TA/Prabhupada 0794 - முட்டாள் குரு ‘எதையாவது உண்டு எதையாவது செய்’ என்று கூறுவார்



Lecture on BG 2.17 -- London, August 23, 1973

இந்த கலியுகம், பக்தர்கள் என்று அழைக்கப்படுபவர்களையும், தாக்கும் அளவிற்கு வலிமையாக உள்ளது. கலியுகம் மிகவும் வலிமையானது. எனவேதான் சைதன்ய மகாபிரபு பரிந்துரைத்துள்ளது என்னவென்றால், நீங்கள் உங்களை காப்பாற்றிக் கொள்ள விரும்பினால், அமிர்தத்தின் நிலையை ஏற்றுக் கொள்ள விரும்பினால், உங்களுக்கு இதில் ஆர்வம் இருந்தால்...... யாருக்கும் ஆர்வமில்லை. ஸ அம்ரு'தத்வாய கல்பதே என்று கிருஷ்ணர் கூறுகிறார் (BG 2.15). நான் எப்படி மரணமற்ற தன்மையை அடைவது : இதுதான் வாழ்க்கையின் குறிக்கோள். நான் எப்படி வாழ்வின் நான்கு துன்பகரமான நிலைக்கு உட்படாமல் இருப்பது- பிறப்பு, இறப்பு, முதுமை, நோய். யாரும் இதனை முக்கியமாக கருதுவது இல்லை. அவர்கள் மிகவும் மந்தமாக இருக்கிறார்கள். எனவேதான் அவர்கள் மந்த என்று குறிப்பிடப் பட்டுள்ளனர் மந்த என்றால், மிகவும் மோசமானது, அதாவது வாழ்வில் குறிக்கோள் இல்லாத படி அயோக்கியர்களாக இருப்பது. அவர்களுக்கு வாழ்வின் குறிக்கோள் என்ன என்று தெரியாது. மந்த. மந்த என்றால் மோசமானது. மேலும் ஸுமந்த3-மதய:. மேலும் சிலர், மிகுந்த தர்மவானாக சிறிது அங்கீகரிக்கப் பட்டாலும், அவன் ஏதாவது ஒரு அயோக்கியனை குருவாக, மாய வித்தைகளின் நிபுணரை ஏற்றுக் கொள்வான். மேலும் எல்லாவற்றையும் சாப்பிட்டு, எல்லாவற்றையும் செய்து ஒரு ஆன்மீகவாதியாகி, பிறகு அவனுடைய அயோக்கிய குரு கூறுவான், " ஆம், நீ எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சாப்பாட்டுக்கும் சமயத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை." இது தான் நடந்து கொண்டிருக்கிறது. கிறிஸ்தவர்கள், மிகத் தெளிவாக " கொல்லாதிருப்பாயாக" என்று கூறப்பட்டிருந்தாலும், கொல்கிறார்கள். இருந்தும் அவர்கள் " நான் ஒரு கிறிஸ்தவன்" என்பதில் கர்வம் கொள்கிறார்கள். மேலும் எந்த வகையான கிறிஸ்தவன் நீங்கள்? நீங்கள் கிறிஸ்துவின் ஆணையை எப்போதும் மீறுகிறீர்கள், ஆயினும் நீங்கள் கிறிஸ்தவனா?

எனவே இதெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கிறஸ்தவனாக இருந்தாலும், முகமதியனாக இருந்தாலும், இந்துவாக இருந்தாலும், எல்லாம் பெயரளவிற்குத்தான். எல்லோருமே அயோக்கியர்கள் ஆகிவிட்டார்கள். அவ்வளவுதான். இதுதான் கலியுகம். ஸுமந்த3-மதய: (SB 1.1.10). அவர்கள் தங்களுடைய சொந்த கற்பனையான சமயக் கொள்கைகளை உருவாக்கிக் கொண்டார்கள். எனவேதான் அவை கண்டிக்கப்படுகின்றன. இதனை அவர்கள் அறிவதில்லை. படுத்த முடியவில்லை. மிக எளிமையான விஷயம் ஆகிய, சிறிதளவு முயற்சி சிறிது தவத்தால் புலன்களை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மிகுந்த துரதிர்ஷ்டசாலிகள் ஆகிவிட்டார்கள். யோக முறை என்பது புலன்களை கட்டுப்படுத்த தான். யோகமுறை சில மாய வித்தைகளை செய்து காட்டுவதற்காக அல்ல. மாய வித்தை காரன் கூட மாய வித்தைகளை செய்து காட்டுவான். நாம் ஒரு மாய வித்தைகாரனை பார்த்திருக்கிறோம், உடனடியாக அவன் நிறைய காசுகளை உருவாக்கினான் - டாங் டாங் டாங் டாங். அடுத்த நொடி எல்லாமே முடிந்தது. ஆக வாழ்க்கையின் குறிக்கோளை அவர்கள் தவற விட்டு விடுகிறார்கள் மந்தா:3 ஸுமந்த3-மதய:. ஏன்? மந்த3-பா4க்3யா:. அவர்கள் துரதிர்ஷ்டசாலிகள். எனவே நீங்கள் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள். நம்முடைய கிருஷ்ண பக்தி இயக்கத்தில் கூட, நான் விழிப்படையச் செய்ய முயற்சிக்கிறோம். இருந்தும் புலன் இன்பம் துய்ப்பதை, விட முடியாத அளவுக்கு அவர்கள் துரதிர்ஷ்டசாலி களாக உள்ளனர். மிகுந்த துரதிர்ஷ்டசாலிகள், மிகுந்த துரதிர்ஷ்டசாலிகள். திரும்பத் திரும்ப நாம் நம்முடைய ரத்தத்தை சிந்தி கூறுகிறோம் "இதனைச் செய்யாதீர்கள்" _ இருந்தும் அவர்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் தூக்கத்தைக் கூட விட முடியவில்லை. மிகுந்த கண்டனத்திற்கு உரியவர்கள். கலி-யுகம். மந்தா:3 ஸுமந்த3-மதய:.