TA/Prabhupada 0797 - மக்களை கிருஷ்ண உணர்வுக்குள் கொன்டுவர, கிருஷ்ணர் சார்பாக உபதேசிப்பவர்கள் பெரும் வீரர்

From Vanipedia


மக்களை கிருஷ்ண உணர்வுக்குள் கொன்டுவர, கிருஷ்ணர் சார்பாக உபதேசிப்பவர்கள் பெரும் வீரர்களாவர்
- Prabhupāda 0797


Arrival Address -- Vrndavana, September 3, 1976

பிரபுபாதா : வேத ஞானம் என்பது வெளிப்படுத்தப்படுவது. வேத ஞானத்தை, பௌதிக அறிவாற்றலினாலோ, அல்லது இலக்கணங்களை படிப்பதாலோ புரிந்து கொள்ள முடியாது. இல்லை. அங்கீகரிக்கப்பட்ட குருவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள ஒருவனுக்குத்தான் வேத ஞானத்தை புரிந்து கொள்ளுதல் சாத்தியப்படும். குரு என்றால் கிருஷ்ணரின் பிரதிநிதி என்று பொருள் - கிருஷ்ணர் மற்றும் அவரது பிரதிநிதி. குரு என்றால் கிருஷ்ணருடைய அங்கீகரிக்கப்பட்ட சேவகன் என்பதை நாம் பலமுறை விவாதித்து உள்ளோம். குரு என்றால் மாயவித்தை காரனோ அல்லது ஏமாற்று வித்தைக் காரனோ அல்ல. அவன் குரு அல்ல. குரு என்றால்.... எப்படி மிகச் சுலபமாக குரு ஆவது என்பது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவினால் விளக்கப்பட்டுள்ளது. அவர் அனைவரையும், குறிப்பாக இந்தியாவில் பிறந்தவர்களை, பா4ரத பூ4மிதே மனுஷ்ய-ஜன்ம ஹைல யார (சை.ச ஆதி 9.41). குறிப்பாக. ஏனெனில் பாரத நாட்டைச் சேர்ந்தவர்களாகிய, இந்தியர்களாகிய நாம், இந்த உலகம் முழுவதற்கும் குரு ஆகக்கூடிய வாய்ப்பினை உடையவர்கள். நமக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. காரணம், நம்மிடம் இலக்கியங்கள், வேத இலக்கியங்கள் உள்ளது, குறிப்பாக, கிருஷ்ணரால் உரைக்கப் பட்டுள்ள பகவத் கீதை. நாம் வாழ்வின் குறிக்கோள் என்ன என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்து, மேலும் அதனை உலகம் முழுக்க பிரச்சாரம் செய்தோமானால், பிறகு நீங்களும் குரு ஆகலாம். ஆனால், நீங்கள் பெயரளவு யோகிகள், சுவாமி, அறிஞர் என்ற பெயரில் மற்றவர்களை ஏமாற்ற விரும்பினால், அது உங்களை குரு ஆக்காது. குரு.... சைதன்ய மகாபிரபு நீங்கள், எல்லா இந்தியர்களும், பாரத நாட்டில் பிறந்த எல்லோரையும் குரு ஆகுமாறு கூறுகிறார். ஆமார ஆஜ்ஞாய கு3ரு ஹஞா தார ஏஇ தே3ஷ2 (சை.சரி மத்ய 7.128). நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே. மேலும் நான் எப்படி குரு ஆவது?. யாரே தே3க2 தாரே கஹ க்ரு'ஷ்ண உபதே3ஷ2. அவ்வளவுதான்.

எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்றால் சைதன்ய மகாபிரபுவின் அறிவுரைகளை பின்பற்றுவது என்று பொருள். மேலும் சைதன்ய மகாபிரபு வின் அறிவுரை இதுதான், கிருஷ்ணரின் உபதேசங்களை பிரச்சாரம் செய்வது. கிருஷ்ணரின் உபதேசம் இது தான் : ந மாம்' து3ஷ்க்ரு'தினோ மூடா:4 ப்ரபத்3யந்தே நராத4மா: (ப.கீ 7.15). இது நம்மால் உருவாக்கப்பட்ட வார்த்தைகள் அல்ல. இது கிருஷ்ணரின் உபதேசம். அதாவது, "என்னிடம் சரணடையாத எவரும், துஷ்க்ரு'தினர்கள் - 4 வகையினருள் ஒருவராக உடனடியாகக் கருதப்படுவர்" அவர் யார்? து3ஷ்க்ரு'தின, மூடா:4, நராத4மா:, மாயயாபஹ்ரு'த-ஜ்ஞானா, ஆஸுரம்' பா4வம் ஆஷ்2ரிதா:. ஆக இது மிக எளிமையான விஷயம். யார் மூடர்கள்? கிருஷ்ணனிடம் சரணடையாத ஒருவர், கிருஷ்ணர் என்றால் என்ன என்று புரிந்து கொள்ளாத ஒருவர், அவன், துஷ்க்ருதினனாக, அதாவது பாவியாக அல்லது அயோக்கியனாக இருப்பான்; நராதம, அதாவது மனிதரின் கீழானவன் மேலும் மாயயாபஹ்ரு'த-ஜ்ஞானா, மேலும் அவனது பெயரளவு கல்வியும் பட்டங்களும் பயனற்றவை காரணம், உண்மையான ஞானம் அவனிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது. மாயயாபஹ்ரு'த-ஜ்ஞானா. எனவே போரிட எந்த காரணமும் இல்லை..... ஆனால் இந்த மக்கள் பொதுவாக எத்தகையவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அவர்கள், இந்த நான்கு வகையான மனிதர்களுள் ஒன்றாக உள்ளனர்.

