய ரேவதி நந்தன மகாராஜாவால் விளக்கப்பட்டது போல குருவானவர் சீட பரம்பரையில் வருகிறார். வியாச தேவர் 5000 வருடத்திற்கு முன் என்ன உபதேசித்தாரோ, அல்லது கிருஷ்ணர் உபதேசித்தாரோ, அதையே நாமும் உபதேசிக்கிறோம். எனவே உபதேசங்களில் எந்த வித்தியாசமும் இல்லை. எனவே குரு ஒருவர் தான். நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆச்சாரியார்கள் வந்து போயிருந்தாலும், செய்தி ஒன்றுதான். எனவே குரு இரண்டு பேராக இருக்க முடியாது. உண்மையான குரு வேறுபடுத்தி பேசமாட்டார். சில குருமார்கள், "என்னுடைய கருத்து, இது போல் செய்யலாம்" என்று கூறலாம். மேலும் வேறு சிலர், " என்னுடைய கருத்தில் இது போல் நீ செய்யலாம்" என்று கூறலாம். அவர்கள் உண்மையில் குரு அல்ல. அவர்கள் அயோக்கியர்கள் . குருவுக்கு சொந்தமான கருத்து கிடையாது. குருவுக்கு ஒரே ஒரு கருத்துதான், கிருஷ்ணரால் அல்லது வியாச தேவரால் அல்லது நாரதரால் வெளிப்படுத்தப்பட்ட அதே கருத்துதான். அல்லது அர்ஜுனரால் அல்லது ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவினால் அல்லது கோஸ்வாமிகளால். அதே விஷயத்தை நீங்கள் காணலாம். 5000 வருடங்களுக்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையை கூறினார். மேலும் வியாச தேவர் அதனை எழுதினார், பதிவு செய்தார். வியாச தேவர் "இது என்னுடைய கருத்து" என்று கூறவில்லை. வியாச தேவர், "ஸ்ரீ பகவான் உவாச: நான் எழுதுவது, பரம புருஷ பகவானால் பேசப்பட்டது" என்று எழுதுகிறார். அவர் தன்னுடைய கருத்துக்களை கூறுவதில்லை. ஸ்ரீ பகவான் உவாச. எனவேதான் அவர் குரு. அவர் கிருஷ்ணருடைய வார்த்தைகளை தவறாக சித்தரிக்கவில்லை. அவர் உள்ளது உள்ளபடி கொடுக்கிறார். ஒரு பியூனை போல. யாராவது உங்களுக்கு ஒரு கடிதம் எழுதி, ஒரு பியூன் உங்களுக்கு அந்த கடிதத்தை அளிக்கிறார். அதனால் அவர் அந்த கடிதத்தை திருத்தவோ, மாற்றியமைக்கவோ அல்லது சேர்க்கவோ செய்யலாம் என்று பொருளல்ல. இல்லை. அதை அவர் அப்படியே அளிப்பார். அதுதான் அவருடைய கடமை. அப்போதுதான் அவர் குரு. அவர் நேர்மையானவர். அதைப்போலவே குருவும் இரண்டு பேராக இருக்க முடியாது. நினைவில் கொள்ளுங்கள். நபர் வேண்டுமானாலும் வேறுபடலாம். ஆனால் செய்தி ஒன்றுதான். எனவே குரு ஒருவர் தான்