எனவே நாம் அவர்களை எதிர்கொள்ள வேண்டும். நம்முடைய கிருஷ்ண பக்தி இயக்கம் இத்தகைய அயோக்கியர்களையும், இந்த துஷ்க்ருதினர்களையும், இந்தநராதமர்களையும் எதிர்கொண்டு, அவர்கள் கிருஷ்ண உணர்வுடையவர்கள் ஆகுமாறு வேண்டுகிறது. இதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம். ஒரு தனிமையான இடத்தில் சோம்பேறியாக அமர்ந்து உங்களுடைய பெருந்தன்மையை காட்ட முடியாது. ஹரிதாஸ் தாகூரை போல ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என்று நகல் செய்ய முடியாது. இல்லை. நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். இதுதான் சைதன்ய மஹாபிரபு வின் ஆணை. ஆமார ஆஜ்ஞாய கு3ரு ஹஞா தார ஏஇ தே3ஷ2 (சை.சரி மத்ய 7.128). இதுதான் உண்மையில் சைதன்ய மகாபிரபுவை பின்பற்றுவதாகும். ஹரிதாசர் தாகூரை நகல் செய்வதல்ல. அது சாத்தியமில்லை. நீங்கள்... அதனை நீங்கள் மிக நன்றாக செய்தால் கூட, அது உங்களுடைய பாதுகாப்பிற்காகத் தான். நீங்கள் அதை நன்றாக செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், ஆனால் அது உங்களுடைய பாதுகாப்பிற்காக தான். ஆனால் பிறரது நன்மைக்காக அபாயகரமான நிலைகளை சந்திக்கும் ஒருவன், விரைவாகவே கிருஷ்ணரால் அங்கீகரிக்கப் படுகிறான்.

ந ச தஸ்மான் மனுஷ்யேஷு
கஷ்2சின் மே ப்ரிய-க்ரு'த்தம:
(ப.கீ 18.69)
ய இத3ம்' பரமம்' கு3ஹ்யம்'
மத்3-ப4க்தேஷ்வபி4தா4ஸ்யதி
(ப.கீ 18.68)

எனவே, ஒரு போராடும் வீரனைப் போல, நீங்களும் எதிர்கொண்டால்.... அவர்கள் நாட்டுக்காக ஆபத்தை எதிர் கொள்கிறார்கள். எனவே அவர்கள் அங்கீகரிக்கப் படுகிறார்கள். அதைப்போலவே பிரச்சாரம் செய்பவர்களும், - கிருஷ்ணருக்காக பிரச்சாரம் செய்கிறார்கள் கிருஷ்ண உணர்வை ஏற்றுக்கொள்ளும்படி மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களும் பெரும் வீரர்கள்தான்.

எனவே, குறிப்பாக ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் ஆகிய நீங்கள் எனக்கு உதவுவதால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனவே இந்த வழிமுறையை தொடர்ந்து செய்யுங்கள், மேலும் கிருஷ்ணரால் அங்கீகரிக்கப்பட இதுதான் மிக எளிமையான முறை. காரணம் , ந ச தஸ்மன் மனுஸ்யேஸு கஷ்2சின் மே ப்ரிய-க்ர்த்தம: (ப.கீ 18.69) என்று கிருஷ்ணர் கூறுகிறார். யார்? யார் கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்கிறார்களோ, அவர்கள். எனவே, நீங்கள் விருந்தாவனத்துக்கு வந்திருக்கிறீர்கள், மேலும் நீங்கள் பயணம் செய்து, பிரச்சாரம் செய்கிறீர்கள், எனவே உங்களுக்கு மிக்க நன்றி. எனவே நாம் நம்முடைய இந்த வாழ்க்கையை உலகம் முழுக்க கிருஷ்ண உணர்வை பரப்புவதற்காக அர்ப்பணிப்போம். மேலும் பிரச்சாரத்தில் இறந்தால் கூட கவலைப்படாதீர்கள், அதுவும்கூட பெருமைக்குரியதே.

மிக்க நன்றி.

பக்தர்கள் : ஜெய !